Articles

CM மோடியால் எதிர்க்கப்பட்டு PM மோடியால் வரவேற்கப்பட்டவை !

குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்த போது நரேந்திர மோடி அவர்களால் எதிர்க்கப்பட்ட ஜி.எஸ்.டி, ஆதார், பெட்ரோல் விலை உயர்வு, குறைந்த பொருளாதார வளர்ச்சி போன்றவை பிரதமர் ஆகிய பின் அவரால் ஆதரிக்கப்பட்டதாக கூறி அதிகம் பகிரப்படுகிறது. இந்த மீம் பதிவு அதிகம் வைரலாகியவை. அவற்றில் உள்ளதை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

Advertisement

GST எதிர்ப்பு :

2016-ல் சரக்கு மற்றும் சேவை வரியான GST தொடர்பான விவாதத்தில் எதிர் கட்சியில் இருந்து எதிர்ப்பு தெரிவித்தவர்கள் GST வரியை அமல்படுத்துகிறார்கள் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே கூறினார்.

மேலும், முதல்வர் மோடி ஜி.எஸ்.டி க்கு எதிராக பேசிய வீடியோவையும் வெளியிட்டது காங்கிரஸ்.

அந்த விவாதத்தில் பேசிய பிரதமர் மோடி, “ ஒரு முதல்வராக நான் கொண்ட அனுபவத்தில் பல்வேறு சந்தேகங்கள் சரக்கு மற்றும் சேவை வரி மீது இருந்தது. ஆனால், பிரதமராக வரியில் இருந்த பிரச்சனைகளை எளிதாக கண்டறிய முடிந்தது என கூறினார் “.

இன்று GST வரியால் லட்சக்கணக்கான கோடி வருவாய் ஈட்டுவதாக மத்திய அரசு பெருமைப்பட்டுக் கொள்கிறது.

லோக்பால் :

காங்கிரஸ் ஆட்சியில் லோக்பால் சட்டம் கொண்டு வர வேண்டும் என அண்ணா ஹசாரே போராடிய போது அதற்காக ஆதரவு அளித்து பேசியது பிஜேபி.

ஆனால், 2017-ல் பேசிய அண்ணா ஹசாரே, “ ஊழற்ற இந்தியாவை உருவாக்குவேன் என கூறிய பிரதமர் மோடி தன் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை மற்றும் லோக்பால் மசோதாவை செயல்படுத்துவதில் ஒன்றும் செய்யவில்லை எனக் குற்றம்சாற்றியுள்ளார் “.

பிரதமர் மோடி ஆட்சியில் லோக்பால் மசோதா குறித்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், லோக்பால் குழுவின் அதிகாரிகளை பிப்ரவரி 2019 இறுதிக்குள் நியமிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்தே, மத்திய அரசு லோக்பால் அதிகாரிகளுக்கான விண்ணப்பங்களை பெற்று வருகிறது.

FDI :

சில்லறை வியாபாரத்தில் அந்நிய நேரடி முதலீடுகள்(FDI) அனுமதிப்பது குறித்த காங்கிரஸின் முடிவை தங்கள் இறுதி மூச்சு இருக்கும் வரை எதிர்போம் என்றார் பிஜேபியின் தலைவர் அருண் ஜேட்லி. இது குறித்த செய்திகள் 2013-ல் வெளியாகியது.

மேலும், முதல்வர் மோடியின் ட்விட்டர் பதிவு,

இதற்கு முன்பாக சில்லறை வியாபாரத்தில் 49% வரை மட்டுமே அரசு அங்கீகாரம் இல்லாமல் அந்நிய நேரடி முதலீடு செய்ய அனுமதி கொடுக்கப்பட்டது. தற்போது FDI-க்கு 100% அனுமதி அளித்தது பிரதமர் மோடி அரசு. சிங்கிள் பிராண்ட் சில்லறை வணிகத்தில் 100% வெளிநாட்டு நேரடி முதலீடு செய்யலாம் என அனுமதித்தனர்.

