மாற்றுத்திறனாளிகளை பணியில் அமர்த்தும் ஸ்விக்கி, சோமேடோ| வைரல் புகைப்படங்கள்.

மக்கள் இருக்கும் இடங்களுக்கே உணவுகளை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து உண்ணும் பழக்கத்திற்கு பெரிதும் மாறி வருகின்றனர். பெருநகரங்களில் எங்கு பார்த்தாலும் ஸ்விக்கி, சோமாடோ, உபேர் ஈட்ஸ் உள்ளிட்ட ஆன்லைன் உணவு டெலிவரி செய்பவர்களை வாகனங்களில் அதிகம் பார்க்கலாம்.

Advertisement

ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் மீது சர்ச்சைகளும், பாராட்டுக்களும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்று இருக்கும். இருப்பினும், ஆன்லைன் மூலம் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தின் மூலம் பணியமர்த்தப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதை வீதிகளில் செல்லும் உணவு டெலிவரி செய்பவர்களை காணும் பொழுதே புரிந்து கொள்ள முடிகிறது.

இதற்கிடையில், ஸ்விக்கி, சோமேடோ உள்ளிட்ட நிறுவனங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலைவாய்ப்பை அளித்து உள்ளதாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ட்விட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

ஐஏஎஸ் அதிகாரியான பிரியங்கா சுக்லா என்பவர் செப்டம்பர் 16-ம் தேதி தன் ட்விட்டர் பக்கத்தில், ஸ்விக்கி நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்ய மூன்று சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் ஒருவரின் புகைப்படத்தை வெளியிட்டு தனது கருத்தினை தெரிவித்து இருந்தார்.

Advertisement

பிரியங்காவின் ட்விட்டர் பதிவிற்கு பதில் அளித்த ஸ்விக்கி, ” அனைத்து சூப்பர் ஹீரோக்களும் மாற்றுத்திறன் கொண்டவர்கள். மாற்றுத்திறனாளிகள் அனைவரும் சூப்பர் ஹீரோக்கள். அந்த குறிப்பில், நாங்கள் அவர்களை எங்கள் சூப்பர் திறன் உடைய பாட்னர்கள் என்று அழைக்க விரும்புகிறோம். அவர்கள் நம்மிடையே இருப்பதை நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம் ” எனப் பதிவிட்டு உள்ளனர்.

இதற்கு முன்பாக, மே 2019-ல் honey goyal என்பவர் சோமேடோ நிறுவனத்தின் டிஷர்ட் மற்றும் உணவு டெலிவரி செய்யும் பேக் உடன் மூன்று சக்கர வாகனத்தில் செல்லும் ஒருவரின் வீடியோவை பதிவிட்டு இருந்தார்.

மே 2019-ல் வெளியான செய்தியில் சோமேடோ நிறுவனத்தின் ராமு சாஹு எனும் மாற்றுத்திறனாளி ஊழியருக்கு மூன்று சக்கர எலெட்ரிக் வாகனம் அளிக்கப்பட்டு இருப்பதாக புகைப்படத்துடன் வெளியிட்டு இருந்தனர்.

மாற்றுத்திறனாளி இளைஞர்களும் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் பணிகளை செய்யத் துவங்கி இருப்பது அனைவரையும் பெருமைப்பட வைத்திருக்கிறது. அவர்களுக்கு பணி வழங்கியவர்களுக்கு பாராட்டுக்களை பலரும் தெரிவித்து வருகின்றனர்.

Links :

Remember the Differently Abled Delivery Guy? Zomato Just Gifted him an Electric Vehicle

https://web.archive.org/web/20190920112128/https://twitter.com/SwiggyCares/status/1173636610673430529?s=08

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button