This article is from Dec 29, 2021

ரூ.15 லட்சம் மேல் ஊழல் செய்தால் மட்டும் என்னிடம் புகார் அளியுங்கள்.. ஊழலை நியாயப்படுத்திய பாஜக எம்.பி !

ரூ.15 லட்சத்துக்கு மேல் ஊழல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டால் மட்டுமே தன்னிடம் புகார் அளிக்குமாறு பாஜக எம்பி ஜனார்தன் மிஸ்ரா பேசியது சர்ச்சையாகி உள்ளது. அவர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியும் வருகிறது.

தற்போதைய சவால்களை கையாள்வதில் ஊடகங்களின் பங்கு என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி ஜனார்தன் மிஸ்ரா, ” கிராம பஞ்சாயத்துத் தலைவர்கள்(சர்பஞ்ச்) ஊழல் செய்ததாக மக்கள் குற்றம்சாட்டும்போது, ரூ.15 லட்சம் வரை ஊழல் இருந்தால் என்னிடம் வர வேண்டாம், ரூ.15 லட்சத்துக்கு மேல் ஊழல் இருந்தால் மட்டும் வாருங்கள் என நான் விளையாட்டாக சொல்வதுண்டு ” எனத் தெரிவித்து இருக்கிறார்.

பஞ்சாயத்துத் தலைவர்களின் ஊழல் குறித்து மக்கள் அதிக அளவில் புகார் அளிக்க வருவதாக பேசிய ஜனார்தன் மிஸ்ரா, ஒரு வேட்பாளர் தேர்தலில் போட்டியிட குறைந்தது ரூ.7 லட்சம் செலவிடுகிறார், அடுத்த தேர்தலுக்கு ரூ.7 லட்சத்தை செலவிட வேண்டும், அதிகரித்து வரும் பணவீக்கத்தை கருத்தில் கொண்டு ரூ.1 லட்சமும் செலவில் அடங்கும் ” எனப் பேசியுள்ளார்.

கிராம பஞ்சாயத்துகளில் நிகழும் ஊழல் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அதிமுக்கியம் வாய்ந்தது. அதற்கு காரணம், கிராமங்களின் வளர்ச்சிக்காக அளிக்கப்படும் அதிக நிதியானது  ஊழல் செய்யப்படுவதால் வளர்ச்சியானது தடைபடுகிறது. அங்கு நிகழும் ஊழலை குறிப்பிட்ட தொகை வரை நிர்ணயித்து, அதை விளையாட்டாக பேசிய பாஜக எம்.பி ஜனார்தன் மிஸ்ராவின் பேச்சு ஊழலை நியாயப்படுத்துவதாக உள்ளது.

Links : 

Ani Tweet 

‘Come to me only if corruption amount is over Rs 15 lakh’: BJP MP

BJP MP Janardan Mishra sparks row, says ‘corruption up to 15 lakh is understandable’

Please complete the required fields.




Back to top button
loader