இதனால், பன்னாட்டு நிறுவனங்களுடன் இந்திய வர்த்தகர்கள் நேரடியாக போட்டியிடும் சூழல் உண்டாகி உள்ளது. இது பாஜக தேர்தல் வாக்குறுதிக்கு எதிராகவும், இந்திய சிறு வர்த்தகர்களின் நலனுக்கு எதிராக உள்ளதாகவும் அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு எதிர்ப்பினை பதிவு செய்தது. ஆனால், இந்திய சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் வரவேற்பு அளித்தது.

ஆதார் :

ஆதார் அடையாள அட்டை விவகாரத்தில் காங்கிரஸ் ஆட்சியில் எதிர்ப்பு தெரிவித்த மோடி பிரதமர் ஆகிய பின் ஆதாரை காட்டாயமாக்கினார். மோடி ஆட்சியில் ஆதார் திட்டம் இரண்டாம் முறையாக உயிர்பித்தது.

2014-ல் மோடி ஆதார் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ட்விட்டை பதிவிட்டு இருந்தார். அதை ஏற்காமல், இது போட்டோஷாப் செய்யப்பட்டவை என கூறினார். ஆனால், உண்மையில் அவர் பதிவிட்ட பதிவே. ட்விட்டரில் இருந்து நீக்கப்பட்ட ஆதார் எதிர்ப்பு பதிவு மீண்டும் எடுக்கப்பட்டது.

பிரதமர் மோடி கூறியவை, “ நாட்டின் அனைத்து மக்களுக்கும் பொதுவான அடையாள அட்டை தேவை என்பது வாஜ்பாய் அரசின் போதே உணரப்பட்டது. அதற்கான பணிகளை அமைச்சர்கள் குழு மேற்கொண்டனர். ஆனால், UPA 1-ன் ஆட்சியில் அது தொடர்பான எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. UPA 2-ல் ஆதார் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது “.

ஆதார் அறிமுகப்படுத்திய போது அதில் பல பிரச்சனைகள் மற்றும் போதாமை இருந்தன. நான் பல யோசனைகளை வழங்கிய போது நரேந்திர மோடி ஆலோசனையை UPA அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. எங்களின் பிரச்சனை ஆதார் மீது அல்ல. அதில் இருந்த போதாமை மீதே என மோடி கூறியிருந்தார்.

MGNREGA :

2006 ஆம் ஆண்டில் Mahatma Gandhi National Rural Employment Guarantee act(MGNREGA) என்ற 100 நாள் வேலைத் திட்டம் சோதனை முயற்சியாக 200 மாவட்டங்களில் தொடங்கப்பட்டன.

தொடக்கம் முதலே MGNREGA திட்டம் மீது நரேந்திர மோடி அவர்களுக்கு நன்மதிப்பு இல்லை. அந்த திட்டத்தை எதிர்க்கவே செய்தார். 2015 பட்ஜெட்டில் கூட நிதியமைச்சர் அருண் ஜேட்லி இத்திட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் எண்ணத்தில் இல்லை எனக் கூறினார். 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிகள் சரியாக நடைபெறவில்லை எனக் கருதினர். வேறு வழியின்றி அத்திட்டத்திற்கான நிதியானது பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டு வருகிறது.

காங்கிரஸின் 100 நாள் வேலைத் திட்டம் குறித்து நகைச்சுவையாக பேசிய பிரதமர் மோடி MGNREGA திட்டத்தை இன்னும் சிறப்பாக செய்வோம் என லோக் சபாவில் தெரிவித்து இருந்தார்.

நேரடி மானியப் பரிமாற்றம்  :

Directly benefits transfer என்னும் திட்டமானது பயனாளர்களுக்கு மானியத்தை நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்துவதை நோக்கமாக கொண்டது.

2017-ல் கர்நாடகாவில் பேசிய பிரதமர் மோடி, நாங்கள் தொடங்கிய Directly benefits transfer மூலம் சரியான மக்களுக்கு தொகை சென்றடையச் செய்து நடுத்தரகர்களை நீக்கியதாக கூறி இருந்தார்.

