சுப்ரமணிய சுவாமி மீது பாய்ந்த வழக்கு அண்ணாமலை மீது பாயுமா ?.. ” Pariah ” என சொல்லலாமா !

நரேந்திர மோடி அவர்கள் இந்தியப் பிரதமராகி 8 ஆண்டுகள் நிறைவடைந்தது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிவிட்ட ட்விட்டர் பதிவில் பயன்படுத்திய வார்த்தை ட்விட்டர் தளத்தில் சர்ச்சையாக உருவெடுத்து உள்ளது.

Archive link  

மே 30-ம் தேதி பதிவிட்ட பதிவில், ” From a pariah to a ViswaGuru” என அண்ணாமலைப் பதிவிட்டு இருந்தார். இதையடுத்து, பாஜக தலைவர் அண்ணாமலை பறையர் சமூகத்தை இழிவுப்படுத்தி உள்ளதாக கண்டனப் பதிவுகள் வெளியாகத் துவங்கின.

விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னி அரசு, ” மூத்த பறையர்குடியை இழிவுபடுத்தும் அண்ணாமலை மன்னிப்பு கேட்கவேண்டும் ” என ட்விட்டரில் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து இருந்தார். மேலும், ட்விட்டர் தளத்தில் பலரும் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.

தன்னுடைய ட்வீட் பதிவு சர்ச்சையான பிறகு, ” கத்தியை விட நம் புத்தி கூர்மை என்று சொல்லுவார்கள். உங்களுக்காக ஒரு ஆங்கில – தமிழ் அகராதி வாங்கி அனுப்புகிறேன், நான் பதிவிட்ட வார்த்தையின் அர்த்தத்தை பார்க்கவும்” , ” pariah ” என்பதற்கு ஓர் அமைப்போ அல்லது நாடோ என மற்றவர்கள் விரும்பாத மற்றும் தவிர்க்கும் நபர் ” எனப் பொருள் என்று மெக்மில்லன் அகராதியைப் பதிவிட்டு இருந்தார்.

Archive link

ஆனால், pariah என்ற ஆங்கில வார்த்தை ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரியில் கூட ஒடுக்கப்பட்ட சமூகத்தையே குறிக்கிறது. மன்னிப்புக் கேளுங்கள்! இனி யாரும் யாரையும் பறையா என்று சொல்லிவிட்டு. இப்படி உங்க Dictionary-ஐ தூக்க மாட்டார்களா ” என யூடர்ன் ஆசிரியர் ஐயன் கார்த்திகேயன் ட்விட்டரில் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இதற்கிடையில், ஜெயலலிதா முதல்வராக இருந்த போது 1995-ல் மதுரை கூட்டத்தில் பேசிய சுப்ரமணிய சுவாமி விடுதலைகள் புலிகளின் தலைவர் பிரபாகரனை, ” International Political Pariah ” எனப் பேசியுள்ளார். இதற்கு எதிராக எழுந்த புகாரின் பேரில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் மதுரை காவல்துறையால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Please complete the required fields.




Back to top button
loader