பாஜகவின் புதிய அமைச்சரவை: 42% பேர் மீது குற்ற வழக்குகள், 90% பேர் கோடீஸ்வரர்கள் – ADR அறிக்கை !

ஒத்துழைப்பு அமைச்சகம் எனப்படும் புதிய அமைச்சகத்தை உருவாக்கியது, அமைச்சரவையில் பல்வேறு முக்கிய அமைச்சக பிரிவுகளின் நிர்வாக பொறுப்பில் புதிய ஒன்றிய அமைச்சர்களை நியமித்தது என சில நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு அமைச்சரவையை விரிவாக்கம் செய்தது. இந்த சமீபத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில், 43 புதிய அமைச்சர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

Advertisement

தற்போது இந்திய அமைச்சரவையில் உள்ள 78 அமைச்சர்கள் தங்களது சுய உறுதிமொழியாக பிரமாண பத்திரங்களில் தெரிவிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அவர்களின் குற்றவியல், சொத்து மற்றும் கல்வி பின்னணி விவரங்களை பகுப்பாய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது தேசிய தேர்தல் கண்காணிப்பு (National Election Watch) மற்றும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு (ஏடிஆர்).

அவ்வறிக்கையில் வெளிவந்துள்ள குற்றவியல் பின்னணி விவரங்கள் :

பகுப்பாய்வு செய்யப்பட்ட 78 அமைச்சர்களில், 33 (42%) அமைச்சர்கள் தங்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகள் இருப்பதாக அறிவித்துள்ளனர். இதில் 24 (31%) அமைச்சர்கள் கொலை, கொலை முயற்சி, கொள்ளை உள்ளிட்ட தீவிர குற்ற வழக்குகளில் பதிவாகியுள்ளனர்.

நான்கு அமைச்சர்கள் மீது ஐபிசி பிரிவு -307லின் கீழ் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் பாஜகவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவர் மீது கொலை வழக்கும் உள்ளது.

மதம், இனம், பிறந்த இடம், வசிப்பிடம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை வளர்ப்பது ; நல்லிணக்கத்தை சிதைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்வது (ஐபிசி பிரிவு -153 ஏ) மற்றும் வேண்டுமென்றே மத உணர்வு மற்றும் மத நம்பிக்கையை அவமதிக்கும் செயலில் ஈடுபடுவோருக்கு எதிராக பதியப்படும் (ஐபிசி பிரிவு -295 ஏ) வின் கீழ் உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட 5 அமைச்சர்கள் மேல் வழக்கு உள்ளது. ஐவரும் பாஜகவை சேர்ந்தவர்களே.

Advertisement

இதுபோக பாஜகவை சேர்ந்த 7 அமைச்சர்கள் மீது தேர்தல் முறைகேடுகள் தொடர்பான வழக்குகள் பதிவாகியுள்ளது.

சொத்து மற்றும் கல்வி பின்னணி :

பகுப்பாய்வு செய்யப்பட்ட 78 அமைச்சர்களில் 70 (90%) நபர்கள் கோடீஸ்வரர்கள். இதில் 4 அமைச்சர்கள் தங்களுக்கு 50 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் இருப்பதாக அறிவித்துள்ளனர்.

ஒரு அமைச்சரின் சராசரி சொத்து ரூ.16.24 கோடி ஆக உள்ளது என இவ்வறிக்கை குறிப்பிடுகிறது.

12 (15%) அமைச்சர்கள் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்தவர்களாக அறிவித்துள்ளனர், 64 (82%) அமைச்சர்கள் பட்டதாரி அல்லது அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற விவரங்கள் :

22 அமைச்சர்கள்(28%) தங்கள் வயது 31 முதல் 50 வயதுக்கு இடைப்பட்டதாக அறிவித்துள்ளனர், 51 வயது முதல் 70 வயது வரை உள்ள அமைச்சர்கள் 56 பேர் (72%). 78 அமைச்சர்களில் 11 பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.

Link: 

Criminal_and_Financial_background_details_of_Union_Council_of_Ministers_(_Cabinet_Expansion_)_2021

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button