பசு மட்டுமே ஆக்சிஜனை வெளியேற்றும் என அலகாபாத் நீதிபதி சொல்வது சரிதானா ?

உத்தரப் பிரதேசத்தில் பசுவதை தடுப்பு சட்டத்தின் கீழ் கைதான ஜாவித் என்பவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவின் விசாரணையின் போது நீதிபதி சேகர் குமார் யாதவ், ” பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும், பசுவிற்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வர வேண்டும், மாட்டிறைச்சி உண்பதை ஒருபோதும் அடிப்படை உரிமையாக எடுக்க முடியாது ” என நீண்ட உத்தரவுகளை வெளியிட்டது இந்தியா அளவில் பேசு பொருளாகவும், சர்ச்சையாகவும் உருவெடுத்தது.

Advertisement

அதே வரிசையில், பசுவானது ஆக்சிஜனை உள்ளிழுக்கும் மற்றும் ஆக்சிஜனை வெளியேற்றும் ஒரே விலங்கு என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள் என பேசியதும் இந்திய அளவில் பேசு பொருளாகி வருகிறது.

பசு மட்டுமே ஆக்சிஜனை வெளியேற்றுமா ?

பொதுவாக நாம் சுவாசிக்கும் காற்றில் அதிகளவில் நைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன், சிறிதளவு கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் இதர வாயுக்கள் இருப்பதுண்டு. சுவாசித்தலில் உள்ளிக்கும் போது இருக்கும் வாயுக்கள் மீண்டும் வெளியேறவே செய்கின்றன. ஆனால், அவற்றின் அளவுகளில் மாற்றம் இருக்கும்.

பிபிசி வெளியிட்ட கட்டுரை ஒன்றில், ” சுவாசித்தலில் உள்ளிழுக்கப்படும் காற்றில் 21% ஆக்சிஜன், 79% நைட்ரஜன், 0.04% கார்பன் டை ஆக்ஸைடும், வெளியேற்றப்படும் காற்றில் 16% ஆக்சிஜன், 79% நைட்ரஜன் மற்றும் 4% கார்பன் டை ஆக்ஸைடும் தோராயமாக இருப்பதாக ” விரிவான தகவல் அளிக்கப்பட்டு இருக்கிறது.

உள்ளிழுக்கப்படும் மற்றும் வெளியேற்றப்படும் காற்றில் இருக்கும் வாயுக்களின் சதவீதத்தை பார்க்கையில், உள்ளிக்கப்படும் காற்றில் இருக்கும் 21% ஆக்சிஜன் குறைந்து 16% ஆக வெளியேறும் காற்றில் இருக்கிறது. சுவாசித்தலில் உள்ளிழுக்கப்படும் ஆக்சிஜன் அளவில் பயன்படாத ஆக்சிஜன் வெளியேற்றப்படுகிறது. ஆனால், இது மாடுகளுக்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் பொருந்தும்.

Advertisement

பசுக்கள் மட்டுமே ஆக்சிஜனை உள்ளிழுத்து மீண்டும் ஆக்சிஜனை வெளியேற்றுவதாக கூறுவது தவறானது. தாவரங்களை தவிர எந்தவொரு விலங்குகளாலும் ஆக்ஸிஜனை முழுவதுமாக வெளியிட முடியாது. உள்ளிழுக்கும் காற்றில் பயன்படாத ஆக்ஸிஜன் மட்டுமே வெளியிட முடியும். விலங்குகளின் நுரையீரல் அமைப்பிற்கு உள்ளிழுக்கும் ஆக்ஸிஜனை முழுவதுமாக வெளியேற்றக்கூடிய திறன் இல்லை.

மேலும் படிக்க : பசு மட்டுமே ஆக்சிஜனை வெளியேற்றும் – உத்தரகாண்ட் முதல்வர் பேச்சு !

2017-ல் உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், ” பசுவின் பால், சிறுநீர் மருத்துவ குணங்கள் கொண்டவை. பசு ஆக்சிஜனை உள்ளிழுத்து மட்டுமின்றி அதனை வெளியேற்றவும் செய்கிறது. ஆக்சிஜனை வெளியேற்றும் ஒரே விலங்கு பசு மட்டுமே. பசு மாட்டிற்கு மஜாஜ் செய்வதால் சுவாசப் பிரச்சனைகளில் இருந்து குணமடைய முடியும். பசுக்களுடன் நெருக்கமாக வாழ்வது காசநோயை குணப்படுத்தும் ” எனப் பேசி இருந்தார்.

2017-ல் ராஜஸ்தான் மாநிலத்தின் கல்வித்துறை அமைச்சர் வாசுதேவ் தேவனானி என்பவரும் இதே கருத்தை தெரிவித்து இருந்தார்.

மேலும் படிக்க : பசுவிற்கு விஷம் கொடுத்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டதா ?

இதற்கு முன்பாகவும், பசுவின் சிறுநீர், மாட்டு சாணம் மற்றும் பல தொடர்பான கட்டுக்கதைகளை நிபுணர்கள் தெளிவுப்படுத்தி இருந்தனர். நாமும் பசுக்கள் தொடர்பான சித்தரிக்க முயன்ற தவறான தகவல்கள் குறித்து வெளியிட்டு இருந்தோம்.

Link : 

scientists-believe-cow-only-animal-that-inhales-exhales-oxygen-allahabad-hc

The respiratory system 

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button