நடிகை காயத்ரியின் படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து பரப்பிய பாஜக பொறுப்பாளர் !

மிழ்நாடு பாஜகவில் அண்ணாமலை தலைமையில் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து விலகுவதாக ஜனவரி 3ம் தேதி அறிவித்தார். இதையடுத்து, அண்ணாமலை மற்றும் அவரது ஆதரவாளர்கள் செய்யும் தவறுகள் குறித்தும், அவர்களுக்கு எதிராகவும் தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் காயத்ரி ரகுராம் பதிவிட்டு வந்தார்.

இந்நிலையில், அண்ணாமலையின் ஆதரவாளரும், அக்கட்சியில் பொறுப்பில் உள்ள டி.பாலு என்பவர் காயத்ரி ரகுராமை ஆபாசமாக சித்தரித்து மார்பிங் செய்யப்பட்ட படத்தை  ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.

gayathri raguraam marphing

Twitter link 

தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ” நடிகை காயத்ரி நீங்கள் ஒரு பெண் என்று மறந்துவிட்டு ஸ்லீப்பர் செல்லாக அண்ணாமலை அவர்கள் பற்றி கொத்தடிமைகள் பேசுறது போல் பேசிக் கொண்டிருக்கிறாய்.. ” எனக் கூறி மார்பிங் செய்யப்பட்ட படத்தை பதிவிட்டு இருக்கிறார்.

காயத்ரி ரகுராம் மூலம் தமிழ்நாடு பாஜகவில் அண்ணாமலைக்கு ஆதரவாக செயல்படும் வார் ரூம் தொடர்பான குற்றச்சாட்டுகள் வெளியே தெரிய வந்த பிறகு, அக்கட்சிக்கு ஆதரவாக பேசி வந்தவர்கள் மீதும் ட்விட்டர் தளத்தில் தாக்குதல்கள் அதிகரித்தன. இதனால் பாஜக மற்றும் அதிமுக ஆதரவாளர்கள் பலரும் ட்விட்டரில் அண்ணாமலையின் வார் ரூம்-க்கு எதிராக விமர்சித்து வருகின்றனர்.
இதற்கிடையில், காயத்ரி ரகுராமின் படத்தை மார்பிங் செய்து பரப்பிய அண்ணாமலை ஆதரவாளரின் பதிவிற்கு நடிகை கஸ்தூரி, மாரிதாஸ், கிஷோர் கே சுவாமி மட்டுமின்றி அதிமுகவினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Twitter link 

Twitter link

பாஜக நபரின் பதிவிற்கு சமூக வலைதளங்களில் கண்டங்கள் எழத் தொடங்கிய பிறகு அப்பதிவை நீக்கி இருக்கிறார். எனினும், கட்சி அவரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டனப் பதிவுகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

Please complete the required fields.




Back to top button