டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் ?| செய்ய வேண்டியவை என்ன ?

ழைக்காலங்கள் தொடங்கினாலே பொதுவாக டெங்கு காய்ச்சல் குறித்த அச்சங்கள் மக்களிடையே ஏற்படுவதுண்டு. ஏடிஸ் என்னும் கொசுவினால் பரவக் கூடிய ஒருவகை வைரஸ் கிருமியால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. பெரும்பாலும், இந்தவகை கொசுக்கள் பகல் வேளைகளில் மனிதர்களை கடிப்பதால், பகல் நேரத்தில் கொசுக்களை அண்டவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என பலரும் அறிவுரை கூறுவதுண்டு.

Advertisement

உலகம் முழுவதிலும் ஆண்டிற்கு சுமார் 6 கோடி பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். தீவிர டெங்கு காய்ச்சல் பாதிப்பால் மரணம் நிகழ்வதும் உண்டு. இந்தியா மட்டுமின்றி ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதி உள்ளிட்ட பல பகுதிகளில் காணப்படுகிறது.

தற்பொழுது டெங்கு காய்ச்சல் பாதிப்பு தமிழகம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் உருவாகி வருகிறது. தெலங்கானா மாநிலத்தின் ஐதராபாத் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் 100 பேர் டெங்கு அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். தமிழகத்தில் சென்னையில் உள்ள மருத்துவமனையில் 14 பேர் டெங்கு அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகளில் வெளியாகி இருக்கிறது.

டெங்கு அறிகுறி :

 • 3 முதல் 7 நாள் வரையிலான காய்ச்சல்
 • தொடர் தலைவலி மற்றும் கண் வலி
 • தசை மற்றும் இணைப்புகளில் வலி
 • பசியின்மை
 • வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு
 • தோலில் வெடிப்பு( சிவப்பு நிறத்தில்)
 • மூக்கு மற்றும் ஈறுகளில் ரத்தப்போக்கு

முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை:

 • நாம் இருக்கும் பகுதியின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருத்தல் அவசியம்.
 • டயர்கள், ட்ரெம்கள் உள்ளிட்ட மழை நீர் தேங்கும் பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும்.

Advertisement
 • பகல் நேரங்களில் கொசுக்கள் அண்டாமல் இருக்க பார்த்திருத்தல் அவசியம்.
 • டெங்கு காய்ச்சலுக்கு மருந்துகள் இல்லையென்றாலும் காய்ச்சலை குறைக்க மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.
 • வைரஸ் பாதித்த நபரிடம் இருந்து நோய் பரவாமல் பார்த்திருத்தல் அவசியம்.
 • நிலவேம்பு கசாயம் உள்ளிட்ட இயற்கை மருந்துகளை அருந்துவதும் பயனளிக்கும்.

உடலில் காய்ச்சல் அறிகுறி தெரிந்தவுடன் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். மருத்துவரால் மட்டுமே சரியான மருத்துவ பரிசோதனைகளை செய்து உங்களுக்கு ஏற்பட்டு இருக்கும் காய்ச்சல் ஆனது ” டெங்குவா ” அல்லது “ பிற காய்ச்சலா ” என்பதை கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்க முடியும்.

டெங்கு அறிகுறிகள் உள்ளதா என்பதை சுய சோதனை செய்து கொள்வதும், அதைவிட நம் பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்ள முயற்சிப்பது மிக அவசியம். முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு மூலம் டெங்கு வைரஸ் பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும். சுற்றுப்புறச்சூழலை தூய்மையாக வைத்திருத்தல் மற்றும் சுகாதாரமாக இருந்தல் போன்றவற்றால் வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாக்கலாம்.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button