This article is from Nov 20, 2018

நாளை முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் தொடங்குகிறது மழை! – Tamilnadu Weather Man

தமிழக டெல்டா பகுதிகள் சில தினங்களுக்கு முன்னர் கஜா புயல் மற்றும் மழையினால் மிகவும் பாதிக்கப்பட்டது. டெல்டா பகுதிகளில் பொழிந்த மழையை தொடர்ந்து நாளை முதல் காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை உள்ளிட்ட வடதமிழகத்திற்கும் நாளை முதல் மழை தொடங்குவதாக தமிழ்நாடு வெதெர்மேன் தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு வடக்கு-வட மேற்கு திசையில் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் கடலூர் பகுதியை நோக்கி 21-ஆம் தேதி காலை நகரலாம். காற்று குறைவாக இருக்கும், காற்றுழுத்தம் இன்னும் தாழ்வு நிலைக்கு சென்று தீவிரமடைந்து நிலத்திற்கு அருகே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடலூர்-பாண்டிச்சேரி – விழுப்புரம் ஆகிய இடங்களில் மிக அதிக கனமழை இருக்கும். காரைக்கால், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், காஞ்சிபுரம்,திருவள்ளூர், சென்னை மற்றும் திருவண்ணாமலையில் கனமழையை காணலாம். அருகிலுள்ள மற்ற மாவட்டங்கள் நல்ல மழையை பெறும்.

“கண்டிப்பாக இது தமிழகத்திற்கு குறிப்பாக வடதமிழகத்திற்கு ரெட் அலெர்ட் தருவதற்கு ஏற்றதாகும்” – வடதமிழக மாவட்டங்கள் கடுமையான மழையை சந்திக்க இருக்கிறது.

இன்று மிதமான மழை தொடங்கி 20-தேதி இரவு மற்றும் 21-ஆம் தேதி காலையில் கனமழையாக மாறி மறுபடியும் 22-ஆம் தேதி வரை தொடரும். பிறகு 23-ஆம் தேதியிலிருந்து மழை குறைய தொடங்கும். சென்னை பொதுவாக மூன்று மாத வடகிழக்கு பருவமழையில் 850-mm மழையை பெறும். இன்றைய தேதியில் 225-mm வரை தான் பெற்றிருக்கிறது.அடுத்த மூன்று நாள் மழை மிகவும் முக்கியமானது. சென்னையிலுள்ள ஏரிகளை இந்த மழை மட்டும் நிரப்பி விடாது. மற்றொரு மழை பொழிவாவது வேண்டும். இந்த மழையை வீணாக்காமல் மழை நீர் சேமிப்பை தயார் படுத்தி நல்ல முறையில் சேமிக்க வேண்டும்.

தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், வேலூர் மற்றும் நாமக்கலும் கூட ஒரு நாள் மழையை பெறும்.

நாகை மற்றும் தஞ்சாவூர் 20 மற்றும் 21-இல் கனமழையை பெறும் மற்றும் மீதமுள்ள கஜா புயல் பாதித்த பகுதிகளான புதுக்கோட்டை மற்றும் திருவாரூர் ஒரு நாள் மிதமான மழையை சந்திக்கும்.

இந்த காற்றினை கஜாவுடன் ஒப்பிட கூடாது. கரையை கடக்க அதிகபட்சமாக ஒரு நாள் எடுத்து கொள்ளும், அது கடலில் மேலும் தீவிரமடையும். இப்போதுவரை காற்றழுத்தம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மேலும் தீவிரமாக மாறலாம். வட தமிழக மாவட்டங்களான கடலூர் மற்றும் பாண்டியில் 50-60 km/hr வரை காற்றை எதிர்பார்க்கலாம்.

வடகிழக்கு பருவ மழை இதோடு முடியவில்லை மேலும் தொடரும் என எதிர்பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.

Please complete the required fields.




Back to top button
loader