பாஜகவிலும் தலைவிரித்தாடும் வாரிசு அரசியல் !

இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த 21ஆம் தேதி மெட்ரோ ரயில் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதற்கு தமிழகம் வந்தார். அப்போது நடந்த அரசு விழாவில் பேசிய அமித்ஷா “தமிழகத்திலும், நாட்டின் பிற பகுதிகளிலும் சில கட்சிகள் குடும்ப அரசியலை நடத்தி வருகின்றன. பிற மாநிலங்களைச் சோ்ந்த மக்கள், அங்குள்ள கட்சிகள் நடத்தும் குடும்ப, வாரிசு அரசியலுக்கு எதிராக சரியான பாடத்தைப் புகட்டியுள்ளனா். தமிழகத்திலும் அதுபோன்ற பாடம் புகட்டப்படும். பாஜக மக்களின் துணை கொண்டு வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டப்படும்” என்று கூறினார்.
உள்துறை அமைச்சர் அரசு நிகழ்வை அரசியல் நிகழ்வாக தனது பேச்சு மூலம் மாற்றி உள்ளார் என பலரும் விமர்சித்துக்கொண்டுள்ள நிலையில் உன்மையில் பாஜகவில் வாரிசு அரசியல் உள்ளதா, இல்லையா என்பதை இந்த பதிவின் வழியே அறிந்து கொள்ளலாம். உதாரணத்திற்காக சில முக்கிய தலைவர்களின் வாரிசுகள் அங்கம் வகிக்கும் பதவி மற்றும் தேர்தலில் போட்டியிட்டதைக் குறிப்பிட்டு உள்ளோம்.
ராஜ்நாத் சிங் பாதுகாப்பு துறை அமைச்சர் |
பங்கஜ் சிங் (மகன் ) துணைத் தலைவர், பாஜக, உத்தரபிரதேசம், |
சந்திரகாந்த கோயல் (தாய்) மகாராஷ்டிரா சட்டமன்ற உறுப்பினர் மூன்று முறை வெற்றி பெற்றார் |
பியூஷ் கோயல் (மகன்)
ரயில்வே அமைச்சர் வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் |
வேத் பிரகாஷ் கோயல் (தந்தை) மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் – 2001 முதல் 2003 வரை |
|
தேபேந்திர பிரதான் பாரதிய ஜனதா (பாஜக) மற்றும் ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) உறுப்பினர். |
தர்மேந்திர பிரதான் (மகன்) பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் |
கங்காதர் ஃபட்னாவிஸ் நாக்பூரிலிருந்து மகாராஷ்டிரா சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார் |
தேவேந்திர ஃபட்னாவிஸ் (மகன்) மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் |
வசுந்தரா ராஜே பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணைத் தலைவர் |
துஷ்யந்த் சிங் (மகன்) இந்திய மக்களவை நான்கு முறை உறுப்பினர் |
ராமன் சிங் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் |
அபிஷேக் சிங் (மகன்) இந்திய நாடாளுமன்றத்தின் 16 வது மக்களவை உறுப்பினர் |
பி.எஸ்.யெடியுரப்பா கர்நாடக முதலமைச்சர் |
பி. வை.ராகவேந்திரா (மகன்) 16 வது மக்களவை உறுப்பினர் |
கோபிநாத் முண்டே மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதி |
பங்கஜா முண்டே (மகள்) மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதி |
பாண்டுரங் புண்டலிக் ஃபண்ட்கர் மகாராஷ்டிரா சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் |
ஆகாஷ் பாண்டுரங் ஃபண்ட்கர் (மகன்) 13 வது மகாராஷ்டிரா சட்டமன்ற உறுப்பினர் |
ரோசாஹேப் டான்வே மாநில நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் |
