This article is from Sep 13, 2021

நோட்டு எண்ணும் மெசின் இருந்த அலுவலகம் எனது இல்லை – வானதி விளக்கம்

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் அலுவலகம் ஒன்றில் அமர்ந்து இருக்கும் புகைப்படத்தில் அவருக்கு பின்னால் பணத்தை எண்ணும் மெசின் இருப்பதை சுட்டிக்காட்டி அப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியது.

Archive link 

வானதி ஸ்ரீனிவாசன் தன்னுடைய எம்.எல்.ஏ அலுவலகம் திறப்பு விழாவில் “தனலாபம்” என எழுதியவர் அலுவலகத்தில் பணத்தை எண்ணும் மெசினையும் வைத்திருப்பதாக ட்ரோல் செய்யப்பட்ட மீம்ஸ் மற்றும் பதிவுகள் சமூக வலைதளங்களில் பரவின.

தன்னுடைய புகைப்படம் சமூக வலைதளங்ளில் சர்ச்சையை ஏற்படுத்திய பிறகு வானதி ஸ்ரீனிவாசன் தன் ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்து இருக்கிறார்.

Twitter link | Archive link 

” இன்று காலை ரேஸ் கோர்ஸில் மக்களை சந்தித்துவிட்டு வீட்டுக்கு வர நேரம் இல்லாத காரணத்தினால் நண்பரின் அலுவலகத்தில் காணொளி கூட்டத்தில் கலந்து கொண்டேன். இது எனது அலுவலகம் அல்ல. கவுண்டிங் மெஷின் இருப்பதும் எனக்கு தெரியாது. அதற்குள் ஒரு சிலர் கற்பனை சிறகுகளை விறிக்கிறார்கள் ” என ட்விட்டரில் இரு புகைப்படங்கள் உடன் விளக்கம் அளித்து உள்ளார்.

Archive link 

வைரலான புகைப்படத்தில் இருப்பது தன்னுடைய அலுவலகம் இல்லை என வானதி ஸ்ரீனிவாசன் விளக்கம் அளித்த பின்பும் அவருடைய பதிவின் கமெண்ட்களிலும், அவரின் பதிவை வைத்தும், ” இரண்டும் ஒரே அலுவலகம், ஒரே சேர் ” என அலுவலகம் திறப்பு புகைப்படத்துடன் குறிப்பிட்டு பதிவிட்டு வருவதையும் பார்க்க முடிந்தது.

” தனலாபம் ” என எழுதி தொடங்கப்பட்ட வானதி ஸ்ரீனிவாசன் உடைய அலுவலகமும், வைரலான புகைப்படத்தில் இருக்கும் அலுவலகமும் வேறாகவே இருக்கின்றன. வானதி ஸ்ரீனிவாசனின் சேர் ஒரே மாதிரி இருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால், சேர், சுவரின் வண்ணம், மேசை உள்ளிட்ட அனைத்தும் வேறாகவே இருக்கிறது.

பணம் எண்ணும் மெசின் கொண்ட புகைப்படம் எடுக்கப்பட்ட அலுவலகம் தன்னுடையது அல்ல என்று வானதி ஸ்ரீனிவாசன் விளக்கம் அளித்தும் அப்புகைப்படம் தவறாக பரப்பப்பட்டு வருவதை பார்க்க முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader