This article is from Mar 09, 2021

நாடு முழுவதும் மூடப்பட்ட 10,113 நிறுவனங்கள்.. தமிழகத்தில் மட்டும் 1,322 !

கொரோனா வைரஸ் பரவல், அடுத்தடுத்து அமல்படுத்தப்பட்ட தொடர் ஊரடங்குகள், தளர்வுகள் என நாட்டின் பொருளாதாரம் முடங்கி போன ஏப்ரல் 2020 – பிப்ரவரி 2021 காலக்கட்டத்தில் கிட்டத்தட்ட 10 ஆயிரத்துக்கும் மேலான நிறுவனங்கள் தானாக மூடப்பட்டன என மத்திய அரசு அறிவித்திருக்கிறது

கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகத்திடம்(எம்.சி.ஏ) கிடைத்த சமீபத்திய தகவலின் படி நடப்பு நிதியாண்டில் பிப்ரவரி வரை, நிறுவனங்கள் சட்டம் 2013, பிரிவு 248 (2) இன் கீழ் மொத்தம் 10,113 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

மத்திய நிதித்துறை மற்றும் கார்ப்பரேட் விவகார இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் அளித்த தரவுகளின்படி, டெல்லியில் அதிகபட்சமாக மொத்தம் 2,394 நிறுவனங்களும், உத்தரப்பிரதேசத்தில் 1,936 நிறுவனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. இதில், 1,322 நிறுவனங்கள் மூடப்பட்டு தமிழகம் மூன்றாம் இடம் வகிக்கிறது.

இதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிராவில் 1,279 நிறுவனங்களும், கர்நாடகாவில் 836 , சண்டிகரில் 501, ராஜஸ்தான் 479, தெலங்கானா 404, கேரளா 307, ஜார்க்கண்ட் 137, மத்தியப் பிரதேசம் 111, பீகார் 104, மேகாலயா 88, ஒரிசா 78, சத்தீஸ்கர் 47, கோவா 36, பாண்டிச்சேரி 31, குஜராத் 17, மேற்கு வங்கம் 4, அந்தமான் & நிக்கோபார் 2 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

2020-21 ஆம் ஆண்டில் வணிகத்திலிருந்து வெளியேறிய பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கையைப் பற்றிய மாநில வாரியான விவரங்களைத் உறுப்பினர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் இத்தரவு வழங்கப்பட்டது. மாநில வாரியாக மூடப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை குறித்த இப்பட்டியல் சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.

Twitter link | Archive link 

கொரோனாவால் மக்களின் அன்றாட வாழ்க்கை மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முற்றிலும் முடங்கி இருந்த காலக்கட்டம் தற்போது கொஞ்சம் தளர்ந்து இயல்பு நிலையை அடைந்திருக்கும் இச்சூழலில் தமிழக தொழில்துறை வளர்ச்சி அடைய அரசின் பங்கு மிகவும் அவசியமான ஒன்றாக நடக்கவிருக்கும் தேர்தலில் பார்க்கப்படும்.

  • அருண் ப்ரசாத், மாணவ பத்திரிகையாளர்(பயிற்சி)

Link :

10,113 companies shut down operations voluntarily between April ‘20-Feb. ‘21: Ministry

10113-companies-shut-down-in-india-from-apr-2020-feb-2021-delhi-tops-the-list

Over 10,000 companies closed down in FY21, MoS finance Anurag Thakur tells Parliament

Please complete the required fields.




Back to top button
loader