பள்ளிப்பாடத்தில் சாதி பிரிவினை | வைரலாகும் கேள்வித்தாள்.

கேந்திர வித்யாலயா பள்ளியில் 6-ம் வகுப்பு கேள்வித்தாளில் ஒடுக்கப்பட்ட மக்களை குறிக்கும் தலித் என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்பதில் இருந்து, சட்டமேதை அம்பேத்கரை சாதித் தலைவராக சித்தரித்து உள்ளதாக கேள்வித்தாள் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

Advertisement

இதன் உண்மைத்தன்மையை அறிந்து கூறுமாறு ஃபாலோயர்கள் பலரும் கேட்டுக் கொண்டனர். நாமும் அவர்களுக்கு பதில் அளிக்க கேள்வித்தாள் குறித்த ஆய்வை மேற்கொண்டோம். சர்ச்சைக்குரிய கேள்வித்தாள் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பது குறித்த விவரங்கள் கிடைக்கப் பெறவில்லை.

ஆனால், இந்த கேள்விகளுக்கு அடிப்படையாக இருக்கும் பாடத் திட்டத்தை காண முடிந்தது. மத்திய அரசின் ncert பாடத்திட்டத்தில் சர்ச்சையாகும் கேள்விகளுடன் தொடர்புடைய பாடங்கள் இடம்பெற்று உள்ளன. அதில், உயர் சாதி(upper caste) , தாழ்ந்த சாதி(lower caste) என பிரித்து கூறியுள்ளனர்.

ஒடுக்கப்பட்ட மக்களை ” தீண்டத்தகாதவர்கள் ” என்ற வார்த்தைகளுடன் இணைத்துக் கூறியது போன்று, சட்ட மேதை அம்பேத்கரை தலித் சமூகத்தின் தலைவர் என்றே வெளிப்படையாக தெரிவித்தும் இருக்கிறார்கள். இந்திய சட்ட விதிகளை உருவாக்கிய ஒரு மேதையை வெளிப்படையாக ஒரு சமூகத்தின் தலைவர் என்று மத்திய அரசின் பாடத்தில் கூறியுள்ளார்கள்.

Advertisement

தலித் என்ற வார்த்தையை பயன்படுத்தவே கூடாது எனக் கூறிக் கொண்டிருக்கையில் பாடத்தின் ஒவ்வொரு பகுதியிலும் தலித், தலித் என்ற வார்த்தையையும், lower caste என்ற வார்த்தையையும் ஆழமாக பதித்து உள்ளனர்.

மேல் சாதி, கீழ் சாதி என வரையறை எல்லாம் செய்து, விளக்கம் கொடுத்து விட்டு பின்னர், இவ்வாறு அவர்கள் பாதிக்கப்பட்டனர் எனக் கூறுவதில் என்ன நியாயம் உள்ளது என்று தெரியவில்லை. நாம் பெரும்பாலும், முன்னேறிய வகுப்பினர், பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என்றே கூறி வருகிறோம். அவர்கள் பிறப்பால் தாழ்ந்தவர்களாக இல்லை, தாழ்த்தப்பட்டவர்கள் எனக் கூறுவதே பொருந்தும்.

ஆகையால் தான் நம் பள்ளி புத்தகங்களின் முதல் பக்கத்தில் ” தீண்டாமை ஒரு பாவச்செயல் ” என்றே அச்சிட்டு உள்ளனர்.

Link :

http://www.ncert.nic.in/ncerts/l/fess302.pdf

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button