பாரத் கேஸ் செயலியில் தமிழ் மொழி இடம்பெறவில்லை !

பாரத் கேஸ் நிறுவனத்தின் ஆன்ட்ராய்டு செயலியில் தமிழ் மொழி இடம்பெறவில்லை என்கிற குற்றச்சாட்டை முன்வைத்து செயலியின் ஸ்க்ரீன்ஷார்ட்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியத்தின் பாரத் கேஸ் செயலியில் தமிழ் மொழி இடம்பெறாதது கண்டனத்தை பெற்று உள்ளது.
தமிழ் மொழி இடம்பெறவில்லை என்கிற பதிவுகளில் சிலர் செயலியில் தமிழ் மொழி இடம்பெற்று இருக்கிறது, தவறான தகவலை பகிர வேண்டாம் என மற்றொரு ஸ்க்ரீன்ஷார்ட்களை பகிர்ந்து வருகின்றனர்.
ஆனால், அந்த ஸ்க்ரீன்ஷார்ட் செயலியில் இடம்பெற்றது அல்ல, கூகுள் ப்லேஸ்டோரில் செயலி குறித்து இடம்பெறும் தகவல் உடன் வழங்கப்பட்டு இருக்கும் புகைப்படங்களே. பாரத் கேஸ் செயலியை டவுன்லோடு செய்து மொழி விருப்பத்தை தேர்வு செய்கையில் ” தமிழ் ” மொழி இடம்பெறவில்லை. உதாரணத்திற்காக காட்டப்பட்ட புகைப்படத்தில் தமிழ் இருக்கிறது, ஆனால் செயலியில் தமிழ் விருப்பம் இல்லை. 5 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் பாரத் கேஸ் செயலியை டவுன்லோடு செய்து உள்ளனர்.
Update :
பாரத் கேஸ் செயலியில் தமிழ் மொழி இருப்பதாக சிலர் யூடர்ன் முகநூல் பதிவின் கம்மெண்ட்டில்பதிவிட்டு வருகிறார்கள். ஆனால், பாரத் கேஸ் செயலியின் version 2.2.5-ல் தமிழ் மொழி இடம்பெறவில்லை. புதிதாக செயலியை டவுன்லோடு செய்து வாடிக்கையாளர் செல்போன் எண்ணை கொடுத்து பார்த்தும் கூட தமிழ் மொழி இடம்பெறவில்லை.