செம்பரம்பாக்கம் ஏரி குறித்த வதந்திகளை நம்பாதீர்கள் !

சென்னையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி தனது முழு கொள்ளளவை எட்டி வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், அரசாங்கம் அதை கவனிப்பார்களா என சமூக வலைதளங்களில் ஓர் தகவலை பரப்பி வருகிறார்கள். 2015-ல் நிகழ்ந்த பாதிப்பின் காரணமாக மக்களிடையே அச்சம் இருப்பது இயல்பான ஒன்று என்றாலும், செம்பரம்பாக்கம் ஏரி தன் முழு கொள்ளளவை இன்னும் எட்டவில்லை.

Advertisement

சென்னை மாநகருக்கு தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் இரண்டு முக்கிய ஏரிகளாக செம்பரம்பாக்கம் மற்றும் புழல் உள்ளன. இதில், செம்பரம்பாக்கம் ஏரியின் முழு கொள்ளளவு 3,645 எம்சி. நவம்பர் 13-ம் தேதி ஏரியின் நீர் இருப்பு 2,576 எம்சி ஆக இருந்தது. இது ஏரியின் மொத்தக் கொள்ளளவில் 70.6% ஆகும்.

” சமீபத்தில் செய்து வரும் (12மிமீ மழையளவு) தொடர் மழைக்காரணமாகவும், செங்குன்றத்தில் நிறுத்தி வைக்கப்படும் கிருஷ்ணா நதிநீர் திறந்து விடப்பட்ட காரணத்தினாலும் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. ஸ்ரீபெரும்புதூர் மற்றும் பிள்ளை பக்கத்தில் உள்ள நீர்த் தொட்டிகள் நிறைந்த பிறகு செம்பரம்பாக்கம் ஏரி முழு அளவை எட்டும். 175 எம்சி கொள்ளளவு கொண்ட இரண்டு தொட்டிகளும் தற்போது 125 எம்சி நிறைந்துள்ளன. அங்கு சராசரி மழையளவு பெய்து வருகிறது.

செம்பரம்பாக்கம் ஏரி பகுதியில் சுமார் 25 மிமீ அளவிற்கு தினமும் மழை பதிவாகினால் மட்டுமே ஏரி முழு கொள்ளளவை எட்டும். கடந்த சில நாட்களாக 12 மிமீ மழையளவு மட்டுமே இப்பகுதியில் பதிவாகி இருக்கிறது ” என PWD அதிகாரிகள் தெரிவித்து உள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியில் நவம்பர் 14-ம் தேதி வெளியாகி இருக்கிறது.

Advertisement

செம்பரம்பாக்கம் ஏரி குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தன் முகநூல் பக்கத்தில், ” செம்பரம்பாக்கம் குறித்த பயம் முற்றிலும் தேவையற்றது. 1 டிஎம்சி தேவை இருக்கிறது. அடுத்த 2 நாட்களில் ஏரி நிரம்பி இருந்தாலும் கூட, அவ்வாறு நடக்க வாய்ப்பில்லை. இப்போதே வெள்ளம் குறித்த பயம் தேவையில்லை. கடந்த காலங்களில் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி, வெள்ளம் இல்லாமல் நீர் வெளியேற்றப்பட்டதை நாம் கண்டுள்ளோம். அதிகபட்ச வெள்ள அளவை  கடந்தால் மட்டுமே வெள்ளம் குறித்து நாம் கவலைப்பட வேண்டும். எனவே தயவு செய்து இப்போதே கவலைப்பட வேண்டாம் ” என நவம்பர் 15ம் தேதி பதிவிட்டு இருக்கிறார்.

யூடர்ன் தரப்பில் இருந்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டு பேசிய போது, ” தொடர்ந்து மழை பெய்து வருவதால் தண்ணீரின் அளவு அதிகரித்து வருகிறது. இதற்காக முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தண்ணீரை வெளியேற்றினால் எளிதாக செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள் ” எனத் தெரிவித்து இருந்தார்.

சென்னை பெருநகரத்தின் ஏரிகளின் கொள்ளளவு குறித்த தரவுகளில் செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளவை அப்டேட் செய்து இருக்கிறார்கள். நவம்பர் 13-ம் தேதி 2,756 எம்சி ஆக இருந்த கொள்ளளவு நவம்பர் 16-ம் தேதி 2,781 எம்சி ஆக மட்டுமே உயர்ந்து இருக்கிறது. எனவே, தேவையற்ற அச்சத்தை மக்களிடையே உருவாக்க வேண்டாம்.

Links : 

Chennai: Chembarambakkam lake nears 70% of its capacity

Chennai Metropolitan Water Supply & Sewerage Board

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button