கொரோனா வைரஸ் தாக்கிய கப்பலுக்கு கியூபா காட்டிய மனிதநேயம் !

நோவல் கொரோனா வைரஸ் எனும் உலகளாவிய தொற்றால் 8,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த விமான சேவைகளும் தவிர்க்கப்படுகின்றன. குறிப்பாக, தனது சொந்த நாட்டு மக்களையே அழைத்து வர பல நாடுகள் தயக்கம் காட்டி வருகிற நிலை உள்ளது. இந்நிலையில், கியூபா எனும் தேசம் கொரோனா தாக்கிய மக்களுக்கு மனித நேயத்துடன் உதவ முன்வந்த செயல் உலக அளவில் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

பிரிட்டனைச் சேர்ந்த எம்.எஸ்.ப்ரீமர் என்ற கப்பல் 600-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள், 300-க்கும் மேற்பட்ட கப்பல் பணியாளர்கள் உடன் கரீபியன் கடல் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தது. கப்பலில் இருந்த பெரும்பாலானவர்கள் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர்கள். அப்போழுது, கப்பலில் உள்ளவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. உடனடியாக கப்பலை அருகில் உள்ள துறைமுகத்தில் நிறுத்த பல கரீபியன் நாடுகளிடம் உதவி கேட்கப்பட்டது. எனினும், அந்த நாடும் யாவும் அனுமதி தர மறுத்து விட்டன.

Advertisement

இதையடுத்து, பிரிட்டன் அரசின் வெளியுறவு அமைச்சகம் தரப்பில் அமெரிக்க மற்றும் கியூபா ஆகிய நாடுகளில் கப்பலை நிறுத்த அனுமதிக்குமாறு உதவி கேட்கப்பட்டது. அமெரிக்க மண்ணில் கப்பலை அனுமதிக்க அமெரிக்க அதிகாரிகளை அணுகினர். ஆனால் அந்த முயற்சி தடைகளை சந்தித்தது. மாறாக கியூபா அதிகாரிகள் பிரிட்டனின் கோரிக்கையை ஏற்று ப்ரீமர் கப்பலை தங்கள் தேசத்தில் நிறுத்த அனுமதி அளித்தனர்.

கியூபாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆக இருந்த நிலையில், வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கையை எம்.எஸ்.ப்ரீமர் கப்பல் அதிகரித்து விடும் என்ற அச்சமோ, சுயநலமோ இல்லாமல் கப்பலை நிறுத்த அனுமதி அளித்தது கியூபா.

கியூபாவின் கட்டுப்பாட்டில் உள்ள பஹமாஸ் தீவின் துறைமுகத்தில் ப்ரீமர் கப்பல் நிறுத்தப்பட்டு கப்பலில் இருந்த சுற்றுலாப் பணிகள் கொரோனா வைரஸ் சோதனைக்கு பிறகு கியூபாவிற்குள் அனுமதிக்கப்பட்டனர். கப்பலில் இருந்த 5 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும், 52 பேருக்கு அறிகுறிகள் உள்ளதாகவும் இண்டிபென்டென்ட் செய்தியில் கூறப்பட்டுள்ளது. வைரஸ் பாதித்தவர்களுக்கு கியூபாவில் வைத்தே சிகிச்சை அளிக்கப்படும். வைரஸ் பாதிப்பு இல்லாதவர்கள் நான்கு விமானங்கள் மூலம் பிரிட்டனுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என அறிவித்தனர்.

Advertisement

” கப்பலில் பாதிக்கப்பட்டு உள்ள மக்களின் நலனையும், உலகிற்கு விடுக்கப்பட்டுள்ள பொதுவான சவாலை எதிர்கொள்ள உலக நாடுகள் ஒற்றுமையுடன் இருப்பது அவசியம் என்பதை கருத்தில்கொண்டு கியூபா இந்த முடிவை எடுத்துள்ளதாக கியூப வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் “.

கியூபா சுகாதார வழங்குநர்கள் உலகளாவிய அவசரநிலைக்கு ஆதரவளிப்பது இது முதல் முறை அல்ல. எபோலா நெருக்கடியின் போது கியூபா மருத்துவர்கள் மேற்கு ஆப்பிரிக்காவில் செய்த உதவிகளால் பாராட்டப்பட்டனர். 2010-ல் ஹைட்டியாவின் பூகம்பத்திற்கு கியூபா அளித்த பதிலால் மற்ற நாடுகள் ” வெட்கப்படும் ” நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Proof links : 

Coronavirus-hit cruise ship docks in Cuba for passengers to evacuate

What coronavirus revealed about national mindsets across the world — and how Cuba came out on top

Youturn கடந்த மூன்றாண்டுகளாக உண்மைகண்டறிதல் பணியை செய்கிறது. இதற்கு உங்கள் துணையும் அவசியமாகிறது. அதற்கு நீங்கள் உறுப்பினர் சேர்க்கை மூலம் அதை சாத்தியமாக்கலாம். உறுப்பினர்களுக்கு சில சலுகையும் சிறப்புத்திட்டமும் உண்டு. சேர்ந்து எங்கள் பணியை நம் பணியாக மாற்றி மக்களின் ஊடகமாய் நாம் இருக்க வழி செய்யுங்கள்

Subscribe to Membership

Ask YouTurn

Please complete the required fields.
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker