மார்ஃபிங் செய்யப்பட்ட அனிகா வீடியோ.. தெரிந்தும் ஏசியாநெட் வைத்த ஆபாச தலைப்பு!

தமிழ் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய அனிகா அடிக்கடி ஃபோட்டோஷூட் வைத்து வளர்ந்து வரும் நடிகையாக காண்பித்துக் கொள்ளும் வகையில் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதுண்டு. அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ஆதரவும், எதிர் விமர்சனங்களும் எழுவதுண்டு.

Advertisement

இந்நிலையில், ஆபாசமான உடையில் அனிகா நடனம் ஆடுவதாக மார்ஃபிங்  செய்யப்பட்ட தவறான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியது தொடர்பாக செய்தி வெளியிட்ட ஏசியாநெட், ” அந்த பச்சைக் குழந்தை நடிகையா இப்படியொரு படுகவர்ச்சி குத்தாட்டம் போட்டது ..? இதெல்லாம் ரொம்ப ரொம்ப ஓவர் ” என செய்திக்கும் தலைப்பிற்கு சம்பந்தம் இல்லாத மோசமான தலைப்பிட்டு உள்ளது.

Facebook link | Archive link 

18 வயது கூட நிரம்பாத அனிகா தொடர்பான மார்பிங் வீடியோ விவகாரத்தில், பொறுப்புள்ள செய்தி தளமாக இருந்து செய்தியின் தலைப்பில் உண்மையை தெரிவித்து, புகைப்படத்தையும் ப்ளர் செய்து இருக்க வேண்டும் அல்லவா. அதைவிடுத்து, க்ளிக் பைட்காக பரவிய செய்தியை உண்மை எனும் தோணியில் தலைப்பிட்டு செய்தி வெளியிட்டு இருக்கிறது ஏசியாநெட் தமிழ்.

ஒரு இளம்பெண் அனிகாவின் முகத்தை மார்பிங் செய்து தவறான வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் எனத் தெரிய வந்துள்ளது. Artificial intelligence, Deep Fake வீடியோக்கள் இணையத்தில் அதிகம் பரவும் காலத்திற்கு நகர்ந்து கொண்டு இருக்கிறோம். இதன் மூலம் ஒருவரை மிக மோசமாக சித்தரிக்கும் வகையில் வீடியோக்களை வெளியிட முடியும்.

ஏசியாநெட் தமிழ் செய்தி தளத்திற்கு இப்படி செய்வது இது முதல்முறை அல்ல. 2018-ல் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமான அறிமுகமாகிய சாரா நிகழ்ச்சி ஒன்றில் எடுத்து கொண்ட புகைப்படத்தை ஆபாசமாக சித்தரிக்கும் விதத்தில் செய்தி வெளியிட்டது. அப்போதும் யூடர்ன் தரப்பில் கட்டுரை வெளியிட்டோம். பின்னர் அந்த செய்தியே நீக்கப்பட்டது.

Advertisement

மேலும் படிக்க : பிரபல குழந்தை  நட்சத்திரம் பற்றி ஆபாச தலைப்பு !

சமீபத்தில் கூட, இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர் நடராஜன் குறித்தும் ஜீன்ஸ், கண்ணாடி அணிந்து புகழ் போதையில் இருப்பதாக என்றெல்லாம் தலைப்பிட்டு, பின்னர்  மக்களிடையே கடுமையான கண்டனத்தை பெற்று செய்தியையே மொத்தமாக மாற்றியது. அச்சமயத்திலும், அது தொடர்பாக யூடர்ன் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

மேலும் படிக்க : நடராஜன் மீது ஏன் இந்த வன்மம்.. கண்ணாடி, டாட்டூ போட்டால் புகழ் தலைக்கனமா ?

18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை தவறாக சித்தரிப்பதற்கு போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. அதை வேறு ஒருவர் சித்தரித்து இருந்தாலும், அதை அப்படியே பகிர்வது சரியானது அல்ல. அதுபோன்ற புகைப்படங்களை முறையாக ஃபளர் செய்து வெளியிட வேண்டும். வெறும் க்ளிக் பைட்காக ஆபாச தலைப்புகளை வைப்பது கண்டிக்கத்தக்கது.

பொறுப்புள்ள செய்தி தளமாக, செய்திகள் உண்மைத்தன்மையை கூறுவது மட்டுமின்றி அதை சரியான விதத்திலும் வெளியிட வேண்டியது அவசியம். அதுவும், பெண்கள், குழந்தைகள் சார்ந்த செய்திகளில் கவனமாக கையாள வேண்டியது அவசியமட்டுமல்ல, பொறுப்புடைமையாகும்.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button