பெங்களூர் படுக்கை முறைகேடு: தேஜஸ்வி சூர்யா உடன் இருந்த பாஜக எம்எல்ஏ உதவியாளர் கைது !

பெங்களூரு தெற்கு பாராளுமன்ற உறுப்பினரும், பாஜகவின் இளைஞர் அணி தலைவருமான தேஜஸ்வி சூர்யா சில வாரங்களுக்கு முன்னர் கோவிட்-19 நோயாளிகளுக்கு புருஹத் பெங்களூரு மகாநகர பலிகே (BBMP)வின் படுக்கை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டி அங்கு பணிபுரியும் முஸ்லீம் ஊழியர்கள் தான் இந்த முறைகேட்டிற்கு காரணம் என எந்த ஆதாரமும் இல்லாமல் குற்றம் சாட்டி, 17 முஸ்லீம் ஊழியர்களின் பெயர்களை மட்டும் படித்து ட்விட்டர் பக்கத்தில் காணொளியை வெளியிடவே, இந்த விவகாரம் இந்திய அளவில் பரபரப்பை உண்டாக்கியது.

Advertisement

கிட்டத்தட்ட 203 ஊழியர்கள் ஷிப்ட் அடிப்படையில் பணிபுரியும் அந்த கோவிட் தொற்று நோயாளிகளுக்கு படுக்கைகள் ஒதுக்கீடு செய்யும் பிபிஎம்பி போர்ட்டலில் மோசடி இருப்பது அறியப்பட்டாலும் வெறும் முஸ்லீம் ஊழியர்களின் பெயர்களை மட்டுமே எதன் அடிப்படையில் தேஜஸ்வி சூர்யா குற்றம் சாட்டினார் என கண்டனங்கள் எழுந்தன.

குற்றச்சாட்டுகளை நிருபிக்க முடியாததால் இந்த விவகாரம் பாஜக மற்றும் தேஜஸ்வி சூர்யாவிற்கும் கடும் எதிர்ப்புகளை ஏற்படுத்தவே இரண்டு நாட்கள் கழித்து அந்த BBMP வார் ரூமிற்கு சென்ற தேஜஸ்வி சூர்யா, “உங்களுக்கு எதிராக தனிப்பட்ட முறையில் எனக்கு எதுவும் இல்லை, எனது இந்த செயலால் யாராவது அல்லது எந்தவொரு சமூகமும் பாதிக்கப்பட்டிருந்தால், அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் ” என அவர் கேட்டுக்கொண்டதாக நியூஸ் 18 ஊடகம் செய்தி வெளியிட்டது. ஆனால், சூர்யாவின் அலுவலகம் அதை மறுத்தது.

இது தொடர்பாக கோவிட் வார் அறைகளுக்கு தன்னார்வலர்களை பணியமர்த்திய நிறுவனமான கிரிஸ்டல் இன்போசிஸ்டம்ஸ் அண்ட் சர்வீசஸ்ஸின் திட்ட மேலாளர் சிவு நாயக் நியூஸ் 18 ஊடகத்திற்கு கூறியதாவது, ” இந்த விவகாரம் அரசியல்மயமாக்கியதால் கடந்த இரண்டு நாட்களாக கோவிட் தொடர்பான எங்கள் பணிகளை பாதித்தது. பணியாளர்களும் , அதிகாரிகளும் பாஜக தலைவர்களின் இந்த திடீர் வருகையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். சூர்யா வெளியிட்ட அந்த 17 முஸ்லீம் ஊழியர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் காரணமாக இப்போது அவர்களுக்கு எந்த வேலையும் வழங்கப்படவில்லை ” என தெரிவித்தார்.

Advertisement

இந்த முறைகேடு குறித்து சிசிபி விசாரணைக்கு முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா உத்தரவிட்டார். இந்த முறைகேடு தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பெங்களூரின் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பாபு எனப்படும் பாஜக எம்எல்ஏ சதீஷ் ரெட்டியின் முக்கிய உதவியாளரை கைது செய்தனர்.

Twitter link  

சதீஷ் ரெட்டி, கடந்த மே 4ம் தேதி எந்த ஒரு குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படாத 17 முஸ்லீம் ஊழியர்களின் பெயர்களை தேஜஸ்வி சூர்யா படிக்கும் போது உடன் இருந்தார். அப்போது பாஜக எம்எல்ஏ சதீஷ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஐஏஎஸ் அதிகாரி யஷ்வந்தை தாக்கினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக வருண் மற்றும் யஷ்வந்த் எனப்படும் சதீஷ் ரெட்டியின் கூட்டாளிகள் மேலும் இரண்டு பேரை பெங்களூர் போலீசார் கைது செய்துள்ளனர். இதில் வருண் கோவிட் வார் அறை ஹெல்ப்லைன் ஊழியர் ஆவார். இந்த வழக்கில் கைது செய்யப்பட மொத்த நபர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்து உள்ளது. இதில் ஒரு முக்கிய சந்தேக நபராக பாபு கருதப்படுகிறார். எனினும் சதீஷ் ரெட்டி இந்த மோசடிக்கான தன்னுடைய தொடர்புகளை மறுத்துள்ளார். மேலும், அவர் தனது தொகுதி மக்களுக்கு படுக்கைகளை மட்டுமே பெற முயற்சித்ததாகவும் கூறினார்.

மே மாத தொடக்கத்தில், கர்நாடகாவில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் பெங்களூரு போலீஸ் கமிஷனருக்கு சதீஷ் ரெட்டி ஆதரவாளர்கள் ஐஏஸ் அதிகாரியை கையாண்ட விதத்தை எதிர்த்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Links :

34-yr-old-with-links-to-bjp-mla-aide-two-others-arrested-over-bengaluru-bed-racket

34-yr-old-with-links-to-bjp-mla-aide-two-others-arrested-over-bengaluru-bed-racket

bengaluru-bed-scam-bjp-mla-satish-reddy-s-aide-arrested

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button