கர்நாடகா கோவிலுக்குள் தலித் குழந்தை நுழைந்ததால் ரூ.25,000 அபராதம்.. அர்ச்சகர், ஆதிக்க சாதியினர் கைது !

பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவரின் குழந்தை கோவிலுக்குள் நுழைந்ததால் கோவிலை ” சுத்தப்படுத்த ” குழந்தையின் குடும்பத்திற்கு ரூ.25,000 அபராதம் விதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக, அர்ச்சகர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

Advertisement

கர்நாடகா மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ள மியாபுரா கிராமத்தைச் சேர்ந்த 27 வயதான சந்திரசேகர் என்பவர் பட்டியல் சாதியினர் என வகைப்படுத்தப்பட்ட சென்னதாச சமூகத்தைச் சேர்ந்தவர். செப்டம்பர் 4-ம் தேதி தனது 2 வயது மகனின் பிறந்தநாள் என்பதால் கிராமத்தில் வீட்டிற்கு அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது மழைப் பெய்யத் தொடங்கியதால் குழந்தை கோவிலுக்குள் ஓடியது. இதையடுத்து, குழந்தையை வெளியே கொண்டு வர சந்திரகேரும் கோவிலுக்குள் நுழைந்தார். ஏனெனில், சென்னதாச சமூகத்தினர் கோவிலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

சந்திரசேகர் மற்றும் அவரது மகன் கோவிலுக்குள் நுழைவதை கோவிலின் அர்ச்சகர் கனகப்ப, ஹனுமா கவுடா உள்ளிட்ட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பின்னர் அவர்கள் செப்டம்பர் 11-ம் தேதி கிராமவாசிகளின் கூட்டத்தை கூட்டி, தந்தை மற்றும் மகன் நுழைந்ததால் கோவில் மாசடைந்து விட்டதாக முடிவு செய்தனர். மேலும், சந்திரசேகர் மற்றும் அவரது மனைவி லலிதா ஆகியோருக்கு ரூ.25,000 அபராதம் விதித்துள்ளனர்.

” பட்டியலின வகுப்பைச் சேர்ந்த குழந்தை கோவிலுக்குள் நுழைந்ததால் கோவிலை சுத்தம் செய்து, சடங்குகளை நடந்த வேண்டும் எனக் கூறி அபராதம் விதித்ததாக
” மூத்த போலீஸ் அதிகாரி கூறியதாக செய்தியில் வெளியாகி இருக்கிறது.

அபராத தொகையை கொடுக்க முடியாது என சமூகத் தலைவர்களை அணுகியபோதே இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சந்திரசேகர் தரப்பில் வருவாய் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரிடம் முறையீடு செய்தனர். இதையடுத்து, செப்டம்பர் 18-ம் தேதி போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள் கிராமத்தில் ஒரு விழிப்புணர்வு கூட்டத்தை நடத்தி தீண்டாமை பழக்கத்திற்கு எதிராக மக்களை எச்சரித்து உள்ளனர்.

எனினும், சமூக நலத்துறை உதவி இயக்குனர் பாலச்சந்திரா என்பவர் செப்டம்பர் 21-ம் தேதி புகார் ஒன்றை அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில், அர்ச்சகர் கனகப்ப, ஹனுமா கவுடா, கவி சித்தப்பா மியகேரி, விருபசா கவுடா மியகேரி மற்றும் சரண கவுடா ஆகிய 5 பேரை குஸ்டகி போலீசார் கைது செய்து உள்ளனர்.

Advertisement

Links :

Five arrested for ₹25,000 fine on Dalit family for entering temple

dalit-villager-fined-rs-25-000-for-sons-entry-into-temple-5-held-including-priest

Karnataka: Family imposed fine of Rs 25,000 after Dalit boy enters temple in Koppal, five held

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button