பிரதமரால் திறக்கப்பட்டு சில நாட்களான புந்தேல்கண்ட் விரைவுச் சாலையின் பகுதியில் மழையால் பள்ளம் !

ஜூலை 16-ம் தேதி பிரதமர் மோடி உத்தரப் பிரதேச மாநிலத்தில் திறந்த வைத்த புந்தேல்கண்ட் விரைவுச் சாலையின் பகுதியில் மழையால் பள்ளம் உருவாகியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
296 கிலோமீட்டர் நீளம் கொண்ட புந்தேல்கண்ட் விரைவுச் சாலையானது சித்தரக்கூடில் உள்ள பாரத்கூப் மற்றும் எட்டவாவில் உள்ள குத்ரேலுடன் இணைந்து ஏழு மாவட்டங்களை கடந்த செல்கிறது.
இந்த விரைவுச்சாலை பயணிக்கும் ஜலான் மாவட்டத்தின் சேலம்பூர் அருகே உள்ள சிரியா பகுதியில் புதன்கிழமை இரவு பெய்த மழையால் சாலையின் ஒரு பகுதியில் 1.5 அடி ஆழத்திற்கு பள்ளம் உருவாகி உள்ளது. பள்ளதால் இரு கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகி உள்ளது.
” சாலையில் உருவான பள்ளத்தை சரிசெய்ய புல்டோசர்கள் மற்றும் தேவையான உபகரணங்கள் உடன் ஒரு குழுவை ஆணையம் அனுப்பியது. பள்ளங்கள் உடனடியாக சரி செய்யப்பட்டு, போக்குவரத்துக்கு சாலை திறக்கப்பட்டது ” என உத்தரப் பிரதேசத்தின் தொழில்துறை ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் துர்கேஷ் உபாத்யாய் தெரிவித்து உள்ளார்.
बारिश ने खोल दी अधूरे बुंदेलखंड एक्स्प्रेसवे की पोल।
प्रधानमंत्री एवं मुख्यमंत्री द्वारा लोकार्पित बुंदेलखंड एक्सप्रेसवे का बारिश में निकला दम।
अधूरे एक्सप्रेसवे को बुंदेलखंडियो के लिए सौगात बताने वाली भाजपा सरकार कर रही जनता को गुमराह।
शर्म करो प्रचारजीवी सरकार। pic.twitter.com/9SymyjdXye
— Samajwadi Party (@samajwadiparty) July 21, 2022
பிரதமர் மோடியால் திறக்கப்பட்ட விரைவுச் சாலையின் பகுதியில் சில நாட்களிலே மழையால் பள்ளம் உருவான சம்பவத்திற்கு சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
15 हजार करोड़ की लागत से बना एक्सप्रेसवे अगर बरसात के 5 दिन भी ना झेल सके तो उसकी गुणवत्ता पर गंभीर प्रश्न खड़े होते हैं।
इस प्रोजेक्ट के मुखिया, सम्बंधित इंजीनियर और जिम्मेदार कंपनियों को तत्काल तलब कर उनपर कड़ी कार्यवाही सुनिश्चित करनी होगी।#BundelkhandExpressway pic.twitter.com/krD6G07XPo
— Varun Gandhi (@varungandhi80) July 21, 2022
இதுதொடர்பாக பாஜக எம்பி வருண் காந்தி தன் ட்விட்டர் பக்கத்தில், ” 15,000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட விரைவுச்சாலை 5 நாட்கள் மழைக்குக் கூட தாக்குப்பிடிக்கவில்லை என்றால், அதன் தரம் குறித்து பலத்த கேள்வி எழுகிறது. இதற்கான திட்ட தலைவர், சம்பந்தப்பட்ட பொறியாளர் மற்றும் பொறுப்புள்ள நிறுவனங்களை அழைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என விமர்சித்து பதிவிட்டு உள்ளார்.
பிரதமரால் திறக்கப்பட்ட சில நாட்களிலேயே புந்தேல்கண்ட் விரைவுச் சாலையின் நடுவே பள்ளம் உருவான மற்றும் அதை சரிசெய்யும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் விமர்சனங்களுடன் வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, சாலையின் தரம் குறித்த கேள்விகளும் எழுப்பட்டு வருகிறது.
links :
Portion of Bundelkhand expressway develops potholes due to rains, days after opening by PM Modi