ஆனால், Directly benefits transfer திட்டம் காங்கிரஸ் ஆட்சியில் 2013-2014 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. 2013-2014 நிதியாண்டில் Directly benefits transfer முயற்சியால் 7 ஆயிரம் கோடி அளவிற்கு தொகை செலுத்தப்பட்டு உள்ளது.

தற்பொழுது, Directly benefits transfer திட்டத்தை பெருமையாக பேசி வருகிறது மோடி அரசு.

பெட்ரோல் விலை அதிகரிப்பு :

காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல் விலை உயர்ந்த போது அதற்காக கடுமையான விமர்சனத்தை முதல்வர் மோடி மற்றும் பிஜேபியை சேர்ந்த பலரும் முன்னிறுத்தி பிரச்சாரம் செய்தனர். முதல்வர் மோடி காங்கிரஸ் அரசு தோல்வியடைந்தாக விமர்சித்தார்.

ஆனால், பிரதமர் மோடியின் ஆட்சியில் உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து இருந்த போதிலும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் மட்டுமே கண்டது. தேர்தல் சமயங்களில் மட்டும் நிலையான விலை மற்றும் விலை குறைப்பு நிகழும்.

இந்தியா ஏற்றுமதி செய்யும் பெட்ரோலின் விலை ரூ.34 மட்டுமா???

குறைந்த அளவிலான GDP வளர்ச்சி :

காங்கிரஸ் ஆட்சியில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி(GDP) குறைந்த அளவில் வளர்ச்சி கண்டதை முதல்வராக இருந்த மோடி விமர்சனம் செய்தார். ஆனால், பிரதமர் ஆகிய பின் குறைந்த அளவில் GDP வளர்ச்சி அவர்களுக்கு போதுமானதாக உள்ளதாக கூறுகின்றனர்.

ஆம், மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) காங்கிரஸ் ஆட்சியில் ஒரு நிலையானதாக இருந்திருக்க வாய்ப்பில்லை. நிதியாண்டு 2006-2008-ல் நாட்டின் GDP 9.0 %  ஆக இருந்துள்ளது. அதன்பின் ஏற்றம் இறக்கம் கண்டு 2011 நிதியாண்டில் அதிகபட்சமாக 10.3% என சென்று பின் 8.5 % ஆகியது.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் 2006-2012 நிதியாண்டின் GDP வளர்ச்சியின் சராசரி 7.75% -ல் இருந்து 6.82% ஆக வீழ்ச்சி அடைந்தது. தற்போது பிஜேபி ஆட்சியில் குறைந்த அளவிலான GDP வளர்ச்சியில் 7.35% ஆக மாறியுள்ளது.

ஆட்சிக்கு வருவதற்கு முன் எதிர்ப்பதும், பின் ஆட்சிக்கு வந்த பின் கண்டு கொள்ளாமல் இருப்பது, ஆதரிப்பது போன்றவை ஆண்டாண்டு காலமாக பலரின் ஆட்சியில் பார்த்து விட்டோம். இதே பிஜேபி அரசு கொண்டு வரும் திட்டங்கள் அடுத்து வரும் ஆட்சியில் மாற்றப்படலாம், நீக்கப்படலாம், தொடரவும் செய்யலாம்.

ஆகையால், அரசியல் களத்திற்கு ஏற்றார் போல் அரசியல்வாதிகள் அனைவரும் மாறுவர் என்பதை முதலில் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

Rising petrol prices: What Narendra Modi said before 2014 and his govt did in 4 years

10 years of MGNREGA: How the Modi government was forced to adopt the scheme

How Aadhaar scheme got a second life under PM Modi

Will oppose FDI till our last breath : bjp

Narendra Modi Govt Allows 100% FDI in Single-Brand Retail, Opens Door to Global Players Like Ikea

Ahead of 2019 polls, government slashes UPA era GDP growth rate 

‘I Doubted GST As Chief Minister’: PM Modi Answers Critics

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button