புதிய சைபர்கிரைம் மோசடி: உங்கள் செல்போன் அழைப்புகளை யாருக்கும் பகிர வேண்டாம்..!

செல்போன் அழைப்புகளை பகிர்வதன் (Call Forwarding) மூலம் மோசடி செய்வதென்பது தற்போது சைபர்கிரைம் மோசடிகளின் ஒரு புதிய வடிவம். இதில் குற்றவாளிகள் தொலைத்தொடர்பு சேவை இயக்குநர் (telecommunications operator) அல்லது இணையவழிசேவை வழங்குநர் (internet service provider) சேவைகளிடமிருந்து வாடிக்கையாளர் சேவை பிரதிநிதிகளாக ஆள்மாறாட்டம் செய்து, ஏமாற்றி வருகின்றனர்.

முதலில் பாதிக்கப்பட்டவர்களை ஒரு குறியீட்டுடன் கூடிய ஒரு எண்ணை தொடர்புக்கொள்ள சொல்லி, மோசடி எண்ணுக்கு அந்த அழைப்பை அனுப்பத் தொடங்குவார்கள். இந்த குறியீட்டை டயல் செய்தவுடன், மோசடி செய்பவரால் பாதிக்கப்பட்டவரின் அழைப்புகளை அணுக முடிவதோடு, பிற கணக்குகளிலும் உள்நுழைந்து பணத்தை எடுக்க முயற்சிக்க முடியும்.

மோசடி எவ்வாறு செய்யப்படுகிறது ?

மோசடி செய்பவர்கள் உங்கள் மொபைல் நெட்வொர்க் டிரைவர் அல்லது இணைய சேவை வழங்குநர் சார்பாக தொடர்புகொள்ளும் ஒரு வாடிக்கையாளர் சேவை பிரதிநிதியைப் போல நடிப்பார்கள். உங்களுடைய செல்போனின் கணக்கு செயலிழக்கப்பட்டடுள்ளது அல்லது உங்கள் சிம் கார்டில் ஏதோ சிக்கல் இருப்பதாக உங்களுக்குச் சொல்லும் அவர்கள், இதற்கு விரைவான தீர்வு இருப்பதாகவும், உங்கள் தொலைபேசியிலிருந்து ஒரு எண்ணை அழைத்தால் சரியாகிவிடும் என்றும் கூறுவார்கள். 

இதன் மூலம் மோசடி செய்பவர்கள் அவர்களுடைய தனிப்பட்ட மொபைல் எண்ணிற்கு உங்கள் அழைப்புகளை பகிர்ந்து கொள்வதன் (Call forwarding) மூலம், உங்கள் செல்போன்களின் உள்ள பிற கணக்குகளில் அதாவது மற்ற செயலிகள் அல்லது வங்கி தொடர்பான கணக்குகளில் உள்நுழைய முயற்சிப்பார்கள். மேலும் உங்கள் செல்போனில் இருந்து கால் பார்வர்டு செய்யப்பட்டிருப்பதால், அவரால் எளிமையாக உங்கள் OTP-களை கூட அணுக முடிகிறது. 

இன்றைய காலக்கட்டத்தில் மோசடி செய்பவர்கள் மிகவும் நுட்பமானவர்களாக இருக்கிறார்கள். உங்கள் செல்போனில் உள்ள செயலிகளை எளிதில் அணுகுவதால், உங்கள் மற்ற கணக்குகளில் 2 – factor authentication என்று சொல்லப்படுகின்ற சேவையை ஆன் செய்து விடுகின்றனர். இதனால் நீங்கள் மீண்டும் அந்த செயலிகளை அணுகுவது கடினமாகி விடுகிறது.

