This article is from Sep 08, 2019

சர்ச்சையாகும் கேள்வித்தாள், மறுக்கும் பள்ளி.. பாடத்திட்டத்தைக் கவனித்தீர்களா !

சமீபத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளியின் 6-ம் வகுப்பு கேள்வித்தாளில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் மற்றும் முஸ்லீம் மதத்தினர் குறித்த சர்ச்சைக்குரிய கேள்விகள் இடம்பெற்று உள்ளதாக முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி கண்டங்களை பெற்றது.

பலரும் நம்மிடம் கேந்திரிய வித்யாலயா பள்ளியின் சர்ச்சைக்குரிய கேள்வித்தாள் குறித்து கூறுமாறு கேட்டுக் கொண்டனர். இதனையடுத்து கேள்விகள் தொடர்பாக ஆராய்ந்த பொழுது, கேள்வித்தாள் வெளியிட்ட பள்ளிகள் குறித்த விவரங்கள் குறித்து தெரியவில்லை. ஆனால், இந்த கேள்விகளுக்கான பாடத்திட்டம் மத்திய அரசின் NCERT பாடத்திட்டத்தில் இருப்பதை வீடியோவாகவும், கட்டுரையாகவும் வெளியிட்டு இருந்தோம்.

மத்திய அரசின் NCERT பாடத்திட்டத்தில் 6-ம் வகுப்பு புத்தகத்தில் தலித், தீண்டத்தகாதவர்கள் என்ற வரிகள் குறித்த பாடம் இருப்பதை காண முடிந்தது. உதாரணமாக, வைரலானக் கேள்வித்தாளில் உள்ள ” identify the person who is considered as the father of indian Constitution and also the leader of the dalit ” என்ற கேள்விக்கு கொடுக்கப்பட்ட நான்கு பதிலில் அம்பேத்கர் உடைய பெயரும் இடம்பெற்று இருக்கும்.

அதேபோன்று, புத்தகத்தில் அம்பேத்கர் குறித்த விவரங்களில் ஆரம்பிக்கும் பொழுதே ” Dr.bhim rao ambedkar is considered the father of indian Constitution and is also the best leader of the dalit ” எனக் குறிப்பிட்டு இருக்கின்றனர். இதுபோல் ஒவ்வொரு கேள்விக்கும் ஏற்ற பாடம் NCERT பாடத்தில் இருக்கிறது. இவற்றில் இருந்து கேள்விக்கும், பாடத்திட்டத்திற்கும் இடையே இருக்கும் ஒற்றுமையை தெளிவாய் அறிந்து கொள்ள முடிகிறது.

கேந்திரிய வித்யாலயா பள்ளியின் பெயரில் வைரலாக செய்தி தற்பொழுது முதன்மை ஊடகச் செய்திகளிலும் கவனம் பெற்றதால் கேந்திரிய வித்யாலயா சர்ச்சையான கேள்வித்தாள் குறித்து மறுப்பு தெரிவித்து உள்ளது.

” சென்னை மண்டலத்துக்கு உட்பட்ட 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் இதுபோன்ற கேள்வித்தாள் தயாரிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது ”

சர்ச்சையாகும் கேள்வித்தாள் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் வெளியானதா எனத் தெரியவில்லை. ஆனால், இத்தகைய சர்ச்சைக்குரிய கேள்விகளுக்கு மூலக்காரணமாக இருக்கும் NCERT பாடத்திட்டத்தை கேந்திரிய வித்யாலயா மட்டுமின்றி சிபிஎஸ்இ மற்றும் நவோதயா பள்ளிகளிலும் பயன்படுத்தி வருகின்றனர்.

சர்ச்சையான கேள்வித்தாள் குறித்து விகடன் தரப்பினருக்கு கேந்திரிய வித்யாலயா சென்னை மண்டல நிர்வாகி கூறுகையில், ” எங்கள் பள்ளிகளுக்கு என்று தனியாகப் பாடப் புத்தகம் எதுவும் கிடையாது. இங்கு பயன்படுத்தப்படுபவை என்.சி.இ.ஆர்(NCERT) பாட நூல்கள்தான். குறிப்பிட்ட அந்த பக்கம் 6-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது உண்மைத்தான் ” எனக் கூறியுள்ளார்.

சென்னை மண்டலத்தில் கேள்வித்தாள் வெளியாகவில்லை என செய்திகளில் வெளியாகி இருந்தாலும் அந்த பாடத்தை தான் இந்திய அளவில் மாணவர்கள் படிக்கின்றார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஆனால், இந்த பாடங்கள் 6-ம் வகுப்போடு நிற்கவில்லை 8-ம் வகுப்பு பாடத்தில் ” lower caste ” மற்றும் ” Labour caste ” என குறிப்பிட்ட சமூகத்தினரின் பெயரையே குறிப்பிட்டு பாடத்தை அமைத்து உள்ளனர்.

அம்பேத்கரை தலித் சமூகத்தின் தலைவர் எனக் கூறியது போன்று, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு போராடிய ஜோதிரா பூலே-வை ” Low caste ” தலைவர் என்றே வெளிப்படையாக கூறி இருந்தனர். அன்றைய காலத்தில் ஒடுக்கப்பட்டவர்களா இருந்த மாணவர்கள் கல்வி கற்க வகுப்பறையின் வாசலில் அமர்ந்து கற்றதாகவும், கல்வியே இல்லாததற்கு அவ்வாறு படித்தது பரவாயில்லையா என்பது போன்று கேள்விகளும் மாணவர்களிடத்தில் கேட்கப்பட்டு இருக்கிறது.

