This article is from Oct 25, 2018

அரிதான புற்றுநோய் பாதித்த மகனை காப்பாற்ற போராடும் தந்தை !

திரு. செந்தில் குமார் அவர்கள் சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரில் இணைப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். மாணவர்களுக்கு திடமான மன நிலையுடன் பாடம் கற்பிப்பவரின் மனக் கவலை புற்றுநோய் பாதித்த தன் மகனை எப்படியாவது மீட்க வேண்டும் என்பது மட்டுமே. இணைப் பேராசிரியர் செந்தில் குமாரின் மகன் பாவனேஷ் நியோரோபிளாஸ்டோமா எனும் அரிதானப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

2015-ல் பாவனேஷ்க்கு ஏற்பட்ட கடுமையான கழுத்து வலிக் காரணமாக மேற்கொண்ட பரிசோதனையின் போதே இந்த அரிதான நியோரோபிளாஸ்டோமா புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. 8 வயதில் 14 கீமோதெரபி மற்றும் 2 முழுமையான அறுவை சிகிச்சை புவனேஷ்க்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.25 லட்சம் வரை மருத்துவ செலவை தன் குடும்பம் மற்றும் நண்பர்கள் உதவியுடன் சமாளித்தார்.

ஆனால், 2018-ல் அனைத்து சிகிச்சைக்கு பிறகும் புற்றுநோய் பாதிப்பு இன்னும் நீங்காமல் இருப்பது அறிய முடிந்தது. இதற்கான முழுமையான சிகிச்சை அளித்தால் மட்டுமே இந்த அரிதான நியோரோபிளாஸ்டோமா புற்றுநோயில் இருந்து சிறுவனை காப்பாற்ற முடியும் என அறிய நேர்ந்தது. சிறுவனுக்கு புற்றுநோய் இருப்பது இன்று வரை தெரியாது. கழுத்துவலி சரியானால் விளையாட செல்லலாமா என்கிறான் பாவனேஷ்.

ஆகையால், அதற்கு தகுந்த சிகிச்சையான Anti GD2 இம்யூனோ தெரபிக்கு உண்டான மருத்துவ செலவு மிக அதிகம் மற்றும் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளும் அரிது. மருத்துவமனைகள் பற்றி பல தேடல்களுக்கு பிறகு இதற்கு ஏற்ற சிகிச்சை அளிக்கக்கூடிய ஸ்பெயின் நாட்டில் உள்ள மருத்துவமனையில் Anti GD2 இம்யூனோ தெரபி அளிக்க உறுதி செய்துள்ளனர். எனினும், இதற்கான மருத்துவ செலவு 1.8 கோடியாகும்.

ஒரு சாதாரண இணைப் பேராசிரியரால் லட்சங்களில் ஆகும் செலவைக் கூட நண்பர்கள் உதவியுடன் சமாளிப்பது கடினம். கோடிக்கணக்கில் மருத்துவ செலவு என்பது அதிகமாக இருந்தாலும் தன் மகனை காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையில் போராடி வருகிறார்.

செய்திகள், சமூக வலைத்தளங்கள் மற்றும் Fund Raising மூலம் பாவனேஷ் சிகிச்சைக்கான மருத்துவ செலவு தொகை பெறப்படுகிறது. சிறுவனை காப்பாற்ற பலரும் உதவ கரம் கொடுக்க முன் வருகின்றனர். இதற்கு அக்டோபர் 30-ம் தேதி வரை கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இணைப் பேராசிரியர் திரு.செந்தில் குமாரின் வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்கள் பின்வருமாறு,

M செந்தில் குமார்
போன் : 9994520740
வங்கி கணக்கு : 8080811049701
வங்கி : YES BANK CMS
கணக்கு வைத்திருப்பவர் பெயர் : Senthil kumar  M
IFSC CODE : YESB0CMSNOC

Fund Raisinghttps://milaap.org/fundraisers/help-bhavanesh-cancer?fbclid=IwAR1pSk1Q6fKQ5uxU_x20kYcFuXM-gsb1GihmvjpPJ4TGit_CCiklAdY6148

சிகிச்சைக்கான நாட்கள் நெருங்குவதால் உதவ நினைப்பவர்கள் முடிந்த உதவியை அளியுங்கள் மற்றும் சிறுவனின் நிலைப் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள். பயனுள்ள தகவலின் பகிர்வு ஒரு உயிரை காக்க உதவும்.

Please complete the required fields.




Back to top button
loader