பாலியல் வன்கொடுமையை “கசமுசா” என வெளியிட்ட தினமலர் நாளிதழ்.. எழும் கண்டனங்கள் !

ஏப்ரல் 6-ம் தேதி தினமலர் நாளிதழ் வெளியிட்ட போஸ்டரில், 13 மாணவியரிடம் “கசமுசா”, தலைமை ஆசிரியருக்கு “தூக்கு” என செய்தியை வெளியிட்டு இருந்தது. மாணவிகளுக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமையை “கசமுசா” எனும் வார்த்தையால் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டதால் தினமலர் கடும் கண்டனத்தைப் பெற்று வருகிறது.
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா நகரில் உள்ள உறைவிட பள்ளி ஒன்றில் படிக்கும் பல மாணவிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் ஹெர்ரி விராவன் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது.
கடந்த ஆண்டு பாதிக்கப்பட்ட மாணவி வீட்டிற்கு சென்ற போதே இந்த விசயம் வெளியே தெரிய வந்து போலீசார் விசாரித்து வந்தனர். பல மாணவியர்களை பாலியல் பலாத்காரம் செய்த தலைமை ஆசிரியருக்கு கடந்த ஆண்டே ஆயுள் தண்டனையை விதித்தது நீதிமன்றம். எனினும், அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தலைமை ஆசிரியருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
13 மாணவியரிடம் கசமுசா
தலைமை ஆசிரியருக்கு தூக்கு
இப்படி எழுதியிருக்கிறது “தினமலர்”.
குழந்தைகள் மீதான வன்முறைக்கு கசமுசா என பெயர் கொடுப்பது எந்த வகை இதழியல்?
தான் சார்ந்த குழந்தையும் அதில் ஒன்றென்றாலும் கசமுசா என பயன்படுத்துவார்களா? #StopViolenceAgainstChildren
— Manoj Prabakar S (@imanojprabakar) April 6, 2022
பள்ளி சிறுமியர்க்கு எதிரான பாலியல் வன்முறையை “கசமுசா” ணு எழுத இந்த கேடுகெட்ட தினமலத்தினால மட்டும் தான் முடியும் 🤦♀️🤦♀️🤦♀️ pic.twitter.com/OCLTiqDliJ
— Janani 🦋🦋 (@Janani_GR_) April 6, 2022
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை தினமலர் நாளிதழில் “கசமுசா ” எனக் குறிப்பிட்டதற்கு சமூக வலைதளங்களில் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.