
நோவல் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான உயிர் பலியை வாங்கியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு தனித்துவமான மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் ஏதும் கண்டறியப்படவில்லை. ஆகையால், நோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
எனினும், கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்து விட்டேன் என பலரும் தாங்கள் கண்டுபிடித்ததாக கூறும் மருந்துடன் செய்திகளில் இடம்பெறுகிறார்கள். ஒன்று அல்ல இரண்டல்ல இதுபோல் பல சம்பவங்கள் கடந்த சில மாதங்களில் அரங்கேறி உள்ளது.
” பாட்டி வைத்தியம் மூலம் அசத்தல், கொரோனா வைரசுக்கு 9-ம் வகுப்பு மாணவன் மருந்து கண்டுபிடிப்பு ” என சிறுவனின் புகைப்படத்துடன் கடந்த பிப்ரவரி 3-ம் தேதி வெளியான செய்தி சமூக வலைதளங்களில் பாராட்டுகளுடன் வைரலாகி வருகிறது.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறை தீர்க்கும் கூட்டத்திற்கு வந்த 9-ம் வகுப்பு படிக்கும் மாணவன் இசக்கிராஜ் சீனாவில் பரவி வரும் கொரோனா வைரசிற்கு தனது பாட்டி கூறிய முறைப்படி 11 மூலிகைகளை கொண்டு மருந்து தயாரித்து உள்ளதாகவும், இந்த வைரஸ் தும்மல் மூலம் பரவுகிறது என்பதால் இந்த நாட்டு மருந்தை சாப்பிட்டால் நோய் தாக்கியவரின் மூச்சுக்குழல் நுரையீரல் மற்றும் உணவு குழாய் ஆகியவைகள் படிப்படியாக சீராகிவிடும். மருந்தனையும், விண்ணப்பத்தையும் மாவட்ட ஆட்சியரிடம் சிறுவன் அளித்து உள்ளதாக செய்தியில் வெளியாகி இருக்கிறது.
இந்த செய்தி குறித்து பதில் அளிக்குமாறு நமது ஃபாலோயர்கள் தரப்பில் தொடர்ந்து கேட்கப்பட்டு வருகிறது. இந்த விசயத்தில் செய்தித்தாள் நிறுவனம், 9-ம் வகுப்பு படித்து வரும் சிறுவன் நோவல் கொரோனா வைரசுக்கு வந்து கண்டுபிடித்ததாக தலைப்பை வைத்ததே குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கொரோனா வைரஸிற்கு தந்து மருந்தினை சோதித்து பார்க்குமாறு சிறுவன் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறான். இதேபோல், முதியவர் ஒருவர் கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடித்து உள்ளதாக பரபரப்பை ஏற்படுத்தி, விசாரிக்கும் நேரத்தில் அங்கிருந்து மாயமாகிய சம்பவமும் தமிழகத்தில் நிகழ்ந்து இருக்கிறது.
” எந்தவொரு நோய்த்தொற்றுக்கு நிரூபிக்கப்படாத சிகிச்சை முறைகள் பயன்படுத்துவது பாதுகாப்பானது இல்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கைத் தெரிவித்து உள்ளார்கள். இதுபோன்ற எந்தவொரு சிகிச்சையும் செயல்திறனுடன் இருக்கும் என நிரூபிக்கப்படவில்லை என மக்கள் புரிந்து கொள்ள வேண்டும், ஏனெனில் நமது மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு வழக்குகள் ஒன்று கூட இல்லை ” என பொது சுகாதாரத்தின் துணை இயக்குனர் ரமேஷ் கூறியுள்ளதாக கடந்த பிப்ரவரியில் டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளியாகி இருக்கிறது.
மேலும் படிக்க : கொரோனா வைரஸை தடுக்கும் ஹோமியோபதி மருந்தினை அரசு வெளியிட்டதா ?
ஆயுர்வேத மருந்துகளுக்கும் பயன்கள், பண்புகள் இருப்பதை மறுக்க முடியாது. எனினும், அறியப்படாத நோய்க்கு, நிரூபிக்கப்படாத மருந்தை வைத்து தவறான தகவல்களை பரப்புவது சரியல்ல. இதற்கு முன்பாக, மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஹோமியோபதி மருந்தை கொரோனா வைரஸிற்கு பரிந்துரை செய்ததாக வெளியான தகவல் சரியானது அல்ல என சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.
Proof link :
As ‘remedies’ for novel coronavirus emerge, officials call for caution
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.