சந்தோஷ் டான்வே (மகன்) மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதி |
அனில் ஷிரோல் 2014 முதல் 2019 வரை 16 வது மக்களவையில் புனே தொகுதி பிரதிநிதி |
சித்தார்த் ஷிரோல் (மகன்) மகாராஷ்டிரா சட்டமன்ற உறுப்பினர் |
தத்தா மேகே அரசியல்வாதியும் தற்போது பாரதிய ஜனதா தலைவர் |
சமீர் மேகே (மகன்) 13வது மகாராஷ்டிரா சட்டமன்ற உறுப்பினர் |
ரூபடை பாட்டீல் நிலங்கேகர் பாஜக அரசியல் கட்சியின் உறுப்பினர் |
சம்பாஜி பாட்டீல் நிலங்கேகர் (மகன்) 13 வது மகாராஷ்டிரா சட்டமன்ற உறுப்பினர் |
ராம்ஷேத் தாக்கூர் இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சியின் உறுப்பினர் |
பிரசாந்த் தாக்கூர் (மகன்) 2014 மகாராஷ்டிரா தேர்தல் வேட்பாளர் |
பாலாசாகேப் விகே பாட்டீல் 14 வது மக்களவை உறுப்பினர் |
ராதாகிருஷ்ணா விகே பாட்டீல் (மகன்) அரசியல்வாதியும் பாரதிய ஜனதா உறுப்பினர் |
நாராயண் ரானே மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் |
நிதேஷ் நாராயண் ரானே (மகன்) அரசியல்வாதியும் மகாராஷ்டிரா சட்டமன்ற உறுப்பினர் |
சுனில் ரானே மகாராஷ்டிரா சட்டமன்ற உறுப்பினர் |
தத்தா ரானே (மகன்) மகாராஷ்டிரா அரசாங்கத்தில் முன்னாள் அமைச்சரவை அமைச்சர் |
இங்கு உதாரணத்திற்காக மட்டுமே பாரதிய ஜனதா கட்சியின் சில அமைச்சர்கள், தலைவர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகள் கட்சி பதவி குறித்து குறிப்பிட்டு உள்ளோம். நேரு குடும்பத்தில் இருந்து குடும்ப, வாரிசு அரசியலை நிறுத்த வேண்டும் எனத் தொடர்ந்து பேசும் பாஜக, நேரு குடும்பத்தில் இருந்து வந்த மேனகா காந்தி மற்றும் அவரின் மகன் வருண் காந்திக்கும் பதவி வழங்கி இருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் இருந்து நாட்டை மீட்க வேண்டும் எனக் கூறி அவர்களை அமைச்சர் ஆக்குவதும், அவர்களின் வாரிசுகளுக்கு பதவி வழங்குவதையும் பாஜக செய்துள்ளது.
வாரிசு அரசியல் என்பது பாரதிய ஜனதா கட்சியில் மட்டும் இல்ல, காங்கிரஸ் போன்ற பெரும்பாலான தேசிய மற்றும் திமுக, அதிமுக, பாமக, தேமுதிக போன்ற மாநில கட்சியில் இன்றியமையாத ஒன்றாக வேரூன்றி திகழ்கிறது. பாஜக தன்னை வாரிசு அரசியல் இல்லாத கட்சி என்று முன்னிலைப்படுத்தி கொண்டாலும் அது உண்மை அல்ல என்பதற்கு நிகழ்கால அரசியலிலே பல ஆதாரங்கள் உள்ளன.
சிலர் திமுகவில் குடும்ப அரசியல் இருப்பதை சுட்டிக்காட்டி குடும்ப அரசியல் வேறு, வாரிசு அரசியல் வேறு என விளக்கம் அளித்து வருகிறார்கள். எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அரசியல்வாதிகளின் பிள்ளைகள், குடும்பத்தினர் அரசியலில் களமிறக்கப்படுகின்றனர் என்பதே நிதர்சமான உண்மை.
Links:
BJP has 16 dynast MLAs in Maharashtra — highest among all parties
https://www.india.gov.in/my-government/indian-parliament/maneka-sanjay-gandhi
http://164.100.47.194/Loksabha/Members/MemberBioprofile.aspx?mpsno=4277
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.