ரூ.971 கோடி புதிய நாடாளுமன்றம் ரூ.20,000 கோடி திட்டத்தின் அங்கமே| சென்ட்ரல் விஸ்டா திட்டம் பற்றி அறிக !

தற்போதைய 93 ஆண்டுகள் பழமையான இந்திய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பதிலாக ரூ.971 கோடி மதிப்பில் புதிய நாடாளுமன்றம் அமைய உள்ளது. டிசம்பர் 10-ம் தேதி டெல்லியில் புதிய நாடாளுமன்றத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி. 2022-ம் ஆண்டில் இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தின் கொண்டாடப்படும் போது கூட்டத் தொடர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெறும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்து இருந்தார்.

Advertisement

தற்போதைய நாடாளுமன்றத்திற்கு அருகே 64,500 சதுர மீட்டர் பரப்பளவில் நவீன கலைநயம், சிறந்த பாதுகாப்பு வசதிகள், எரிசக்தி சேமிப்பு உள்ளிட்டவையுடன் இடம்பெற்று இருக்கும் என்றும், முக்கோண வடிவிலான புதிய நாடாளுமன்றம் தற்போதைய மக்களைவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளை விட மூன்று மடங்கு பெரிதாக இருக்கும் என மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், 20,000 கோடியில் புதிய நாடாளுமன்றம் அவசியமா என அரசியல் தலைவர்கள், மக்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது, அதேபோல் புதிய நாடாளுமன்றத்தின் மதிப்பு ரூ.971 கோடி மட்டுமே 20,000 கோடி என்பது தவறான தகவல் என ஆதரவாளர்கள் எதிர்வினை ஆற்றுவதை பார்க்க முடிந்தது. அனைவரும் புதிய நாடாளுமன்ற கட்டிடம் பற்றி மட்டுமே விவாதித்து வருகிறார்கள்.

முதலில், சென்ட்ரல் விஸ்டா திட்டம் என்பது குறித்த விளக்கம் தேவை. ரூ.971 கோடி மதிப்பில் அமைய உள்ள புதிய நாடாளுமன்றம் கட்டிடம் 20,000 கோடி மதிப்பிலான சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் ஒரு அங்கமே !

சென்ட்ரல் விஸ்டா திட்டம் எனும் மறுநிர்மாண கட்டுமான திட்டத்தில், முக்கோண வடிவிலான புதிய நாடாளுமன்ற கட்டிடங்கள் மட்டுமல்லாமல், பொதுவான மத்திய அரசின் செயலகம், பிரதமர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் உள்ளிட்டோருக்கான குடியிருப்புக்கு புதிய கட்டிடங்கள், இந்திய கேட் முதல் ராஷ்டிரபதி பவன் வரை 3 கி.மீ தொலைவிலான ராஜபாதையைப் புதுப்பித்தல் உள்ளிட்டவை இடம்பெற்று உள்ளன.

இந்தியாவின் புதிய நாடாளுமன்றம் மற்றும் பிற கட்டுமானங்கள் இடம்பெறும்  ” சென்ட்ரல் விஸ்டா ” திட்டத்தில் விதிமீறல்கள் இருப்பதாக திட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 10 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த திட்டத்திற்கான அடிக்கல்லை நாட்டலாம், எனினும் மறுஉத்தரவு வரும் வரை கட்டுமானத்தை தொடங்கக் கூடாது என உச்ச நீதிமன்ற நீதிபதி கன்வில்கர் தலைமையிலான அமர்வு உத்தரவுவிட்டது.

Advertisement

” சென்ட்ரல் விஸ்டா திட்டம் பணத்தை வீணடிக்காது, சேமிக்கவே செய்யும் ” என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்திற்கு விளக்கம் அளித்ததாக நவம்பர் 3-ம் தேதி டைம்ஸ்நவ்நியூஸ் உள்ளிட்ட செய்திகளில் வெளியாகி இருக்கிறது. புதிய கட்டுமானங்கள் மூலம் ஆண்டு செலவினத்தில் ரூ.1,000 கோடி அளவிற்கு சேமிக்க வாய்ப்பு ஏற்படும் மற்றும் 51 அமைச்சங்கங்கள் உள்ளிட்டவையின் துறைகள் 10 புதிய கட்டிடங்களில் ஒருங்கிணைக்கப்படும் எனக் கூறி உள்ளனர்.

இந்த புதிய திட்டத்தில், பிரதமரின் அலுவலகம் இருக்கும் சவுத் ப்ளாக் பகுதிக்கு அருகே பிரதமரின் குடியிருப்பு மாற்றப்படும், துணை குடியரசுத் தலைவரின் குடியிருப்பு நார்த் ப்ளாக் அருகே இருக்கும்.

மேலும் படிக்க : 65,000 ச.மீ நாடாளுமன்றத்திற்கு 970 கோடி, 12,000 ச.மீ தமிழக தலைமை செயலகத்திற்கு 465 கோடி செலவா ?

20,000 மதிப்பிலான சென்ட்ரல் விஸ்டா திட்டத்தில் ஒரு அங்கமான ரூ.971 கோடி மதிப்பிலான புதிய நாடாளுமன்றம் கட்டப்படுவது மட்டுமே பெரிதாய் விவாதமாகி இருக்கிறது. இதனால், 65,000 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.971 கோடியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட உள்ளதாகவும், 12,000 சதுர மீட்டர் பரப்பளவில் தமிழக புதிய தலைமை செயலகம் ரூ.465 கோடியில் கட்டப்பட்டதாக ஒரு தவறான ஒப்பீடு பரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சென்ட்ரல் விஸ்டா திட்டமானது ரூ.20,000 கோடி மதிப்பிலான மறுநிர்மாண திட்டமாகும். அதில், ரூ.971 கோடியில் புதிய நாடாளுமன்றம் கட்டிடம் ஒரு அங்கம் மட்டுமே. இதைத் தவிர்த்து பிற அரசு கட்டிடங்களும் இடம்பெறுகின்றன. சிலர் விஸ்டா திட்டம் ரூ.971 கோடியில் நடைபெற உள்ளதாக தவறாக புரிந்து கொண்டு, தவறாக பரப்பவும் செய்கின்றனர்.

Links :

Triangular shape, national symbols : what the new parliament will look like 

Centre defends Rs 20k Cr Central Vista project; tells SC ‘it saves not wastes money’

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button