ஹிந்துத்துவாவை பரப்ப ஒப்புக்கொண்ட தினமலர் ?

Cobrapost நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் தமிழ்நாட்டின் தினமலர் பத்திரிகையின் தொழில் மற்றும் தொழில்நுட்ப இயக்குனர் லட்சுமிபதி ஆதிமூலம் என்பவரிடம் நடந்த உரையாடல். Cobrapost-ல் வெளியான பதிவில் Cobrapost-ன் ரிப்போர்ட்டர், தினமலரின் national sales and Marketing Head மார்ட்டின் கிங் மற்றும் ஆதிமூலம் பேசியதின் தமிழாக்கம் மட்டுமே இது.
ரிப்போர்ட்டர் (Cobrapost)- நவம்பர் டிசம்பர் க்கு முன்பு இந்த பிரச்சாரத்தில் மூன்று அடுக்குகள் இருந்தன. 1. பகவத்கீதையில் உள்ள கிருஷ்ணரின் உபதேசமான ஹிந்துத்வாவைப் பற்றியது, 2. என் அரசியல் எதிரியான பப்புவை வீழ்த்துவது பற்றி. பப்புவைப் பற்றி தெளிவாக இருக்கின்றீர்கள் என்று நினைக்கிறேன்?
மார்ட்டின் ( dinamalar) – இல்லை
மூன்றாம் நபர் – ராகுல் காந்தியை தான் பப்பு என்று சொல்கிறார்கள்.
மார்ட்டின் – சரி
ரிப்போர்ட்டர் – நாங்கள் நேரடியாக அவரது பெயரைச் சொல்லி அவமானப்படுத்துவதில்லை அதனால் பப்பு, சிண்டு, பபுலு போன்ற பெயர்களால் குறிப்பிடுகிறோம். ஏனெனில் பப்பு என்ற பெயரை நிலைநிறுத்தி அவரது பெயரைக் கெடுப்பதற்காக நாங்கள் ஒரு அமைப்பாக நிறைய வியர்வை மற்றும் அறிவை முதலீடு செய்துள்ளோம். இப்பொழுது மக்கள் அவரை பப்பு என்றே குறிப்பிடுகின்றனர். இன்னும் அதிகமாக இது மக்கள் மனதில் பதிய நாங்கள் அவரை பப்பு என்றே தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறோம். அவர்களின் பெயர் புகழைக் கெடுக்கவே நாங்கள் பப்பு, புவா, பபுவா போன்ற பெயர்களை உபயோகிக்கின்றோம். மாயாவதி அவர்களை புவா என்றும், அகிலேஷ் அவர்களை பபுவா என்றும் குறிப்பிடுகின்றோம். அவர்களே ஒருவரை ஒருவர் இவ்வாறு தான் அழைக்கின்றனர். அதனால் எங்களது அரசியல் அறிவைக் கொண்டு அவர்களது பெயரிற்கு களங்கம் ஏற்படுத்த அதே பெயர்களை நாங்களும் பயன்படுத்துகிறோம். இதனால் எங்களுக்கு அரசியல் லாபம் கிடைக்கிறது. பப்பு, புவா, பபுவா போன்ற பெயர்கள் நகைச்சுவைக்காக மட்டுமே உபயோகப்படுத்தப்படுகிறது யாரையும் புண்படுத்துவதற்காக இல்லை. தேர்தல் ஆணையத்தில் இதைப் பற்றி ஏதேனும் அறிவிப்பு அல்லது ஏதேனும் எதிர்ப்பு வந்தால் நாங்கள் இதை நிறுத்திக்கொள்வோம். நாங்கள் சட்டத்தை மதிக்கத் தெரிந்தவர்கள். ஆனால் அறிவிப்பு வரும்வரை இதுபோலவே செயல்படுவோம்.
மூன்றாம் நபர் – ஒன்று பப்பு, இரண்டாவது புவா, மூன்றாவது??
ரிப்போர்ட்டர் – பபுவா
மூன்றாம் நபர் – இது பிரச்சாரம் அடுத்த ஐந்து மாதகாலம்??
ரிப்போர்ட்டர் – ஆம்
மார்ட்டின் – இதற்கு எங்களுக்கு எடிட்டர்கள் மற்றும் தலைமை அனுமதி வேண்டும்.
