கோபத்தில் கொலை செய்யும் போலீசின் வைரல் வீடியோ.. வெப் சீரிஸ் ஷூட்டிங்கே !

வணிக வளாகத்திற்கு வெளியே பொதுமக்கள் பலரும் சூழந்து இருக்க ஒரு ஜோடியை காவல் அதிகாரி திடீரென சுட்டுக் கொல்லும் காட்சி இடம்பெற்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.
Baljit singh என்பவரின் முகநூல் பக்கத்தில், ” இது படத்தின் படப்பிடிப்பு என்று கூறப்படுகிறது. aஆனால் உண்மையைச் சொல்லுங்கள், மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு போலீஸ் அதிகாரி ஆயுதம் ஏந்தி கடமையில் ஈடுபட வேண்டுமா ” என பஞ்சாப் மொழியில் பகிர்ந்த 20 நொடிகள் கொண்ட வீடியோ காட்சி லட்சக்கணக்கில் பகிரப்பட்டு வைரலாகி உள்ளது.
இந்த பதிவின் லிங்க், ஸ்க்ரீன்ஷார்ட், வீடியோவை யூடர்ன் வாசகர்கள் பலரும் பகிர்ந்து, இதன் உண்மைத்தன்மை குறித்து கூறுமாறு கேட்டு வருகின்றனர். வீடியோவை பார்ப்பதற்கு படப்பிடிப்பு போன்றும், அவர்களின் நடிப்பும் தெளிவாய் தெரிகிறது.
#FactCheck– A video of a gory murder by a cop outside a restaurant is floating since today morning on #socialmedia, triggering queries & confusion.
On verification, it’s attributed to a #webseries shot outside ‘Friends Cafe’ in Karnal Haryana as per the manager of the Cafe. pic.twitter.com/63GHkScx9j
Advertisement— RAHUL SRIVASTAV (@upcoprahul) April 12, 2021
இதுகுறித்து தேடிய போது, ” கர்னல் ஹரியானா பகுதியில் உள்ள ” ப்ரெண்ட்ஸ் கஃபேவிற்கு ” வெளியே வெப் சீரிஸ் ஒன்றிற்காக எடுக்கப்பட்ட ஷூட்டிங் என்று கஃபே மேனேஜர் தெரிவித்தார் ” என உத்தரப் பிரதேச மாநில ஏஎஸ்பி ராகுல் ஸ்ரீவஸ்தவ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.
மேலும், சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு நேரில் சென்று எடுக்கப்பட்ட வீடியோவையும், அங்கு நிகழ்ந்தது ஷூட்டிங் என ரிப்போட்டர் ஒருவர் பேசும் வீடியோ கர்னல் ப்ரேக்கிக் நியூஸ் எனும் முகநூல் பக்கத்தில் பதிவாகி இருக்கிறது.
ஹரியானாவில் கர்னல் பகுதியில் வெப் சீரிஸ் ஒன்றிற்காக போலீஸ் அதிகாரி இருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது போன்று எடுக்கப்பட்ட காட்சியே சமூக வலைதளங்களில் தவறாக பகிரப்பட்டு வருகிறது.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.