ஸ்டாலின் தடை என தினமலர் செய்தி.. திமுகவினர் யாரும் “GoBackModi” சொல்லவில்லையா ?

பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு வரும் போதெல்லாம் “GoBackModi” என ட்விட்டரில் ட்ரெண்ட் செய்வது வழக்கமான ஒன்றாக மாறி விட்டது. இதற்கு எதிராக பாஜகவினரும் மோடியை வரவேற்கும் வகையில் வாழ்க மோடி, வெல்கம் மோடி என ட்விட்டரில் ட்ரெண்ட் செய்துவதுண்டு.
ஆனால், தற்போது திமுக ஆட்சி நடைபெற்று வருவதால் புதிய திட்டங்களை தொடங்கி வைக்க தமிழ்நாட்டிற்கு வரும் மோடிக்கு எதிராக சமூக வலைதளங்களில் விமர்சிப்பதை தவிர்க்கும்படியும், அதற்கு தடையையும் விதித்து மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டு இருந்தது.
அதிலும், தலைப்பில் ” மோடியை விமர்சிக்க ஸ்டாலின் தடை ” என வைத்து விட்டு செய்தியின் உள்ளே ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது என உறுதித்தன்மை இல்லாமல் வெளியிட்டு உள்ளனர்.
ஆனால், தினமலர் நாளிதழ் செய்தியில் வெளியானது போல் இல்லாமல், திமுக கட்சியைச் சேர்ந்தவர்களும், ஆதரவாளர்களும் “GoBackModi” என ட்விட்டரில் பதிவிட்டு உள்ளனர். இன்றும் ட்விட்டர் உள்ளிடவையில் “GoBackModi” ட்ரெண்ட் ஆகி வருகிறது.
என்ன அண்ணாமலை sir..#GoBack_Modi #GoBackModi
Trending ஆக கூடாதுனு பல கோடி செலவு செய்து விளம்பரம் செய்ரீங்களாமே!!!
மெய்யாலுமா??
— Rajiv Gandhi (@rajiv_dmk) May 26, 2022
திமுகவின் செய்தித் தொடர்பு இணை செயலாளர் ராஜீவ் காந்தி தன் ட்விட்டர் பக்கத்தில், “GoBackModi” என ஹாஷ்டாக் பயன்படுத்தி ட்வீட் பதிவிட்டு இருக்கிறார். அதை மன்னார்குடி எம்எல்ஏவும், திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் செயலருமான டி.ஆர்.பி.ராஜா ரீட்வீட் செய்து இருக்கிறார்.
As Always #GoBackModi pic.twitter.com/jdO4L32t5t
— Varan Kandasamy (@ragu251988) May 26, 2022
I love Tamil twitter and our unity … You guys are rocking😍😍💪#GoBackModi#GoBack_Modi #GoBackFacistModi
— Surya Born To Win (@Surya_BornToWin) May 26, 2022
#GoBackModi
Very simple!!!! pic.twitter.com/vLVWhAyRQP— திலக் நடராஜன் (@RombaNallavan16) May 25, 2022
எலேய் @dinamalarweb நேத்து என்னமோ திமுகவினர் டேக் போடவேணாம்னு தலைமை உத்தரவுன்னுலாம் அடிச்சி விட்டுப் பாத்தியே.. இப்ப பாத்தியா உலகளவில் டிரெண்ட் ஆக வச்சிட்டாங்க.😂😂
இது திமுக மட்டுமில்லடா ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனதின் வெளிப்பாடு.
ஓங்கிச் சொல்வோம் #GoBackModi #GoBack_Modi pic.twitter.com/9eY1GJ6aLI
— பரம்பொருள் (@paramporul) May 26, 2022
பேஸ்புக்ல உருட்டிட்டு இருந்த என்னை டிவிட்டர்ல அக்கவுன்ட் திறக்க வைத்ததே நம்ம மோடிதான் நன்றி ஜி 🙏#GoBackModi
— ராஜலிங்கம் திமுக (@rajlingam78) May 26, 2022
திமுக ஆட்சியில் இருப்பதால் அமைச்சர் பொறுப்பில் இருப்பவர்கள் பிரதமரை வரவேற்க சென்றுள்ளனர். இருப்பினும், திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்தவர்கள், ஆதரவாளர்கள் பலரும் ட்விட்டர் பக்கத்தில் “GoBackModi” என ஹாஷ்டாக் பயன்படுத்தி ட்வீட் பதிவிட்டு வருகிறார்கள்.