This article is from Aug 22, 2019

தன்னால் திறக்கப்பட்ட சிபிஐ கட்டிடத்திலேயே ப.சிதம்பரம் அடைக்கப்பட்டாரா ?

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ப.சிதம்பரத்தை கைது செய்யும் நடவடிக்கையில் டெல்லியில் உள்ள அவரின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சுவரை ஏறிக் குதித்து கைது செய்துள்ளனர்.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்து சென்று காவலில் வைக்கப்பட்டார். இந்நிலையில், அவர் அடைத்து வைக்கப்பட்ட சிபிஐ தலைமை அலுவலகத்தைத் திறந்து வைத்ததே ப.சிதம்பரம் தான் என இந்திய அளவில் வீடியோக்கள், செய்திகள் பரவி வருகின்றன.

2011-ம் ஆண்டில் ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்த பொழுது டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தின் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. அந்த திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டார். அவருடன் ப.சிதம்பரம் இருக்கும் நிகழ்ச்சி வீடியோவை ANI நியூஸ் வெளியிட்டு இருந்தது.


அதில், 2011 ஜூன் 30-ம் தேதி டெல்லியில் மத்திய புலனாய்வு செயலகத்தின் புதிய தலைமையகத்தின் திறப்பு விழாவில் முன்னாள் யூனியன் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம். நேற்று சிபிஐ மூலம் கைது செய்யப்பட்ட சிதம்பரம் இந்த கட்டிடத்தில் தான் வைக்கப்பட்டார் ” என ஆகஸ்ட் 21-ம் தேதி ட்விட்டரில் பதிவிட்டு உள்ளனர்.

கைதான நாளில் டெல்லி சிபிஐ-யின் தலைமை அலுவலகத்தில் ப.சிதம்பரம் சிபிஐ காவலில் வைக்கப்பட்டார். ஆகஸ்ட் 22-ம் தேதி மாலை 3.15 மணியளவில் சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி அஜய் குமார் முன்னால் ஆஜர்ப்படுத்தப்பட்டார். இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாதங்கள் எழுந்துள்ளன.

ப.சிதம்பரம் மீதான வழக்கின் விவரம் அறிய காணொளியை கிளிக் செய்க :

Proof : 

P Chidambaram Spent Night At CBI Office Opened When He Was Home Minister

ANI news file footage 

Please complete the required fields.




Back to top button
loader