டெல்லி பிஜேபி இணையதளத்தில் பீஃப் விளம்பரங்கள்|ஹக்கர்களின் விளையாட்டு.

பாரதீய ஜனதா கட்சி மத்திய அரசாக பதவியேற்கும் நாளில் அக்கட்சியின் டெல்லி பிரிவைச் சேர்ந்த delhi.bjp.org தளத்தில் மாட்டுக்கறி இறைச்சி தொடர்பான புகைப்படங்கள், பதிவுகள், உணவு வகைகள் மட்டுமின்றி Beef History, Beef Constitution என்றெல்லாம் இடம்பெற்று இருப்பதை பார்க்க முடிந்தது. site : http://delhi.bjp.org/#
பிஜேபி கட்சியின் அதிகாரப்பூர்வ தளத்தை ஹக்கர்கள் ஹக் செய்து இவ்வாறு மாற்றி அமைத்து உள்ளனர். இந்த செய்தி ட்விட்டரில் பேசும் பொருளாக வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது.
Dear @BJP4India,
Your website has been hacked. How long will you take to restore the site this time?
Yours faithfully 😘 pic.twitter.com/xDSwIwWL39
— Elliot Alderson (@fs0c131y) May 30, 2019
ஹக்கரான Elliot Alderson தனது ட்விட்டர் கணக்கில் டெல்லி பிஜேபி தளத்தில் மாட்டுக்கறி உணவு இருக்கும் படத்துடன் உங்களின் தளம் ஹக் செய்யப்பட்டு உள்ளது எனக் கிண்டல் பதிவை வெளியிட்டு உள்ளார்.
Elliot Alderson பதிவை அடுத்து டெல்லி பிஜேபியின் இணையதளம் ஹக் செய்யப்பட்டது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை மாற்றி அமைக்க எவ்வளவு நேரத்தை எடுத்துக் கொள்வார்கள் எனத் தெரியவில்லை.
இதனை சமாளிக்கும் வகையில் டெல்லி பிஜேபி தளத்திற்கு செல்ல முயற்சிப்பவர்கள் நேரடியாக பிஜேபி தலைமை தளத்திற்கு செல்லும் வகையில் மாற்றி அமைத்து உள்ளனர்.
ஏற்கனவே, மோடி இரண்டாம் முறையாக பிரதமர் ஆக பதவியேற்கும் நாளில் #modisarkar2.0-வை விட #nesamani மற்றும் #prayfornesamani ட்விட்டர் ட்ரென்டிங்கில் முந்தியது அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருந்தது.
Proof : Beef served on hacked BJP Delhi website as Modi 2.0 takes oath
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.