This article is from Aug 17, 2020

சென்னை சென்ட்ரலில் தமிழ் மொழி நீக்கப்படவில்லை !

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயரை அதிமுக தலைமையிலான தமிழக அரசு ” புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி.இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் ” என மாற்றி இருந்தனர். இதையடுத்து, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் புதிதாக வைக்கப்பட்ட பெயர் பலகையில் தமிழ் மொழி இல்லை என்றும், இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே இடம்பெற்று இருப்பதாக ஓர் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Twitter link | archive link

முன்பு ” சென்னை சென்ட்ரல் ” என இருந்த போது தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இருந்த பெயர் பலகை தற்போது இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் இருப்பதாக பதிவிட்டு வருகிறார்கள். ஆனால், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தமிழில் பெயர் இடம்பெற்று உள்ளது. முதலில் தமிழ் மொழியிலும், அடுத்த இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பெயர் பலகை வைக்கப்பட்டு உள்ளது.

Twitter link | archive link 

ஏற்கனவே தமிழக ரயில் நிலையங்களில் முதன்மையாக இருந்த தமிழ் மொழியை ஒதுக்கிவிட்டு இந்தியில் இருந்த பெயர்களால் சர்ச்சைகள் எழுந்தன. அதுபோல், சென்னை சென்ட்ரலில் தமிழ் மொழி நீக்கப்பட்டு இருக்கும் என இப்புகைப்படத்தை பகிர்ந்து உள்ளனர். ஆனால், சென்னை சென்ட்ரலில் தமிழ் மொழியிலும் பெயர் பலகை முதன்மையாக உள்ளது.

Facebook link | archive link 

Link : 

Following outcry, ‘Chennai’ to be included on name boards of trains heading to Central station

Please complete the required fields.




Back to top button
loader