ஆதிமூலம் (தினமலர்) – மார்ட்டின் உடனான உங்களது சந்திப்பை அவர் கூறியிருந்தார். நீங்கள் சிறிது இடம் கேட்கிறீர்கள். அதில் எந்த பிரச்சனையும் இல்லை, நாங்கள் நிறைய கொடுத்துள்ளோம். பிஜேபி உடைய அதே எண்ணங்களுடன் நாங்களும் பயணிக்கின்றோம். எங்களது குடும்பம் ஒரு ஹிந்து, நாங்கள் ஹிந்து ஆன்மீகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். நாங்கள் RSS இல் வலுவாக இருந்தோம். ஆனால் செய்தித்தாள் நேரடியாக, நியாயமாக இருக்கும். நாங்கள் எந்த அரசிற்கும் அடிபணிந்ததில்லை. எங்களுக்கு கடந்த 35 வருடமாக எந்த அரசு விளம்பரங்களும் வந்ததில்லை. 6 மாதத்திற்கு முன்பு கோர்ட்டிற்கு சென்ற பிறகு கிடைத்தது. 35 வருடங்களாக எந்த அரசும் எங்களிடம் விளம்பரம் செய்ய விரும்பவில்லை. நாங்கள் என்ன தோன்றுகிறதோ அதை எழுதுவோம். நாங்கள் எந்த அரசைப் பற்றியும் கவலைப்பட மாட்டோம். அதனால் தான் மத்திய அரசு எங்களிடம் நெருக்கமாக உள்ளது. என் தந்தை தான் பத்திரிகையின் வெளியீட்டாளர். அவர் கடந்த சில வருடங்களாக PTI சேர்மேனாக இருந்தார். இப்பொழுது PTI ட்ரிஸ்ட்டி ஆக உள்ளார். அவர் கடந்த 30 வருடங்களாக PTI உடன் உள்ளார். அது ஒரு இந்திய பத்திரிகை சமூகம். 800 பத்திரிகைககள்…
ரிப்போர்ட்டர் – ரபி மார்க், டெல்லி
ஆதிமூலம் – ரபி மார்க், டெல்லி. நான் INS நிர்வாக குழுவில் உள்ளேன். என் தந்தை இருமுறை INS சேர்மேன் ஆக இருந்துள்ளார். அதனால் மத்திய அரசிற்கு நாங்கள் நிறைய செய்யதுள்ளோம். நீண்ட காலத்திற்கு பிறகு நமக்கு ஒரு நேர்மையான அரசு கிடைத்துள்ளது. தேர்தலிற்காக அரசாங்கம் நடத்தாத ஒரு அரசு.
ரிப்போர்ட்டர் – சரி
ஆதிமூலம் – இந்த நாட்டை சரி செய்யும் ஒரு அரசு
ரிப்போர்ட்டர் – சுத்தம் செய்தல்.
ஆதிமூலம் – கடந்த 65 வருடங்களாக இருந்த மாநில, அதிகாரத்துவம் மற்றும் அமைப்பை சரி செய்ய குறைந்தது 20 வருடங்களாவது ஆகும்.
ரிப்போர்ட்டர் – சரியாக
ஆதிமூலம் – (டெல்லி இல் அவர் பதவி ஏற்றபோது நாம் போட்ட புகைப்படத்தை எடுத்து வா). நாங்கள் பிரதமரை இருமுறை தேர்தலிற்கு முன்பு சந்தித்துள்ளோம். எங்களை அழைத்திருந்தார். வேறு சில பத்திரிகைகளையும் அழைத்திருந்தார். அப்பொழுது டெல்லியில் சந்தித்துள்ளோம். அவர் தென்னிந்திய பிரச்சாரத்திற்காக வந்தபொழுது கோவையில் ஒரு நாள் தங்கியிருந்தார். அவர் காலை ஒருமணிநேரம் இருக்க வேண்டியிருந்தது. அந்த ஒருமணிநேரத்தில் எங்களுக்கு 45 நிமிடங்கள் கொடுத்திருந்தார். எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் அவரை சந்தித்தோம். டெல்லியில் ஒருமுறை சந்தித்துள்ளோம். எந்த தனிப்பட்ட விஷயத்திற்காகவும் அந்த சந்திப்பு இல்லை. எங்கள் ஆதரவை வெளிப்படுத்தும் சந்திப்பாக அது இருந்தது. கட்கரி அவர்கள் எனது தந்தையின் தோழன்.
