கிண்டலுக்குள்ளான வானதி சீனிவாசன் பதிவிட்ட ஃபோட்டோஷாப் புகைப்படமும், அவரின் பதிலும் !

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிரணியின் தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் நவம்பர் 6-ம் தேதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ” டெல்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில் பாஜக குடும்ப உறுப்பினர்கள் உடன் ” என கட்சியினருடன் அவர் இருப்பதாக ஓர் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.

Twitter link | Archive link

ஆனால், newsx எனும் இணையதளத்தில் பாஜக கட்சி கூட்டம் குறித்து வெளியான செய்தியின் புகைப்படத்தில் வானதி சீனிவாசன் இடம்பெறவில்லை. இதை வைத்து கமெண்ட்களில் பலரும் கிண்டல் செய்து பதிவிட்டு வருகிறார்கள்.

பாஜக தலைவர்கள் புகைப்படத்தில் வானதி சீனிவாசன் மட்டுமின்றி அவருக்கு பின்னால் இருக்கும் நபரின் புகைப்படமும் ஃபோட்டோஷாப் மூலம் இணைக்கப்பட்டு இருப்பதே கிண்டலுக்குள்ளாக காரணமாகி இருக்கிறது.

தனது பதிவு ஃபோட்டோஷாப் என கிண்டல் செய்யப்படுவது குறித்து வானதி சீனிவாசன், ” நான் டெல்லி சென்றது உண்மைதான். ஆனால், குழு புகைப்படம் எடுக்கும் போது சற்று தாமதமாக சென்றதால் பலரும் பஸ்ஸில் ஏறிவிட்டனர். இதனால் ஒரு நினைவுக்காக, தன்னை போட்டோகிராபர் தனியாக புகைப்படம் எடுத்து குழு புகைப்படத்துடன் இணைத்துக் கொடுத்ததாக ” பதில் அளித்து இருக்கிறார்.

Twitter link 

நவம்பர் 7-ம் தேதி டெல்லியில் பாஜகவின் தேசிய கூட்டத்தில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட வேறு சில புகைப்படங்களை வானதி சீனிவாசன் ட்விட்டரில் பதிவிட்டும் இருக்கிறார்.

Please complete the required fields.
Back to top button