உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிப் பெற்ற கல்லூரி மாணவியின் பின்புலம்.

தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் முடிவுகள் நேற்று(ஜனவரி2-ம் தேதி) முதல் வெளியாகி வருகிறது. வெற்றிப் பெற்றவர்களின் விவரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக செய்திகளில், சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றன. அதில், சூளகிரி பகுதியில் 21 வயது கல்லூரி மாணவி ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காட்டிநாயக்கன்தொட்டி(கே.என்தொட்டி) பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 21 வயதான கல்லூரி மாணவி சந்தியா ராணி வெற்றி பெற்றார். அவரின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் ஊர் மக்கள் தரப்பில் சிறப்பான வரவேற்புகள் அளிக்கப்பட்டன.

Advertisement

எனினும், மறுபுறம் வெற்றிப் பெற்ற கல்லூரி மாணவி அரசியல் பின்புலம் கொண்டவர் என்பதால் அவர் தேர்தலில் நின்றதாக கூறும் பதிவுகளையும் காண நேரிட்டது. இது குறித்து ஃபாலோயர் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.

காட்டிநாயக்கன்தொட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெயசாரதி என்பவரின் மகள்தான் சந்தியா ராணி. 2011-ல் ஜெயசாரதி காட்டிநாயக்கன்தொட்டி பகுதியின் பஞ்சாயத்து தலைவராக இருந்துள்ளார். சந்தியா ராணியின் தாத்தாவும் பஞ்சாயத்து தலைவராக இருந்தவர். சந்தியா ராணியின் தந்தை அதிமுக பிரமுகர் ஆவார். உள்ளாட்சித் தேர்தலில், ஜெயசாரதிக்கு சீட்டு கொடுக்க மறக்கப்பட்டு, அவருக்கு பதிலாக அதிமுக காட்டிநாயக்கன்தொட்டி பஞ்சாயத்து செயலாளரின் மனைவி அனிதாவிற்கு சீட் கொடுக்கப்பட்டதாக செய்தியில் வெளியாகி இருக்கிறது.

பல ஊராட்சிப் பகுதிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது போல் காட்டிநாயக்கன்தொட்டி பஞ்சாயத்தும் பெண்கள் பொதுபிரிவினருக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆகையால், ஜெயசாரதி தனது மகளை சுயேட்சையாக போட்டியிட வைத்துள்ளார். சந்தியா ராணி கர்நாடகா மாநிலத்தின் மாலூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ-யில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். சந்தியா ராணி பெற்ற மொத்த வாக்குகள் 1,170 மற்றும் 210 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளார்.

Advertisement

நடந்து முடிந்த தேர்தலில், சந்தியா ராணியின் தாய் புஷ்பாவின் பெயரிலும் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டு பின்னர் திரும்பப் பெறப்பட்டது. தாய் மற்றும் மகள் இருவருமே டிசம்பர் 16-ம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர்.

Proof links : 

College girl follows in father’s footsteps, voted panchayat president in Krishnagiri

village_panchayat_member_nomination_list_details

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
PHP Code Snippets Powered By : XYZScripts.com
Close
Close