டென்மார்க் பொருளாதாரம் கால்நடைகளை மட்டுமே நம்பி உள்ளதா ?

டென்மார்க்கில் மொத்தம் உள்ள 61 உற்பத்தி ஆலைகளில் இருந்து 4.7 பில்லியன் கிலோ பாலை பதப்படுத்துகிறார்கள். அதில் அர்லா ஃபுட்ஸ் எனும் பெருநிறுவனம் மற்றும் 30 சிறிய பால் நிறுவனங்கள் உள்ளடங்கி உள்ளன. அர்லா நிறுவனம் மட்டுமே 90 சதவீதத்திற்கும் அதிகமான டென்மார்க்கின் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் தேவையைப் பூர்த்தி செய்கிற அளவிற்கு மிகப்பெரிய வணிக நிறுவனமாக உள்ளது.

Advertisement

டேனிஷ் பால் ஏற்றுமதியின் மதிப்பு ஆண்டுக்கு 1.8 பில்லியன் யூரோ ஆகும். உள்நாட்டு சந்தை என்பது பெரிய அளவில் உள்நாட்டு பால் உற்பத்திக்கான சந்தையாகும்.

டென்மார்க் அரசு 2014 ஆம் ஆண்டு வெளியிட்ட ஆவணத்தின் படி ( Legislative Council Secretariat FSC46/13-14)  56.3 லட்சம் மக்கள் தொகை தொகை கொண்ட அந்நாட்டில் 4.3 மில்லியன் ஹெக்டேர் விவசாய நிலங்கள் உள்ளன. இதில் சுமார் 62% விவசாய நோக்கங்களுக்காக பயிரிடப்பட்டுள்ளது. தற்போது, டேனிஷ் விவசாயத்துறையில் சுமார் 1,30,000 பேரும், அவர்களில் 73,000 பேர் விவசாயத்திலும், 58,000 உணவு உற்பத்தி துறையிலும்  உள்ளனர்.

Factsheet Denmark January 2008

டென்மார்க்கில் 30 மில்லியன் மக்களுக்கு (அதன் மக்கள் தொகை ஆறு மடங்கு) உணவளிக்க போதுமான உணவை உற்பத்தி செய்ய முடியும் மற்றும் தற்போது விவசாய மற்றும் வேளாண் உணவு பொருட்களின் ஆண்டு ஏற்றுமதி டேனிஷ் மொத்த ஆண்டு ஏற்றுமதியில் சுமார் 20% ஆகும்.

Economy sectors - Denmark

டென்மார்க்கின் முக்கிய ஏற்றுமதிகள் :

Advertisement

தொழில்துறை உற்பத்தி 73.3% (அவற்றில் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் 21.4%, மற்றும் எரிபொருள்கள், ரசாயனங்கள் போன்றவை 26%), விவசாய பொருட்கள் மற்றும் மற்றவர்கள் நுகர்வுக்கு 18.7% (2009-ல் இறைச்சி மற்றும் இறைச்சி பொருட்கள் மொத்த ஏற்றுமதியில் 5.5%; மீன் மற்றும் மீன் பொருட்கள் 2.9%). டென்மார்க் உணவு துறையில் மட்டுமின்றி எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஏற்றுமதியிலும், சுற்றுலா, போக்குவரத்து துறையின் வாயிலாக அதிக வருவாய் ஈட்டுகின்றது.

விவசாயத்துறையானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில்(ஜிடிபி) 1.4% மட்டுமே உள்ளது (உலக வங்கி, 2019). மக்கள்தொகையில் 18% பேரைக் கொண்ட தொழிற்துறையானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20.9% பங்களிக்கின்றன.

சேவைத் துறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட முக்கால்வாசி (64.9%) பங்களிப்பு செய்கிறது மற்றும் மக்கள்தொகையில் மிகப்பெரிய பங்கை (80%) பயன்படுத்துகிறது. டென்மார்க் ஒரு வலுவான வங்கித் துறையைக் கொண்டுள்ளது. உள்நாட்டு வங்கிகள் மொத்த சொத்துக்களில் 85% க்கும் அதிகமாக உள்ளன. அதில், மூன்று வங்கிகள் மொத்த சொத்துக்களில் 50% ஐ கட்டுப்படுத்துகின்றன.

Breakdown of Economic Activity By Sector Agriculture Industry Services
Employment By Sector (in % of Total Employment) 2.1 18.3 79.6
Value Added (in % of GDP) 1.4 20.9 64.9
Value Added (Annual % Change) 15.8 2.0 2.3

டென்மார்க்கில் வாழும் மக்கள் உலகிலேயே அதிக அளவிலான வரியைச் செலுத்துகிறார்கள் – அவர்களின் வருமானத்தில் பாதி வரை. இதற்கு மேல், பெரும்பாலான பொருட்களுக்கு 25% மதிப்பு கூட்டப்பட்ட வரியையும், புதிய கார்களுக்கு 150% வரை வரியையும் செலுத்துகிறார்.

Taxation In Denmark - Denmark Tax Rate | Sawamia Denis.

டென்மார்க்கில் பெரும்பாலான சுகாதார பராமரிப்பு நோயாளிக்கு எந்த கட்டணமும் இன்றி வழங்கப்படுகிறது. பல்கலைக்கழக மாணவர்கள் எந்தவொரு கல்விக் கட்டணத்தையும் செலுத்த தேவையில்லை மற்றும் படிக்கும்போது செலவுகளை ஈடுகட்ட மானியத்தைப் பெறுகிறார்கள். குழந்தைகளுக்கு பராமரிப்பு மானியம், வயதானவர்கள் ஓய்வூதியத்தைப் பெறுகிறார்கள். மேலும் அவர்களின் வீட்டிற்குச் செல்லும் பராமரிப்பு உதவியாளர்களும் வழங்கப்படுகிறார்கள்.

டென்மார்க்கில் கால்நடை சார்ந்த பொருட்கள் மற்றும் விவசாய உணவு பொருட்களிலிருந்து வரும் வருவாய் அந்த நாட்டின் வருவாயில் 20% என்றாலும் பசுக்களை மட்டுமே வைத்து அவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்ததாக கூறுவது சரியான கூற்று அல்ல. கால்நடைகளை பொருளாதார வளர்ச்சியில் ஒரு பகுதி அங்கமாக டேனிஸ் மக்கள் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Proof links:

https://www.legco.gov.hk/research-publications/english/1314fsc46-food-processing-industry-in-denmark-20140902-e.pdf

https://agricultureandfood.dk/danish-agriculture-and-food/danish-dairy-industry

https://www.globaltenders.com/economy-of-denmark.php/

https://www.nordeatrade.com/dk/explore-new-market/denmark/economical-context

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button