சிறந்த முதல்வர்களில் ஸ்டாலின் முதலிடமா.. யார் வெளியிட்டது ? இதற்கு முன் இருந்தது யார் தெரியுமா ?

சிறந்த 10 முதல்வருக்கான ஆய்வு முடிவு பட்டியலில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 68% பெற்று இந்திய அளவில் முதலிடமும், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் இரண்டாம் இடம் பிடித்துள்ளதாக தகவல் ஒன்று கட்சி ஆதரவாளர்களால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

Advertisement

இதற்காக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை வாழ்த்தும் விதமாக பல்வேறு புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றன. அதில் சில படங்களில் கிரௌட் விஸ்டம் (crowd wisdom) எனும் இணையதளம் நடத்திய ஆய்வு என்கிற விவரமும் இடம்பெற்றிருந்தது. எதன் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது, யார் வெளியிட்டது, இதற்கு முன் யாரெல்லாம் முதலிடத்தில் இருந்துள்ளார்கள் என்பதை பின்வருமாறு காணலாம்.

யார் நடத்திய ஆய்வு ?

புகைப்படங்களில் குறிப்பிட்டது போல Crowd Wisdom 360 இந்த ஆய்வை மேற்கொள்ளவில்லை. கிரௌட் விஸ்டம் இணையத்தளமானது பல்வேறு தலைப்புகளில் ஒரு நபரின் அறிவை சோதிக்கும் ஒரு விளையாட்டு இணையதளம். குய்ஸ்(quiz) வடிவில் பல்வேறு தலைப்புகளில் கேள்விகள் கேட்கப்பட்டு வாடிக்கையாளர்கள் குறிப்பிடும் விடைகள் மூலம் அவர்களது அறிவாற்றலை சோதிக்கும் ஒரு விளையாட்டு இணையதளமே இந்த Crowd Wisdom 360.

Advertisement

அந்த தளத்தில் “இந்தியாவின் சிறந்த முதல்வர்” எனும் தலைப்பில் வலைப்பதிவு ஒன்று இருந்தது. அதில் இந்த கருத்துக்கணிப்பை Ormax எனும் நிறுவனம் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. எனவே கருத்துக்கணிப்பை நடத்தியவர்கள் Ormax, Crowd Wisdom 360 அல்ல.

ஆர்மாக்ஸ் மீடியா(Ormax Media) :

2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆர்மாக்ஸ் மீடியா இந்திய ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்கு துறைக்கான நுண்ணறிவு ஆலோசனை நிறுவனமாக நிறுவப்பட்டது. இவர்கள் அரசியல், சினிமா என பிரபலமான தலைப்புகளின் கீழ் மாதம் மாதம் ஒரு கருத்துக்கணிப்பை வெளியிடுகிறார்கள்

“இந்த மாத பிரபல தமிழ் நடிகர்கள் யார்” , “சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி எது?” என்பது போன்ற பல தலைப்புகளில் இவர்கள் நடத்தும் கருத்துக்கணிப்புகள் தோராயமாக 1000 முதல் 2000 நபர்களுடன் தொலைபேசி மூலமாக நடத்தப்படுவதாக அவர்களின் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.

அரசியல் தளங்களில் மாதம் ஒரு முறை இந்திய முதல் அமைச்சர்களுக்கான கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுகிறது. இதை 2020 பிப்ரவரி முதலே தொடங்கி இருக்கிறார்கள்.

Twitter link | Archive link 

இதில் குறிப்பிட வேண்டிய செய்தி என்னவென்றால் இவர்கள் தங்களது அரசியல் தொடர்பான கருத்துக்கணிப்பில் “சிறந்த” எனும் வார்த்தையை உபயோகிப்பதில்லை “ஒப்புதல் மதிப்பீடு (approval rating) எனும் சொல்லாடலையே பயன்படுத்துகிறார்கள். அதாவது குறிப்பிட்ட முதல் அமைச்சரை மக்கள் ஒப்புக்கொள்கிறார்களா? என்பதின் அளவீடு. இதில் தான் 2021 ஜூன் மாதத்திற்கு 68% பெற்று ஸ்டாலின் முதலிடத்திலும், 67% மற்றும் 63% பெற்று முறையே பினராயி விஜயன் மற்றும் ஒடிசாவின் நவீன் பட்நாயக் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களில் உள்ளனர்.

முந்தைய கணக்கெடுப்புகளில் முன்னிலை வகித்தவர்கள் யார் யார்?

மே 2021 – பினராயி விஜயன்
ஏப்ரல் 2021 – நவீன் பட்நாயக்
மார்ச் 2021 – யோகி ஆதித்யநாத் (உத்தரபிரதேசம்)
ஜனவரி 2021 – யோகி ஆதித்யநாத் (உத்தரபிரதேசம்)

செப்டம்பர் மற்றும் நவம்பர் 2020 முதல் மார்ச் 2021 வரை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தே இவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் முதல் இடத்தில் இருந்துள்ளார். ஜூலை 2020ல் நவீன் பட்நாயக் இருந்துள்ளார்.

ஆர்மாக்ஸ் மீடியா முதல்வர்களுக்கு ஒப்புதல் மதிப்பீடு வெளியிடுவது போல் பிரதமருக்கும் முடிவுகளை வெளியிட்டு வருகிறது. டைம்ஸ் நவ் செய்தியும் ஆர்மாக்ஸ் மீடியா உடன் இணைந்து பிரதமர் குறித்து நடத்திய ஆய்வு முடிவுகளை வெளியிட்டு இருக்கிறது.

கடந்த ஆண்டில் இருந்து ஆர்மாக்ஸ் மீடியா எனும் நிறுவனம் முதலமைச்சர் ஒப்புதல் மதிப்பீடு (CM approval rating) எனும் தலைப்பில் இந்த முடிவுகளை மாதந்தோறும் வெளியிட்டு வருகிறது. இதில் பல முறை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் முதலிடத்தில் இருந்துள்ளார். 2021 ஜூன் மாதத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலிடம் பிடித்துள்ளார். இது ஆர்மாஸ் மீடியா வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவே, Crowd Wisdom உடையது அல்ல.

Links : 

Best Chief Minister in India: MK Stalin leads, Pinarayi Vijayan in 2nd

ormax-pm-and-cm-approval-ratings-an-explainer

Times now and ormax media survey 

Ormax media tweet 

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button