This article is from Dec 16, 2019

Fact Check : டெல்லி போலீஸ் பேருந்திற்கு தீ வைத்ததாக வைரலாகும் வீடியோ ?

இந்திய தலைநகரான டெல்லியில் தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக மாணவர்கள், பொது மக்கள் என பலரும் போராட்டங்கள், வன்முறை கலவரங்கள் அரங்கேறி வருகிறது.

Facebook link | archived link

Twitter link | archived link 

இந்நிலையில், டெல்லி போலீஸ் போராட்டம் நிகழ்ந்த இடத்தில் பேருந்துகளில் எரிபொருளை ஊற்றி எரித்ததாக வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Twitter link | archived link

டெல்லி போலீஸ் பேருந்துகள், வாகனங்களை எரித்து விட்டு போராட்டக்காரர்கள் மீது பழியை சுமத்துவதாக இந்திய அளவில் பல மொழிகளிலும் வைரலாகி வருகிறது. டெல்லியின் துணை முதல்வரான மனிஷ் சிசோடி தன் ட்விட்டர் பக்கத்தில், பேருந்துகள் எரிவதற்கு முன்பாக போலீஸ் தரப்பில் மஞ்சள் மற்றும் வெள்ளை நிற கேன்கள் செல்லப்படுவதாக, இது தொடர்பான விசாரணை தேவை என பிஜேபி கட்சியை குற்றம்சாட்டி பதிவிட்டு இருந்தார் .

Twitter link | archived link 

ஆனால், இதற்கு டெல்லி போலீஸ் தரப்பில் மறுப்பு  தெரிவிக்கப்பட்டு உள்ளது. ANI நியூஸ் ஏஜென்சிக்கு தென்கிழக்கு டெல்லியின் டிசிபி சின்மொய் பிஸ்வால் அளித்த பேட்டியில், ” போலீஸ் பேருந்தை எரித்ததாக கூறும் தகவல் முற்றிலும் வதந்தி. கும்பலில் இருந்தவர்கள் வாகனங்களுக்கு தீ வைத்த பொழுது, அதை அணைக்கும் முயற்சியில் போலீசார் அங்குள்ள குடியிருப்புகளில் தண்ணீர் கேன்களை வாங்கியுள்ளனர். அந்த குறிப்பிட்ட பேருந்தை கவனத்தில் கொண்டு, கேன்களில் இருந்த தண்ணீரை கொண்டு போலீஸ் பாதுகாத்து உள்ளனர் ” எனத் தெரிவித்து இருந்தார்.

Twitter link | archived link

இதேபோல், மற்றொரு போலீஸ் அதிகாரி செய்தியாளர்களுக்கு அளித்த தகவலில், ” நாங்கள் அவற்றில் (மஞ்சள் கேன்களில்) தண்ணீரை கொண்டு வந்தோம். அந்த குறிப்பிட்ட பேருந்துகள் எரிக்கப்பட்டவில்லை. பார்க் செய்துள்ள அந்த பேருந்தை நீங்கள் இப்பொழுதும் பார்க்கலாம் ” என கூறியுள்ளார்.

Facebook link | archived link

India Tv என்ற செய்தி நிறுவனம் டெல்லி போலீஸ் தீ வைத்ததாக கூறப்படும் பேருந்துகளை ஒவ்வொன்றாக காண்பித்து உள்ளனர். கலவரக் கும்பலால் அடித்து நொறுக்கப்பட்ட பேருந்துகள் போலீசாரால் தனியாக பார்க் செய்யப்பட்டுள்ளன எனக் கூறியுள்ளனர். இதையே ஒரு போலீஸ் அதிகாரியும் செய்தியாளர்களிடம் தெரிவித்த வீடியோவை பகிர்ந்து இருந்தோம்.

Facebook link | archived link

போலீசார் மஞ்சள் நிறத்தில் கேன்களை கொண்டு செல்லும் புகைப்படங்கள், வீடியோவை போன்று, பேருந்தின் ஜன்னல் ஓரத்தில் இருந்து எடுக்கப்பட்ட சில வினாடிகள் கொண்ட மற்றொரு வீடியோவில், பேருந்து இருக்கையில் பெட்ரோலை தெளிப்பதாக கூறி பரப்பி வருகின்றனர். அந்த வீடியோவை தெளிவாக கண்டால், குடிநீர் விற்பனை செய்யப்படும் கேனில் இருந்து தண்ணீரை ஊற்றுகிறார் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது.

Twitter link | archived link

சம்பவம் நிகழ்ந்த இடத்தில் தாமும் இருந்ததாக NDTV பத்திரிகையாளர் அரவிந்த் குணசேகர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். கும்பல் இரு சக்கர வாகனங்களுக்கு தீ வைத்ததாகவும், அதனை அணைக்க காவல்துறையினர் முயற்சி செய்தார்கள் என பதிவிட்டு உள்ளார்.

செய்தி ஒன்றில் வெளியான சில நிமிட வினாடிகள் கொண்ட வீடியோவில் கும்பலில் இருந்தவர்கள் பேருந்தின் கண்ணாடியை உடைப்பதும், அருகில் இருந்து இரு சக்கர வாகனத்திற்கு நெருப்பை வைப்பதும் பதிவாகி இருக்கிறது.

Youtube link | archived link 

பேருந்துகளுக்கு எரிபொருளை ஊற்றி தீ வைப்பதாக பரவும் வீடியோவிற்கு போலீஸ் தரப்பில் மறுப்பும், கிடைத்த தகவலும் எடுத்துரைக்கையில், உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலிகார் பல்கலைக்கழக பகுதியில் இருந்த இரு சக்கர வாகனங்களை போலீசார் லத்தியால் அடித்து நொறுக்கும் காட்சிகள் NDTV செய்தியில் வெளியாகி இருக்கின்றன.

Please complete the required fields.




Back to top button
loader