ரிப்போர்ட்டர் – அந்த அமைப்பை பற்றி…
ஆதிமூலம் – எப்பொழுது அவர் தமிழ்நாடு வந்தாலும் மதியம் அல்லது இரவு உணவு எங்களுடனாக இருக்கும். என் தந்தை ஒரு மாதத்திற்கு ஒருமுறையாவது டெல்லி சென்று வருவார்.
ஆதிமூலம் – நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அதை…
ரிப்போர்ட்டர் – இப்பொழுது நீங்கள் எனது குடும்பம் போல் என்னால் நினைக்கமுடிகிறது. அதனால் சரி
ஆதிமூலம் – நானும் திட்டமிட்டிருக்கிறேன், ஒரு புதிய சாப்ட்வேர் திட்டம் உள்ளது. அதற்கான அனைத்து உரிமத்தையும் பெற்றுள்ளோம். அந்த சாப்ட்வேரை உபயோகித்து ஒரு டிஜிட்டல் உரையை வீடியோவாக மாற்றமுடியும். நான் உங்களுக்கு காண்பிக்கிறேன். (குமார் இருக்காரா என்று பாருங்கள்). எங்களிடம் லோக்மாட் மற்றும் பிஜேபி க்கு சில இருக்கின்றது.
ரிப்போர்ட்டர் – பிரச்சாரம்…
ஆதிமூலம் – பிரச்சாரத்திற்காக. உதாரணத்திற்கு உங்களிடம் செய்தி உள்ளது.
ரிப்போர்ட்டர் – சரி
ஆதிமூலம் – அதை சிற்றேடு மற்றும் துண்டு பிரச்சாரத்தில் கட்சியில் உள்ளவர்களுக்கு கொடுப்பீர்கள். இப்பொழுது அதில் மோடி அவர்களின் புகைப்படம் இருந்தால் உங்கள் போனில் உள்ள கேமராவில் அந்த புகைப்படத்தை பார்த்தால் உங்களுக்கு அவருடைய ஒலிப்பதிவு கேட்கும்.
ரிப்போர்ட்டர் – ஹிந்துத்வ என்னுடைய ஒரு விஷயம். முதல் நான்கு மாதத்தில் நான் உங்களிடம் சொல்லியுள்ளேன். பகவத்கீதையில் கிருஷ்ணரின் பிரச்சாரங்களை. அதுபோல் இவர்களாவது ஒரு சுற்றுப்புறத்தை, ஹிந்துத்வ அதிர்வுகளை நமக்கு உருவாக்கித்தருகிறார்கள். மக்களுக்கு இதை கொண்டுசேர்த்து ஹிந்துத்வாவை செயலாற்றத்தூண்டும் நடவடிக்கைககளை நாம் ஏற்பாடு செய்யலாம். அதையே நாம் அடுத்த 5 அல்லது 6 மாதத்தில் செயல்படுத்தலாம்.
ஆதிமூலம் – எதுவாக இருந்தாலும் எனக்கு தெரியப்படுத்துங்கள்.
ரிப்போர்ட்டர் – மார்ட்டின் அவர்களே, எங்களுக்கு அனைத்து தகவல்களையும் மற்றும் வங்கி விவரங்களையும் கொடுங்கள். நாம் உடனடியாக செயல்படலாம்.
ஆதிமூலம் – நாங்கள் சிறந்த முறையில் செய்துகொடுக்கின்றோம். மற்றவை நீங்கள் உறுதி செய்துகொள்ளலாம்.
ரிப்போர்ட்டர் – உங்கள் ஆசிர்வாதம் என்றும் எங்களுக்கு உண்டு.
ஆதிமூலம் – எங்களுடைய நம்பிக்கை நாட்டின் வளர்ச்சி. நாடு வளர்ந்தால் நான், இவர் மற்றும் அனைவரும் வளருவர்.
ரிப்போர்ட்டர் – ஆம். அனைத்து குடும்பங்களும் வளரும்.
( பின் குறிப்பு : இந்த கட்டுரை Cobrapost பதிவின் தமிழ் மொழியாக்கம் மட்டுமே. தகவல்கள் அனைத்தும் அதிலிருந்தே எடுக்கப்பட்டன. தனிப்பட்ட முறையில் எந்த விமர்சனமும் வைக்கப்படவில்லை. )
courtesy: Cobrapost
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.