குழந்தைகளின் நப்பீஸ்களில் அபாயமான கெமிக்கல்கள் கண்டுபிடிப்பு !

குழந்தைகளுக்கு பயன்படுத்தும் நப்பீஸ்(Nappies) குறித்து வெளியான ஆய்வு அறிக்கையில் அவற்றில் இருக்கும் கெமிக்கல்கள் பாதுகாப்பான அளவைத் தாண்டி இருப்பதாகவும், சர்ச்சைக்குரிய களைக்கொல்லியான கிளைப்போசேட் உள்ளிட்டவை சிறிதளவில் இருப்பதாகவும் பிரான்ஸ் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரான்ஸ் நேஷனல் ஹெல்த் ஏஜென்சியான “ அன்செஸ் “ அந்நாட்டில் 2016 முதல் 2018 வரையில் விற்பனை செய்யப்பட்ட குழந்தைகளுக்கான நப்பீஸ்களின் 23 மாதிரிகளில் பரிசோதனை நடத்தினர்.

Advertisement

குழந்தைகள் சிறுநீர் கழித்து துணிகள் நனைவதை தடுக்கவும், இரவில் நன்றாக உறங்குவதற்கு பயன்படும் என நம்பிக்கையாக பயன்படுத்தி வரும் “ ecological “ எனக் கூறி விற்கப்படுவதுமான நப்பீஸ் துணிகளில் இருக்கும் கெமிக்கல்கள் பாதுகாப்பான அளவின் உச்ச வரம்பை தாண்டி இருப்பதாகவும் தெரிவித்து உள்ளனர்.

அன்செஸ் வெளியிட்ட அறிக்கையில் கெமிக்கல்கள் அதிகம் இருக்கும் நப்பீஸ் பிராண்ட்களைக் குறிப்பிடவில்லை. களைக்கொல்லி மருந்தான கிளைப்போசேட் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட கெமிக்கல்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்ததாகவும், சிகெரட் புகை அல்லது டீசல் தீப்பொறிக்காக பயன்படும் பொருட்கள் கூட இருப்பதாகவும் 206 பக்கங்கள் கொண்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

பிரான்ஸ் நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் Agnes Buzyn கூறுகையில், “ குழந்தைகளுக்கு தீவிரமான அல்லது உடனடி ஆபத்துக்கள் ஏதுமில்லை. நப்பீஸ் தயாரிக்கும் நிறுவனங்கள் மனிதர்களுக்கு ஆபத்தானவை எனக் கூறும் பொருட்களை நப்பீஸ் இருந்து நீக்கிய பின்னான தயாரிக்கும் திட்டத்தை கொண்டு வர 15 நாட்கள் அவகாசம் அளித்துள்ளதாகவும், குழந்தைகளுக்கு உடனடியான ஆபத்துக்கள் ஏதுமில்லை என அன்செஸ் கூறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார் ”.

குழந்தை பிறந்தது முதல் 3 வயது வரையிலான காலக்கட்டத்தில் சுமார் 4000 நப்பீஸ்களை பயன்படுத்தப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அந்நாட்டில் நப்பீஸ் தயாரிப்பில் பிரபலமான நிறுவனங்களான பம்பெர்ஸ் மற்றும் ஜோனே ஆய்வு குறித்து பதில் அளித்துள்ளனர்.

Advertisement

“ எங்களின் நப்பீஸ் தயாரிப்புகள் பாதுகாப்பானவையாக இருக்கும். எங்கள் தயாரிப்புகளில் ஐரோப்பிய யூனியன் பட்டியலிட்ட ஒவ்வாமை பொருட்கள் சேர்க்கப்படவில்லை என பம்பெர்ஸ் கூறியுள்ளது ”.

சர்ச்சைக்குரிய களைக்கொல்லியான கிளைப்போசேட் குறைந்த அளவில் இருப்பதற்கான தடயங்கள் தென்படுவதாகக் கூறுவது சிறிது கவனிக்க வேண்டியவையாக இருக்கிறது. ஏனெனில், கிளைப்போசேட் தடை செய்யப்படவில்லை என்றாலும் புற்றுநோய் உடன் தொடர்புப்படுத்தியது உலக சுகாதார மையம்.

பிரான்ஸ் நாட்டின் ஏஜென்சி உடைய ஆய்வால் பெல்ஜியம் நாட்டில் விற்பனையாகும் நப்பீஸ்களில் கெமிக்கல்கள் குறித்து மேற்கொள்ளும் ஆய்வு முடிவுகளை அடுத்த மாதம் வெளியிடுவதாக தெரிவித்து உள்ளனர்.

குழந்தைகள் பயன்படுத்தும் நப்பீஸ்களில் கெமிக்கல்கள் இருப்பதை அறிந்தே பயன்படுத்தி வருகிறார்கள். அவற்றின் அளவு பாதுகாப்பானதைத் தாண்டி செல்கிறதா என்பதே கேள்வியாக நிற்கிறது.

Dangerous chemicals found in nappy tests by French authority

Anses report 

Youturn பணியை விரும்புகிறீர்களா? இனி நீங்கள் நிதிப் பங்களிப்பு செய்யலாம். எங்கள் உழைப்பும் , நேரமும், இலவசமாக தருகிறோம் , உங்களால் முடிந்த கட்டணத்தை தரலாம் . உண்மையின் குரலாய் , (உங்களின்) மக்களின் பத்திரிகையாக www.youturn.in இயங்க மாதா மாதம் விரும்பியதை சந்தா கட்டுங்கள் .

Subscribe with

Ask YouTurn

Please complete the required fields.
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close