தமிழ்நாடு ‘பாஜகவின் ஐடி விங்’ தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார் பரப்பிய வதந்திகளின் தொகுப்பு

மிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் சமூக வலைத்தளம் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவராக இருந்து வரும் சி.டி.ஆர்.நிர்மல் குமார் அக்டோபர் 13ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில், ” தமிழ்நாடு அரசு பிரதமரின் வருகையின் போது பாதுகாப்பு விஷயத்தில் எந்தவித உறுதிமொழியும் கொடுக்காத காரணத்தினால் இந்த வருடம் பிரதமர் வருவது தள்ளிப்போனதாக தகவல் ” எனப் பதிவிட்டு இருந்தார்.

Twitter link 

இதுதொடர்பாக, அக்டோபர் 14ம் தேதி நிர்மல் குமாருக்கு எதிராக சைபர் க்ரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்தும் வதந்தியைப் பரப்புதல், கலகம் செய்யத் தூண்டுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, நவம்பர் 2ம் தேதி சென்னை காவல் ஆணையரகத்தில் உள்ள குற்றப்பிரிவு சைபர் க்ரைம் அலுவலகத்தில் வழக்கு தொடர்பான விசாரனைக்கு அவர் நேரில் ஆஜராகினார்.

பாஜகவின் நிர்மல் குமார் மதம் சார்ந்து, ஆளும் அரசுக்கு எதிராகவும், எதிர்கட்சிகளுக்கு எதிராகவும், தன்னுடைய கட்சிக்கு ஆதரவாகவும் தொடர்ந்து தவறான தகவல்கள் மற்றும் வதந்திகளை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார். 

அரசுக்கு எதிரான வதந்திகள் 

1.ஆவின் பொருட்களில் ஹலால் சான்றிதழ்

கடந்த செப்டம்பர் மாதம் நிர்மல் குமார், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அமைச்சர் நாசர் ஆவின் பொருட்களில் ஹலால் சான்றிதழ் கொண்டு வந்ததாகவும், அமைச்சரின் மதவெறி என்றும் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். இது பாஜகவினரால் பெரும் பிரச்சாரமாக எடுக்கப்பட்டது.

படிக்க : திமுக ஆட்சியில் ஆவின் பொருட்களில் ஹலால் சான்றிதழ் கொண்டு வந்ததாக வதந்தி பரப்பும் பாஜகவினர்

ஆனால், கடந்த அதிமுக ஆட்சியில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படும் ஆவின் தயாரிப்புகளில் ஹலால் சான்றிதழ் இடம்பெற்று இருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஆவின் பொருட்களில் ஹலால் சான்றிதழ் கொண்டு வந்ததாக வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது என நாம் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

 2. ஃபோர்டு தொழிற்சாலை மூடல் 

கடந்த ஜூலை மாதம் சென்னை மறைமலைநகரில் உள்ள ஃபோர்டு தொழிற்சாலை தனது கடைசி காரை உற்பத்தி செய்தது. ஆனால், திமுக ஆட்சியால் ஃபோர்டு தொழிற்சாலை மூடப்பட்டதாக ட்விட்டரில் வதந்தியைப் பரப்பி இருந்தார்.

படிக்க : ஃபோர்டு கார் தொழிற்சாலை உற்பத்தியை நிறுத்த திமுக அரசு காரணமா ?.. அப்போ குஜராத்தில் ?

ஆனால், தொடர்ந்து இழப்பை சந்தித்து வந்த ஃபோர்டு நிறுவனம் 2021ம் ஆண்டு பாஜக ஆளும் குஜராத் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகளை மூட உள்ளதாக அறிவித்து இருந்தது. ஆனால், திமுக ஆட்சியால் ஃபோர்டு தொழிற்சாலை மூடப்பட்டதாக வதந்தியைப் பரப்பி இருந்தார்.

3. பொங்கல் தொகுப்பு 

கடந்த ஜனவரி மாதம், மக்களுக்கு அரசால் வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பு குறித்து, ” மக்களுக்கு நன்றியே இல்லை. பொங்கல் பரிசை முதல்வரே பார்த்து பார்த்து உருவாக்கினார். ஆனால், மக்களுக்கு நன்றி இல்லை என அமைச்சர் சக்கரபாணி ” கூறியதாகப் போலியான நியூஸ் கார்டை ட்விட்டரில் பரப்பி இருந்தார்.

படிக்க : பொங்கல் தொகுப்பு விவகாரத்தில் அமைச்சர் சக்கரபாணி கூறியதாகப் பரவும் போலிச் செய்திகள் !

4. சென்னை மழை 

சென்னையில் ரூ.4000 கோடி செலவிலான மழை நீர் வடிகால் பணிகள் எனக் குறிப்பிட்டு  பாலத்தின் மீது பேருந்து செல்லும் போது தேங்கி இருந்த மழைநீர் கீழே இருந்த வாகன ஓட்டிகளின் மீது விழும் பாகிஸ்தான் நாட்டில் எடுக்கப்பட்ட வீடியோவை சென்னை எனத் தவறாகப் பரப்பி வருகிறார்.

