This article is from Nov 13, 2018

‘கஜா’ கெத்து இல்லை : weather man

தமிழகத்தை நோக்கி வரும் கஜா புயல் பற்றி பல்வேறு செய்திகள் உலா வருகின்றன . புயல் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மக்கள் குழப்பத்தில் இருக்கும் வேளையில் தமிழ் நாடு வெதெர்மேன் தொடர்ந்து அப்டேட்ஸ் கொடுத்து ஆறுதல் அளிக்கிறார் . நவம்பர் 15-ஆம் தேதி கடலூர் வேதாரண்ய நிலப்பகுதியை அடையும் முன்னர் அது வலுவிழந்து விடும் எனவே ‘தானே’ , ‘வர்தா’ புயல்களை போல் நினைத்து அச்சம் கொள்ள தேவை இல்லை. சில மாதிரி படத்தில் பாம்பன் அல்லது இலங்கை கரையை அடைவதாக காட்டப்பட்டுள்ளது. அது நடக்காமல் இருக்கலாம் அது திரும்ப வேதாரண்யம் மற்றும் கடலூரை அடையும் என எதிர்பார்க்கலாம்.

சென்னையை பொறுத்தவரை 14ஆம் தேதி நள்ளிரவில் இருந்து 17ஆம் தேதி வரை நல்ல மழையை எதிர்பார்க்கலாம். இதில் பயப்பட எதுவுமில்லை . பேஸ்புக் மற்றும் வாட்ஸப் வதந்திகளை நம்ப வேண்டாம்.

கஜா கடக்கும் பகுதிகளில் கடுமையான மழை பொழிவு இருக்கும் . தென்தமிழக உள்மாவட்டங்களின் சில பகுதிகளில் மிக கன மழை பொழிய வாய்ப்பு இருக்கிறது. காற்று 60-80 km/hr வேகத்தில் தொடங்கி கரையை அடையும் போது 90 km/hr-ஐ தொடும். எனவே வர்தா தானே புயல் போல இருக்காது. தமிழகத்தில் அடுத்த 15 நாட்களில் மாற்றி மாற்றி தாழ்வு நிலை நீடிக்கும் என எதிர்பார்க்கலாம்.

14 ஆம் தேதி இரவும் 15-ஆம் தேதி காலையும் அச்சுறுத்தல் இல்லாத நல்ல மழை இருக்கும். 16 மற்றும் 17 இல் அரபி கடலில் நகர்ந்த பின்னர் அதன் விளைவாக மழை இருக்கும் என கூறியுள்ளார் தமிழ்நாடு வெதர்மேன். எனவே இந்நேரத்தில் அச்சுறுத்தும் வகையில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்.

Please complete the required fields.




Back to top button
loader