பாஜகவின் CAA ஆதரவு எண்ணை எப்படியெல்லாம் பரப்புகிறார்கள் தெரியுமா ?

மத்திய பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மிஸ்டு கால் கொடுக்குமாறு ” 88662 88662 ” என்ற எண் வெளியிடப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் சிஏஏ 2019-க்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் 88662 88662-க்கு மிஸ்டு கால் கொடுக்குமாறு வெளியாகி இருக்கிறது.

Advertisement

கட்சி சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு அளிக்குமாறு வெளியாகும் எண்ணை சமூக வலைதளங்களில் வேறுவிதமாகவும் பகிர்ந்து ஆதரவு பெற்று வருகின்றனர். குறிப்பாக, வேலைவாய்ப்பு சம்பந்தமாக தொடர்பு கொள்ள, என்னுடைய செல்போனை தொலைத்து விட்டேன் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள், பெண்களின் பெயரில் உள்ள சமூக வலைதள ஐடிகளில் என பலவிதமாக 88662 88662 எண் பதிவிட்டு வருவதை அறிய நேர்ந்தது.

Advertisement

இதில், மிக முக்கியமாக நெட்பிளிக்ஸ் தளத்தில் 6 மாதங்களுக்கு இலவசமாக பயன்படுத்த ” 88662 88662 ” என்ற எண்ணிற்கு கால் செய்யுமாறும் ட்விட்டர்வாசி பதிவிட்டு இருந்தார். ஆனால், அதை மேற்கொள்கட்டி இதுபோன்ற தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என நெட்பிளிக்ஸ் இந்தியா தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளது.

Twitter link 

போலியான சமூக வலைதள ஐடிக்களை போல,  சில ஆபாசப் பதிவுகளிலும் பாஜவின் சிஏஏ ஆதரவு எண் இருப்பதாக ஸ்க்ரீன்ஷார்ட்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு கிண்டல் செய்யப்பட்டு வருகின்றது. அவை உண்மையில், பாஜக ஆதரவாளர்கள் செய்ததா அல்லது அவர்களை கிண்டல் செய்ய எதிர் தரப்பினர் ஃபோட்டோஷாப் அல்லது அவ்வாறான பதிவுகளை பகிர்ந்தார்களா எனத் தெரியவில்லை. எதுவாயினும், அவ்வாறு பதிவிடுவது தவறான ஒன்று.

முக்கியத்துவம் வாய்ந்த குடியுரிமை திருத்த சட்ட நடவடிக்கையை நகைச்சுவையாக கடந்து விட முடியாது. மேலும், மிஸ்டு கால் கொடுத்து ஆதரவு பெறக்கூடிய விஷயமும் இதுவல்ல. இதற்கு முன்பாக, நதிநீர் இணைப்பு முதல் பல்வேறு நோக்கங்களுக்கு மிஸ்டு கால் கொடுக்கும் முயற்சியை மேற்கொண்டனர். அதனால் என்ன பலன் கிடைத்தது என மக்கள் கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Proof links : 

BJP launches toll-free number to garner support from people in favour of CAA

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button