5. மது இறக்குமதி அவசரம் 

இதேபோல், திமுக ஆட்சியில் லாரி ஒன்றில் தமிழ்நாடு மது இறக்குமதி வாகனம் அவசரம் என எழுதப்பட்டு இருப்பதாக கடந்த 2016ல் அதிமுக ஆட்சியில் இருந்தே சமூக வலைதளங்களில் வைரலான ஃபோட்டோஷாப் படத்தை நிர்மல் குமார் ட்விட்டரில் பரப்பி இருந்தார்.

படிக்க : தமிழ்நாடு மது இறக்குமதி வாகனம் அவசரம்.. பழைய ஃபோட்டோஷாப் படத்தை பரப்பும் பாஜக நிர்மல் குமார்!

சிஏஏ போராட்டம் : 

2019ம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் காவலர்கள் மீது போராட்டக்காரர்கள் தாக்கியதாக 2018ல் எடுக்கப்பட்ட காவலர்கள் இரத்த காயத்துடன் இருக்கும் பழைய படத்தையும் இணைத்து பரப்பி இருந்தார்.

படிக்க : CAA போராட்டக்காரர்களால் தாக்கப்பட்ட காவலர்களின் புகைப்படங்கள் உண்மையா ?

இதேபோல், மேற்கு வங்க மாநிலத்தில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக லட்சக்கணக்கான மக்கள் திரண்டதாக 2016ம் ஆண்டு மகாராஷ்டிராவில் மரதா சமுதாயத்தால் மேற்கொள்ளப்பட்ட பேரணியின் போது எடுக்கப்பட்ட படங்களை தவறாகப் பரப்பி இருந்தார்.

படிக்க : குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக மேற்கு வங்கத்தில் திரண்ட கூட்டமா ?

எதிர்கட்சிகளுக்கு எதிரான வதந்திகள் : 

காங்கிரஸ், திமுக, விசிக உள்ளிட்ட எதிர்கட்சிகளுக்கு எதிராகவே பல்வேறு வதந்திகள், அவதூறுப் பதிவுகளை ட்விட்டரில் நிர்மல் குமார் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

படிக்க : தங்கை மகளுடன் இருக்கும் ராகுலின் படத்தை தவறாகப் பரப்பிய பாஜகவினர்.. பதிவை நீக்கிய நிர்மல் குமார் !

படிக்க : ராகுல் காந்தியின் யாத்திரைக்கு பயன்படுத்தப்படும் கேரவன் என பாஜகவினர் பரப்பும் தவறான படங்கள் !

படிக்க : 2500+1500=5000 என்பது ஸ்டாலின் கணக்கு எனப் பரப்பப்படும் எடிட் வீடியோ !

படிக்க : திருமாவளவன் வழங்கிய சால்வையை மு.க.ஸ்டாலின் அலட்சியப்படுத்தினாரா ?

படிக்க : உதயநிதிக்கு பின்னால் “திருடர்கள் ஜாக்கிரதை” என எழுதி இருந்ததா ?

பாஜகவிற்கு ஆதரவான பொய்கள் 

எதிர்கட்சிகளுக்கு எதிராக வதந்திகளைப் பரப்புவது போல் தங்களது சொந்தக் கட்சிக்கு ஆதரவாகவும் பல்வேறு பொய்யான தகவல்களையும் நிர்மல் குமார் பரப்பி இருக்கிறார்.

படிக்க : பிரதமர் மோடி ‘நமஸ்தே’ என்ற போது தமிழக மக்கள் ஆரவாரமிட்டதாக எடிட் வீடியோவை பகிரும் பாஜகவினர் !

படிக்க : திருச்சி பெல் நிறுவன தொழிற்சங்கத் தலைவர் தேர்தலில் பாஜக வெற்றியா ?

படிக்க : மகாராஷ்டிரா அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பல ஆயிரம் ஆண்டு பழமையான சிவலிங்கமா ?

படிக்க : மாணவரை மீட்டதாகப் பதிவிட்ட தமிழக பாஜகவினர்.. யாரும் வரவில்லை எனப் பதிவிட்ட மாணவர் !

தமிழ்நாடு பாஜகவின் ஐடி விங் தலைவர் பதவியில் இருக்கும் நிர்மல் குமார் 2022ல் மட்டும் பரப்பிய 11 தவறான தகவல் மற்றும் வதந்திகளை கண்டறிந்து வெளியிட்டு இருக்கிறோம்.

மேலும் படிக்க : அமைதியைக் குலைக்கும் வகையில் பதிவிட்டதாக வழக்கு.. கிஷோர் கே சுவாமி பதிவிட்ட வதந்திகளின் தொகுப்பு

இதேபோல், மோடி ஆதரவாளர் கிஷோர் கே சுவாமி பரப்பிய வதந்திகளின் தொகுப்பையும் கட்டுரையாக வெளியிட்டு இருக்கிறோம்.

சமீபத்தில்,” ஒரு சிறிய போலிச் செய்தி நாட்டில் புயலை ஏற்படுத்தும். போலிச் செய்திகளைச் சரிபார்க்கும் Factcheck என்பது கட்டாயம் ” என பிரதமர் நரேந்திர மோடி பேசி இருந்தார். ஆனால், அவரது கட்சியினரும், ஆதரவாளர்களுமே தொடர்ந்து சமூக வலைதளங்களில் அதிகம் போலிச் செய்திகளை பரப்பி வருகிறார்கள்.

Please complete the required fields.
Back to top button
loader