பலரும் செய்திகளில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் அப்படியொரு சர்ச்சையான கேள்வித்தாள் வெளியாகவில்லை என அப்பள்ளி வெளியிட்ட மறுப்பு அறிக்கையை பகிர்ந்து கேள்வி எழுப்புகின்றனர். நாம் முதலில் இருந்தே அந்த கேள்விகளுக்கு காரணமாக இருக்கும் NCERT பாடத்திட்டத்தை குறித்தே விளக்கி பேசி வருகிறோம். மத்திய அரசின் பாடத்திட்டத்தை பின்பற்றும் சிபிஎஸ்ஏ, கேந்திரிய வித்யாலயா, நவோதயா பள்ளிகளில் மாணவர்களுக்கு எம்மாதிரியான பாடம் கற்பிக்கப்படுகிறது என்றே விவரித்து கூறியிருந்தோம்.

தமிழகப் பாடத்திட்டம் :

தமிழகத்தில் உள்ள சமச்சீர் பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்திலும் Untouchable, Upper caste மற்றும் Lower caste என்ற வார்த்தைகள் இருப்பதாக யூடர்ன் கமெண்ட்களில் கூறப்பட்டு இருந்தது. அதனைக் குறித்தும் நாங்கள் தேடினோம்.

புதிதாக திருத்தி அமைக்கப்பட்ட 10-ம் வகுப்பு ஆங்கில வழிப் புத்தகத்தில் Untouchable, Upper caste மற்றும் Lower caste என்ற வார்த்தைகள் இடம்பெற்றே உள்ளன. அதனை மறுப்பதற்கோ அல்லது மறைப்பதற்கோ நாங்கள் விரும்பவில்லை. Upper caste மற்றும் Lower caste என்ற வார்த்தைகள் இடம்பெற்று இருப்பது தவறான ஒன்றே. அவையும் மாற்றப்பட வேண்டியது அவசியமே. ஆனால், தலித் என்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படவில்லை.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய தலைவர்களை Lower caste என்றோ, குறிப்பிட்ட சாதியையோ, Untouchable என்று குறிப்பிடவில்லை. ஆனால், NCERT புத்தகம் இதை செய்திருக்கிறது. சமச்சீர் கல்வி தமிழ் புத்தகத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் என்று தான் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. கீழ்(lower) என்று குறிப்பிடவில்லை. தமிழில் தீண்டாமை என சரியாக குறிப்பிட்டு இருக்கின்றனர். ஆனால், ஆங்கிலத்தில் ” untouchables ” (தீண்டத்தகாதவர்கள்) என்றே குறிப்பிட்டு உள்ளனர். அதனை மாற்ற வேண்டும்.

எப்படி பார்த்தாலும் ஒப்பீட்டளவில் NCERT சொல்லும் அபத்தங்களை விட இது பலமடங்கு பரவாயில்லை ரகம். எனினும், Lower , upper மற்றும் untouchable போன்ற வார்த்தைகளை கவனமாக கையாளுதலே சரி. தமிழ்நாடு புத்தகங்களும் திருத்தங்களை செய்வது அவசியமாகிறது.

எது எப்படியோ பிறப்பில் உயர்வு தாழ்வு இல்லை ! வரலாற்றை சொல்லிக் கொடுக்கும் பொழுது Forward caste, scheduled caste என்றும், People affected by untouchablity என்று குறிப்பிடுவது தான் சரி . உயர் சாதி(upper caste), கீழ் சாதி(lower caste) என அர்த்தம் தரும் சொற்களையும், தீண்டத்தகாதவர்கள் (untouchables) எனக் குறிப்பிடுவதும் கடும் கண்டனத்திற்குரியது.

2018 மார்ச் மாதம் மத்திய சமூகநீதி அமைச்சகம் அனைத்து மாநில அரசாங்கத்திற்கும், யூனியன் பிரதேசத்திற்கும் வெளியிட்ட அறிவிப்பில் அனைத்து அதிகாரப்பூர்வ விவகாரங்களில் தலித் என்ற வார்த்தைக்கு பதிலாக அரசியலமைப்பில் கூறியது போன்று scheduled caste என்றே குறிப்பிட வேண்டும் எனக் கூறினர்.

அதேபோன்று, ஊடகங்களும் ” தலித் ” என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்து இருந்தது. இந்த அறிவிப்பு ஜூன் 2018-ல் மும்பை உயர் நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் கூறப்பட்டது.

ஆனால், ஊடங்களில் தலித் என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது எனக் கூறுவது ஊடகங்கள் ஏற்க மறுத்தன. ஏனெனில், நாட்டின் ஒரு பகுதியில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு நடக்கும் கொடுமைகள் நாடு முழுவதிலும் சென்று சேர ” தலித் ” என்ற வார்த்தையே உதவும் என பத்திரிக்கையாளர்கள் தெரிவித்தனர்.

மாநில அரசுகளும், ஊடகங்களும் தலித் என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது எனக் கூறிய மத்திய அரசின் பாடத்திலேயே ஒடுக்கப்பட்ட மக்களை ” தலித் ” என பாடம் முழுவதும் நிரப்பி வைத்து இருப்பது முரண்.

Links :

http://www.ncert.nic.in/ncerts/l/fess302.pdf

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=http://www.ncert.nic.in/ncerts/l/hess203.pdf&ved=2ahUKEwjpsYGztL7kAhWYA3IKHS4NAa8QFjABegQIBhAC&usg=AOvVaw3A2xuxdZbUlLvjAKsLFQim

https://web.archive.org/save/https://www.vikatan.com/social-affairs/education/the-controversy-content-in-textbooks-hits-social-media

samacheer 10 tamil book 

samacheer 10 english book 

There can’t be a ban on use of word ‘Dalit’ in media: PCI

Please complete the required fields.




Back to top button
loader