சென்னை மாநகராட்சி கட்டிடத்தில் “தமிழ் வாழ்க” பெயர் பலகை நீக்கம் எப்போது, ஏன் ?

சென்னை மாநகராட்சி அலுவலகம் இயங்கும் ரிப்பன் கட்டிடத்தின் மீது அமைக்கப்பட்டு இருந்த ” தமிழ் வாழ்க ” எனும் பெயர் பலகை நீக்கப்பட்டு இருப்பதாக சமூக வலைதளங்களில் புகைப்படத்துடன் கூடிய கண்டனப் பதிவுகள் எழுந்து வருகிறது.

Advertisement

சமீபத்தில் தான் சென்னை மாநகராட்சி கட்டிடத்தில் இருந்து ” தமிழ் வாழ்க ” பெயர் பலகையை நீக்கியதாக இரு புகைப்படங்களை ஒப்பிட்டு பகிர்ந்து வருகிறார்கள். இதன் உண்மைத்தன்மை குறித்து வாசகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

உண்மை என்ன ?

சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படங்கள் குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத  சென்னை மாநகராட்சி அதிகாரிகளைத் தொடர்பு கொண்ட போது, ” அந்த பதாகை 2009ல் எடுக்கப்பட்டது. 2009ம் ஆண்டு டிசம்பரில் JNNURM நிதி வழியாக ரிப்பன் கட்டிடம் மறுசீரமைப்பு செய்யப்பட்ட பொழுது அந்த பதாகை நீக்கப்பட்டது. யாரோ பழைய புகைப்படத்தை எடுத்து சமூக வலைதளங்களில் இப்பொழுது எடுத்தது போல் தவறாக பரப்புகிறார்கள். அந்த பலகை உடைந்து விழும் நிலையில் பழுது அடைந்த காரணத்திற்காகவே அகற்றப்பட்டது. அதை மீண்டும் அமைப்பதை கமிஷனர் அளவில் தான் ஆலோசிக்க வேண்டும் ” எனக் கூறினார்கள்.

Advertisement

2010-ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி வெளியான நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில், ” JNNURM கீழ் 7.7 கோடி ரூபாய் மதிப்பில் ரிப்பன் பில்டிங் மறுசீரமைப்பு பணிகள் அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள்  முடிவடையும் ” எனக் கூறப்பட்டுள்ளது.

புகைப்பட விற்பனை தளமான alamy இணையதளத்தில், 2009 மே மாதம் தேதியிட்டு வெளியிட்ட புகைப்படத்திலும் பெயர் பலகை இருக்கிறது. அதேபோல், 2009 ஜூன் 13ம் தேதி எடுக்கப்பட்டதாக வெளியிடப்பட்ட ரிப்பன் பில்டிங் புகைப்படத்தில் ” தமிழ் வாழ்க ” பெயர் பலகை இரவில் மின்னுவதை பார்க்கலாம்.

2019ம் ஆண்டு வெளியான நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் பயன்படுத்தப்பட்ட சென்னை மாநகராட்சி கட்டடத்தின் புகைப்படத்தில் ” தமிழ் வாழ்க ” பெயர் பலகை இல்லை.

2020 மே மாதம் கொரோனா பொதுமுடக்க காலத்தில் நூற்றுக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் ரிப்பன் பில்டிங் வெளியே ட்ராவல் பாஸ்களை பெற்றதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் வெளியான செய்தியில் இடம்பெற்ற புகைப்படத்தில் ” தமிழ் வாழ்க ” பெயர் பலகை இடம்பெறாததை பார்க்கலாம்.

முடிவு : 

நம் தேடலில், சென்னை மாநகராட்சி கட்டிடமாக ரிப்பன் பில்டிங்கில் இருந்த ” தமிழ் வாழ்க ” பெயர் பலகை சமீபத்தில் நீக்கப்படவில்லை. சமீபத்தில் நீக்கப்பட்டு இருந்தால் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் ஊடகத்தினரின் கவனத்தை பெற்று கண்டனத்தைப் பெற்று இருக்கும்.

ரிப்பன் பில்டிங்கில் 2009ம் ஆண்டு தொடங்கப்பட்ட மறுசீரமைப்பு பணிகளின் போது பெயர் பலகை நீக்கப்பட்டதாகவும், அது நீக்கப்பட்டு பல ஆண்டுகளாகியதாகவும், பழைய படங்களை வைத்து வதந்திகளை பரப்புவதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.

Links : 

Will ensure migrants return to work routine: Chennai Corporation on lockdown

corpn-calls-for-curbing-setback-space-violations

‘Ripon building restoration by March’

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button