டத்தோ பட்டம் மட்டும் போலி இல்லைங்க, அதை கொடுத்த மலேசிய சுல்தானே போலி!

பிரபலமான பாடகியாக அனைவராலும் அறியப்பட்டாலும் சமீபத்தில் ‘மீ டூ ‘ விவகாரத்தில் தான் மிக பரபரப்பான புகார்களை கூறி அடிக்கடி தலைப்பு செய்திகளில் வந்தவர் சின்மயி . இவர் திடீரென்று நடிகர் ராதாரவிக்கு வழங்கப்பட்ட டத்தோ பட்டம் போலியானது எனக்கூறி சலசலப்பை ஏற்படுத்தினார்.

Advertisement

தமிழ்நாடு டப்பிங் யூனியன் தலைவராக ராதாரவி உள்ளார். சின்மயி தமிழ்நாடு டப்பிங் யூனியலிருந்து நீக்கப்பட்டாதாகவும் தமிழில் தனது கடைசி படமாக 96 இருக்கும் எனவும் ட்வீட் செய்து இருந்தார் . சின்மயி டப்பிங் யூனியனுக்கு இரண்டு ஆண்டுகளாக சந்தா காட்டவில்லை அதனால் கூட்டத்தில் கண்டனம் மட்டுமே தெரிவிக்கப்பட்டது எனவும் ராதாரவி தரப்பில் கூறப்பட்டது. ராதாரவியும் சின்மயியும் மாறி மாறி தாக்கி பேசி கொண்டிருந்தனர். அப்போது தான் அவருக்கு எதிராக டத்தோ பட்ட விவகாரத்தை ஆயுதமாக கையில் எடுத்தார் சின்மயி.

மலேசிய அரசாங்கத்தின் இணையதள படத்தை வெளியிட்டு அதில் டத்தோ பட்டம் வாங்கியவர்கள் பெயர்கள் இருக்கும் , ஆனால் ராதாரவி பெயர் அதில் இல்லை என கூறினார். மேலும் மலாக்கா நகர் அரசாங்கம் அவருக்கு அனுப்பிய மெயிலையும் பகிர்ந்தார். அதில் ராதாரவி என்பவருக்கு மலாக்கா அரசில் இருந்து டத்தோ பட்டம் வழங்கப்படவில்லை. அவர் தனது பெயருக்கு முன்னால் டத்தோ பட்டத்தை தவறான முறையில் பயன்படுத்தினால் அது குற்றம் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டிருந்ததது.

Advertisement

ராதாரவி அதை மறுத்ததோடு தனக்கு அரசாங்கத்தால் கொடுக்கப்படவில்லை எனவும் சுல்தானிடம் இருந்து பெற்றதாகவும் சின்மயி இவ்வாறு கூறி இருப்பது இதை தனக்கு பட்டம் அளித்தவர்களையே அவமதிக்கும் வகையில் இருக்கிறது இதனால் சின்மயி மலேசியா செல்லவே தடை விதிக்கலாம் என கூறி இருந்தார்.

2012-இல் The Hindu பத்திரிகையில் மலேசியா மலாக்கா நகரில் நடிகர் ராதாரவிக்கு datuk பட்டம் வழங்கப்பட்டது எனவும் சாருக் கானுக்கு அடுத்தபடியாக இந்தியர் ஒருவருக்கு இது வழங்கப்பட்டிருப்பதாகவும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

மலேசியவில் சில மாகாணத்தில் சுல்தான்கள் இல்லை, அதில் ராதாரவிக்கு சுல்தானால் டத்தோ பட்டம் வழங்கப்பட்டதாக கூறப்பட்ட மலாக்கா மாகாணமும் ஒன்று. மேலும் ராதாரவி டத்தோ பட்டத்தை சுல்தானிடம் வாங்குவது போன்ற படம் வெளிவந்தது. அதை ஆராய்ந்து பார்க்கையில் அதில் இருப்பவர் போலி சுல்தான் என மலேசிய அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டிருந்தது உறுதியானது.

மலேசியா மாகாணமான மலாக்காவின் சுல்தானாக ராஜா நூர் ஜான் ஷா என்ற தொழிலதிபர் தன்னை தானே அறிவித்து கொண்டார். மேலும் sir பட்டத்துக்கு இணையாக மதிப்புமிக்க பட்டமாக மலேசியாவில் கருதப்படும் datuk பட்டத்தை பணம் வாங்கி விற்று பலபேருக்கு பட்டமளித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்.

நடிகர் ராதாரவியும் அந்த போலியான சுல்தானிடம் டத்தோ பட்டம் பெற்று ஏமாந்திருக்கலாம். ஆக மொத்தம் டத்தோ பட்டம் மட்டும் போலி இல்லை அதை கொடுத்தவரே போலி என்பது வேடிக்கையாக உள்ளது.

http://www.istiadat.gov.my/

Purchased titles ‘tarnishing’ Malaysian royalty institution

Malaysia arrests ‘sultan of Malacca’ in fake titles case

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button