மங்களூரில் பிச்சை எடுக்கும் குழுவில் மீட்கப்பட்ட குழந்தையா?| உண்மை என்ன ?

மதிப்பீடு

மங்களூர் பகுதியில் தமிழ் பிச்சைக்காரர்கள் குழுவில் இருக்கும் அழகான குழந்தை. குழந்தையை அடையாளம் காண மற்றும் பெற்றோரிடம் சென்றயும் வரை பகிருங்கள்.

” 👆This little beautiful girl was seen in Mangalore with a group of Tamil beggars.Please forward until it reaches the right parent and she is identified. She knows her name & says she is Sonal Bipin Patel.
Please post this photo on all your groups.The beggars say she was found in a train coming from Mumbai.May be she can get her life back. 🙏 “

Advertisement

Facebook link | archived link  

Mruthyumjayudu Pilli என்ற முகநூல் பக்கத்தில், சிவப்பு நிற உடையில் அழுகையுடன் இருக்கும் குழந்தையிடம் பெயர், யார் என்ற விவரங்களை கேட்கும் குரல் பதிவாகி இருக்கும் வீடியோவை இணைத்து மங்களூர் பகுதியில் பிச்சை எடுக்கும் குழுவில் கண்டெடுக்கப்பட்ட குழந்தை எனக் குறிப்பிட்டு இருக்கும் பதிவு 7 ஆயிரம் ஷேர்கள் மற்றும் லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ், கன்னடா மட்டுமின்றி ஹிந்தி மொழியிலும் என இந்திய அளவில் இக்குழந்தையின் வீடியோ முகநூல், ட்விட்டர் உள்ளிட்டவையில் பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மைத்தன்மையை கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டது.

Advertisement

உண்மை என்ன ? 

Twitter link | archived link

மங்களூர் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட குழந்தை என வைரலாகும் வீடியோ குறித்து தேடிய பொழுது, 2018-ல் ஜனவரி 30-ம் தேதி அருண் சவுத்ரி என்ற ட்விட்டர்வாசி இதே குழந்தை வீடியோவை பதிவிட்டு, தொடர்பு கொள்ள வேண்டிய எண்ணுடன் உத்தரப் பிரதேச காவல்துறை மற்றும் காஸியாபாத் காவல்துறையை டாக் செய்து பதிவிட்டு இருந்தார்.

Twitter link | archived link

அதே நாளில், அருண் சவுத்ரி ட்வீட் பதிவிற்கு பதில் அளித்த காஸியாபாத் காவல்துறை, ” சமூக வலைதளத்தின் செய்தியால் குழந்தை பெற்றோர்களிடம் சேர்ந்துள்ளார் ” எனப் பதிவிட்டு உள்ளனர்.

நியூஸ்செக்கர் என்ற இணையதளத்தில், குழந்தை குறித்த விவரங்கள் தெரிந்தால் தொடர்பு கொள்ளுமாறு வழங்கப்பட்ட Roki Bhasoria 7000818182 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசிய பொழுது மத்திய பிரதேச மாநிலத்தின் மோகன் நகரில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தவறுதலாக தன் வீட்டிற்கு வந்த காரணத்தினால் ட்விட்டரில் பதிவிட்டதாகவும், குழந்தை பெற்றோர்களிடம் சேர்க்கப்பட்டது குறித்து பிறகு பதிவிட்டு உள்ளதாகவும் என சம்பந்தப்பட்ட நபர் கூறியதாக ” வெளியாகி இருக்கிறது. தற்பொழுது, மேற்காணும் செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது.

இதே கதை வேறு புகைப்படம் : 

Facebook link | archived link 

இதற்கு முன்பாக, ” மங்களூர் பகுதியில் தமிழ் பிச்சைக்காரர்கள் குழுவில் இருக்கும் அழகான குழந்தை. குழந்தையை அடையாளம் காண மற்றும் பெற்றோரிடம் சென்றயும் வரை பகிருங்கள் ” என்ற அதே வாசகத்துடன் வேறொரு குழந்தை கையில் பணத்துடன் அமர்ந்து இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி இருப்பதை காண நேரிட்டது.

அக்குழந்தையின் கையில் இருக்கும் தட்டில் உள்ள பணம் இந்திய ரூபாய் நோட்டுகளை போல் இல்லை, பங்களாதேஷ் நாட்டின் பணத்தை போல் உள்ளது. பிற நாட்டில் உள்ள குழந்தையின் புகைப்படத்தை இந்தியாவின் மங்களூர் பகுதியில் பிச்சை எடுக்கும் குழுவில் கண்டெடுத்ததாக தவறான செய்தியை சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர்.

அதேபோல், 2018-ல் மத்தியப் பிரதேசத்தில் குழந்தையை பற்றி அறிந்தால் தெரிவிக்குமாறு பதிவான ட்வீட் வீடியோவானது குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகும் இந்திய அளவில் தவறான தகவல்களுடன் வைரலாகி வருகிறது.

மேற்காணும் குழந்தைகளின் வீடியோ மற்றும் புகைப்படத்தை காண நேரிட்டால், அவற்றை பகிராமல் உண்மை தகவல் என்ன என்பதை அனைவருக்கும் தெரிவியுங்கள்.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close