கடந்த ஆண்டு டெல்லியைச் சேர்ந்த வாட்ஸ்-அப் பயனாளர் ஒருவர் இந்த மோசடியின் மூலம் ஏமாற்றப்பட்டார். ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை அதிகாரி ஒருவர் மற்றொரு எண்ணுக்கு அழைப்பை கால் பார்வர்டு செய்ய சொன்னதால், அவர் தன்னுடைய செல்போனில் உள்ள எல்லா தொடர்பு எண்களையும் (Contacts) இழந்துள்ளார். மோசடிக்காரரால் தன்னுடைய செல்போன் கணக்கு ஹேக் செய்யப்பட்ட நிலையில், பண மோசடி செய்வதற்காக தான், இவ்வாறு தான் ஏமாற்றப்பட்டுள்ளேன் என்பதை இறுதியில் தான் கண்டறிந்தார். 

இந்த மோசடிகளிலிருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?

  • அழைப்புப் பகிர்தலுக்கான குறியீடான (calling forwarding code) *401* ஐத் தொடர்ந்து 10 இலக்க மொபைல் எண்ணை வாடிக்கையாளர் சேவை அதிகாரி ஒருவர் உங்கள் செல்போனில் இருந்து தொடர்புகொள்ள சொன்னால், நீங்கள் அந்த வழிமுறைகளைப் பின்பற்றக் கூடாது.
  • உங்கள் செல்போனிற்கு வரும் தெரியாத இணைப்புகளை (links) கிளிக் செய்து, எந்த அழைப்புகளையும் ஏற்க வேண்டாம். அதே போன்று இணைப்புகளைப் பயன்படுத்தி யாருக்கும் அழைப்பு விடுவிக்கவேண்டாம்.
  • மோசடி செய்பவர் உங்களை குறிவைப்பதாக நீங்கள் சந்தேகப்பட்டால், உங்கள் மொபைல் நெட்வொர்க் டிரைவரை மற்றும் காவல் துறையை நீங்கள் நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.
  • ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) , வி (Vi) மற்றும் பிஎஸ்என்எல் (BSNL) ஆகியவற்றில் இருந்து அழைப்பு பகிர்தலை எவ்வாறு செயல்படுத்துவது/முடக்குவது  என்பதற்கான குறியீடுகளை அறிந்திருக்க வேண்டியதும் அவசியம். 
  • மேலும் உங்கள் வாட்ஸ்அப் கணக்கில் 2 – factor authentication என்று சொல்லப்படுகின்ற சேவையை ஆன் செய்து வைத்திருப்பதன் மூலம், வாட்ஸ்அப் மூலம் செய்யப்படும் நிதி மோசடிகளில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும். மேலும் இவ்வாறு செய்வதன் மூலம் OTP பெறாதவரை யாரும் உங்களுடைய வாட்ஸ்அப் கணக்கை அணுக முடியாது.

அழைப்புகள் பகிரப்படுவதை (call forwarding) எவ்வாறு செயல்படுத்துவது மற்றும் செயலிழக்கச் செய்வது?

ஜியோ (Jio):

*401*<10 இலக்க மொபைல் எண்> = ஒவ்வொரு அழைப்புகளையும் பகிர்வதற்கு (Call forwarding)

*402 =  அழைப்புப் பகிர்வை முடக்குவதற்கு

ஏர்டெல் (Airtel) :

**21*<10 இலக்க மொபைல் எண்># = ஒவ்வொரு அழைப்புகளையும் பகிர்வதற்கு  (Call forwarding)

##21#  = அழைப்புப் பகிர்வை முடக்குவதற்கு

வி (Vi):

**21*<10 இலக்க மொபைல் எண்> = ஒவ்வொரு அழைப்புகளையும் பகிர்வதற்கு  (Call forwarding)

##002# = அழைப்புப் பகிர்வை முடக்குவதற்கு

பி.எஸ்.என்.எல் (BSNL):

**21**<10 இலக்க மொபைல் எண்># = ஒவ்வொரு அழைப்புகளையும் பகிர்வதற்கு (Call forwarding)

##21# = அழைப்புப் பகிர்வை முடக்குவதற்கு

ஆதாரங்கள்:

FRAUD ALERT! Call Airtel `Customer Care` and you could be logged out of WhatsApp

Here’s The Call Forwarding Scam That Airtel, Reliance’s Jio And Truecaller Have Warned Their Users About

Please complete the required fields.




Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader