வைரலாகும் தினமலர் பத்திரிக்கையின் தலைப்பு செய்தி | எடிட்டிங் செய்ததா ?

தினமலர் செய்தித்தாளின் தலைப்பு இரு நாட்களாக ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. தினமலர் நாளிதழின் தலைப்பு செய்தியில், “ சென்னையில் தண்ணீர் பஞ்சம், தினமலர் விற்பனை உயர்வு ” என வெளியாகியதாக ஃ பேஸ்புக்கில் பதிவிடப்பட்டது.
” சென்னையில் தண்ணீர் பஞ்சம், தினமலர் விற்பனை உயர்வு ” என இடம்பெற்றதால், தண்ணீர் பஞ்சம் இருக்கும் நேரத்தில் சரியான தலைப்பு என நென்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர். மேலும், அந்த செய்தியை வைத்து மீம்கள் பதிவிட்டு வைரலாக்கிக் கொண்டிருக்கிறனர்.
ஆனால், தினமலர் செய்தித்தாளில் அப்படியொரு தலைப்பு இடம்பெறவில்லை. வைரலாகும் தினமலர் செய்தித்தாள் ஜூன் 15-ம் தேதி பிரதியாகும். மேலும், அவை புதுச்சேரியில் வெளியாகியது என மேலே குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜூன் 15-ம் தேதி புதுச்சேரி தினமலர் செய்தித்தாளின் இ-பேப்பரை எடுத்துக் பார்க்கையில் தலைப்பு செய்தியில், ” தாகமெடுக்குது ; தண்ணி இல்லையே ! ” என்றே இடம்பெற்றுள்ளது. அதனை எடிட்டிங் செய்து ” சென்னையில் தண்ணீர் பஞ்சம், தினமலர் விற்பனை உயர்வு ‘ என கேலி வார்த்தைகளை சேர்த்துள்ளனர்.
ஜூன் 15-ம் தேதி வெளியான தினமலரின் சென்னை பிரதியிலும் ” தாகமெடுக்குது ; தண்ணி இல்லையே ! ” என்ற தலைப்பே வெளியாகி இருந்தது.
சென்னையில் தண்ணீர் பஞ்சம் உருவாகி உள்ள நிலையில் தினமலர் செய்தித்தாளை எடிட்டிங் செய்து கேலி பதிவை வெளியிட்டு உள்ளனர். அவை தற்பொழுது சமூக வலைதளங்களில் அதிகளவில் பரவி வருகிறது.
தினமலர் செய்தித்தாளில் வெளியாகும் தலைப்புகள் கிண்டல் செய்யும் விதத்திலும், சர்ச்சையாவும் இருப்பதால், இந்த எடிட்டிங் செய்தியை பலரும் உண்மை என நினைத்து வருகின்றனர்.
proof :