கொரோனா வதந்தியால் திருச்சி இளைஞருக்கு நேர்ந்த கொடுமை !

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை விட கொரோனா வைரசால் பரப்பப்பட்ட வதந்திகளின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வண்ணமே உள்ளது. முந்தைய கட்டுரையில், திருச்சி உறையூரில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட இளைஞர் அரசு பொது மருத்துவமனையில் இருந்து தப்பித்து ஓடியதாக புகைப்படத்துடன் வைரலான செய்தியை வதந்தி என நிரூபித்து இருந்தோம்.

மேலும் படிக்க : திருச்சியில் கொரோனா வைரஸ் பாதித்தவர் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓட்டமா ?

Advertisement

இதற்கிடையில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட இளைஞர் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக ஒருவரின் தனிப்பட்ட தகவலை நிரூபர் ஒருவரே வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தவறாக பரப்பியதால் அந்த இளைஞர் இன்னல்களுக்கு உள்ளாகி உள்ளார்.

திருச்சி துறையூரைச் சேர்ந்த இளைஞர் அரவிந்த் ராஜ். தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றி வரும் அரவிந்த் ராஜ் தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இந்நிலையில், தனக்கு சளி, இருமல் இருந்த காரணத்தினால் அரசு பொது மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை அணுகியுள்ளார். அப்போழுது மாஸ்க் அணிந்து, மருத்துவர் போன்று கோர்ட் அணிந்து வந்த நபர் அரவிந்த் ராஜ் உடைய விவரங்களை பெற்றுச் சென்றுள்ளார். பின்னர் மருத்துவமனையில் இருந்த மருத்துவரிடம் சோதித்துக் கொண்ட அரவிந்த் ராஜ்க்கு சாதாரண இருமல், சளி மட்டுமே இருப்பதாக கூறி மருந்துகளை கொடுத்து அனுப்பப்பட்டு உள்ளார்.

ஆனால், அரவிந்த் ராஜ்க்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக கூறி அவரின் தனிப்பட்ட விவரங்கள் உடன் ஓர் செய்தியை வாட்ஸ் அப்பில் பரப்பி உள்ளார் அந்த நபர். இறுதியில் அந்த வாட்ஸ் அப் ஃபார்வர்டு செய்தி அரவிந்த் ராஜ்க்கும், அவரின் ஊரில் இருப்பவர்கள் வரை பரவி உள்ளது. இதை அறிந்த அரவிந்த் ராஜ் தனக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக வதந்தி பரப்பிய நபர் குறித்து விசாரித்த பொழுது அவர் ஒரு நிரூபர் என்பதை அறிந்து உள்ளார். அவரின் விவரங்களையும் சேகரித்து உள்ளார்.

இதையடுத்து, கொரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்பிய நபரின் மீது அரவிந்த் ராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். எனினும், அவரின் ஊரில் அரவிந்த் ராஜை கொரோனா பாதித்தவர் என்ற தவறான பிம்பம் உருவாக்கப்பட்டது. மேலும், பணி செய்யும் இடத்திலும் கொரோனா பாதிப்பு இல்லை என்பதை உறுதிப்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்.

இதன் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு வந்த அரவிந்த் ராஜ் கொரோனா வைரஸ் குறித்த சோதனையை மேற்கொள்ள பல இடங்களுக்கு அலைந்து திரிந்துள்ளார். ஒரு வாட்ஸ் அப் வதந்தியால் தனிநபரின் வாழ்க்கையில் எத்தனை இன்னல்கள் உருவாகின்றன என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

Advertisement

இது தொடர்பாக மேலும் விவரங்களுக்கு அரவிந்த் ராஜ்க்கு தொடர்பு கொண்டு பேசிய பொழுது, ” நான் தற்பொழுது எனது சொந்த ஊரில் உள்ளேன். கொரோனா வைரஸ் குறித்து சோதனையை மேற்கொண்டுள்ளேன். எனக்கு கொரோனா இல்லை என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். எனக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக வதந்தி பரப்பியவர் மீது புகார் அளித்துள்ளேன். காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள் என இன்னும் எனக்கு தெரிவிக்கவில்லை ” எனக் கூறி இருந்தார்.

ஒரு வாட்ஸ் அப் வதந்தி அதிவேகமாக பல இடங்களுக்கு பரவி விடுகிறது. இதனால் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி விடுகிறது. இதனை வதந்தி என ஒவ்வொருவரிடமும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளார் அந்த இளைஞர். இதுபோல் எண்ணற்ற நிகழ்வுகள் பரவியதை யூடர்ன் மக்களுக்கு தெரியப்படுத்தி உள்ளோம். ஒரு செய்தியை பகிர்வதற்கு முன்பாக உண்மை என்ன என்பதை பகிர்வதே ஆகச் சிறந்தது. மற்றவர்களுக்கும் நன்மை அளிக்கும்.

Youturn கடந்த மூன்றாண்டுகளாக உண்மைகண்டறிதல் பணியை செய்கிறது. இதற்கு உங்கள் துணையும் அவசியமாகிறது. அதற்கு நீங்கள் உறுப்பினர் சேர்க்கை மூலம் அதை சாத்தியமாக்கலாம். உறுப்பினர்களுக்கு சில சலுகையும் சிறப்புத்திட்டமும் உண்டு. சேர்ந்து எங்கள் பணியை நம் பணியாக மாற்றி மக்களின் ஊடகமாய் நாம் இருக்க வழி செய்யுங்கள்

Subscribe to Membership

Ask YouTurn

Please complete the required fields.
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker