அத்தியாவசியப் பொருட்களின் மீதான வரி விவரங்கள் | காங்கிரஸ் vs பிஜேபி.

முந்தைய காங்கிரஸ் ஆட்சி மற்றும் தற்போதைய பிஜேபி ஆட்சியை ஒப்பிட்டு பல தகவல்கள் மீம்களாக சமூக வலைதளங்களில் சுற்றின. அவற்றைப் பற்றிய முழு விவரத்தையும் முன்பே கட்டுரையாக வெளியிட்டு இருந்தோம்.

Advertisement

படிக்க : மோடி ஆட்சியில் எத்தனை சாதனைகள் ! உண்மை என்ன ?

அதேபோன்று, காங்கிரஸ் மற்றும் பிஜேபி ஆட்சியில் அத்தியாவசியப் பொருட்களின் மீதான வரி விவரங்கள் என பரவும் இந்த மீம்யில் உள்ளதையும் விவரமாக பார்க்கலாம்.

சானிட்ரி நாப்கின் : 

பெண்களுக்கான சானிட்ரி நாப்கின்கள் மீதான வரி ஜி.எஸ்.டிக்கு முன்பாக 13.7 சதவீதமாக விதிக்கப்பட்டு இருந்தது. ஜி.எஸ்.டி அமல்படுத்திய போது 12 % ஆக இருந்தது. இந்திய அளவில் நாப்கின் மீதான வரிக்கு கடுமையான எழுந்த பிறகே 2018 ஜூலை 21-ம் தேதி நடந்த GST கூட்டத்தில் சானிட்ரி நாப்கின்களுக்கு வரி விலக்கு அளிப்பதாக அறிவிக்கப்பட்டது.

சானிட்ரி நாப்கின்களுக்கு வரி இல்லை என்றாலும் வரியுடன் விற்பனை செய்த விலைக்கே நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றனர். வரியை நீக்கியதாக கூறிவிட்டு விலையை ஏற்றிக் கொண்டனர் நிறுவனங்கள்.

Advertisement

விவசாயக் கருவிகள்  :

காங்கிரஸ் ஆட்சியில் 12.5% இருந்த விவசாயக் கருவிகள் மீதான வரி தற்போது 0% ஆக உள்ளது. மேலும், ட்ராக்டர்கள், உரத்தின் மீதான வரி 18.5%-ல் இருந்து  12% ஆக குறைந்து உள்ளது. 2018 டிசம்பரில் நடந்த 31-வது GST கூட்டத்தில் விவசாயம் சார்ந்த நன்மைகள் பற்றி பேசியுள்ளனர்.

கோதுமை & அரிசி வரி : 

அரிசி(2.47%) மற்றும் கோதுமைக்கான(2.5%) வரியை நீக்கியது மோடி அரசு எனக் கூறுவது முற்றிலும் தவறு. 2014-க்கு முன்பு வரை கோதுமை தவிர்த்து அரிசிக்கு சேவை வரி இருந்துள்ளது. 2014-15 பட்ஜெட் தாக்கலின் போது அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அரிசி மீதான சேவை வரியை நீக்குவதாக தெரிவித்தார்.

அரிசி மீதான சேவை வரியை நீக்குவதற்கு மத்திய அரசிற்கு அழுத்தம் அளித்தது தமிழ்நாடு அரசு என்பதை அறிய வேண்டும்.

மருந்துப்பொருட்கள் : 

ஜி.எஸ்.டிக்கு முன்பும், பின்பும் மருந்துப்பொருட்கள் மீதான வரி 12% ஆக இருந்தது. பின் ஜி.எஸ்.டி கூட்டத்தில் வரிக் குறைப்பு தீர்மானத்தில் மருந்துப் பொருட்கள் மீதான வரி 5% ஆக குறைக்கப்பட்டது. எனினும், இந்தியாவில் மருந்துப் பொருட்கள் 5% முதல் 12% வரையில் வகைப்பிரித்து உள்ளனர். மேலும், மருத்துவ உபகரணங்களுக்கு 18% வரி விதிக்கப்படுகிறது.

சர்க்கரை : 

சர்க்கரை மீதான வரி காங்கிரஸ் ஆட்சியில் 26 % ஆக இருந்தது. தற்போது Beet sugar, cane sugar போன்றவற்றிக்கு  ஜி.எஸ்.டி வரி 5% ஆக உள்ளது.

சோப்பு & ஷாம்பு : 

சோப்பு மீதான வரி 26% இல் இருந்து 18 சதவீதமாக குறைத்து உள்ளனர். ஆனால், ஷாம்பு மீதான வரியும் 26 %-ல் இருந்து ஜி.எஸ்.டி அமலுக்கு பின் 2017-ல் 28% ஆக உயர்த்தினர். பின் ஜி.எஸ்.டி வரிக் குறைப்பில் ஷாம்பு மீதான வரி 18% ஆகக் குறைக்கப்பட்டு உள்ளது(2019 அப்டேட்  தரவுகள்).

டூத்பேஸ்ட் :

டூத்பேஸ்ட் மீதான வரி ஜி.எஸ்.டி க்கு முன்பு 26% ஆக இருந்தது. பின் 2017 ஜி.எஸ்.டி-யில் 28 %  ஆக வரியை உயர்த்தி பின்பு தற்போது 18% ஆகக் குறைக்கப்பட்டு உள்ளது.

பல பொருட்களின் மீதான வரிகள் முதலில் அதிகமாக இருந்து பின்பு வரிக் குறைப்பு செய்யப்பட்டது. ஒவ்வொரு கூட்டத் தொடரிலும் வரிக் குறைப்பு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் :

Zero GST on sanitary napkins will not reduce prices

How Farmers can take Benefit of the Reduced GST

Updated 4 GST Tax Slabs Rates List in India for Various Goods and Services

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button