ஸ்டாலின் தடை என தினமலர் செய்தி.. திமுகவினர் யாரும் “GoBackModi” சொல்லவில்லையா ?

பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு வரும் போதெல்லாம் “GoBackModi” என ட்விட்டரில் ட்ரெண்ட் செய்வது வழக்கமான ஒன்றாக மாறி விட்டது. இதற்கு எதிராக பாஜகவினரும் மோடியை வரவேற்கும் வகையில் வாழ்க மோடி, வெல்கம் மோடி என ட்விட்டரில் ட்ரெண்ட் செய்துவதுண்டு.

ஆனால், தற்போது திமுக ஆட்சி நடைபெற்று வருவதால் புதிய திட்டங்களை தொடங்கி வைக்க தமிழ்நாட்டிற்கு வரும் மோடிக்கு எதிராக சமூக வலைதளங்களில் விமர்சிப்பதை தவிர்க்கும்படியும், அதற்கு தடையையும் விதித்து மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டு இருந்தது.

அதிலும், தலைப்பில் ” மோடியை விமர்சிக்க ஸ்டாலின் தடை ” என வைத்து விட்டு செய்தியின் உள்ளே ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது என உறுதித்தன்மை இல்லாமல் வெளியிட்டு உள்ளனர்.

ஆனால், தினமலர் நாளிதழ் செய்தியில் வெளியானது போல் இல்லாமல், திமுக கட்சியைச் சேர்ந்தவர்களும், ஆதரவாளர்களும் “GoBackModi” என ட்விட்டரில் பதிவிட்டு உள்ளனர். இன்றும் ட்விட்டர் உள்ளிடவையில் “GoBackModi” ட்ரெண்ட் ஆகி வருகிறது.

திமுகவின் செய்தித் தொடர்பு இணை செயலாளர் ராஜீவ் காந்தி தன் ட்விட்டர் பக்கத்தில், “GoBackModi” என ஹாஷ்டாக் பயன்படுத்தி ட்வீட் பதிவிட்டு இருக்கிறார். அதை மன்னார்குடி எம்எல்ஏவும், திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் செயலருமான டி.ஆர்.பி.ராஜா ரீட்வீட் செய்து இருக்கிறார்.

திமுக ஆட்சியில் இருப்பதால் அமைச்சர் பொறுப்பில் இருப்பவர்கள் பிரதமரை வரவேற்க சென்றுள்ளனர். இருப்பினும், திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்தவர்கள், ஆதரவாளர்கள் பலரும் ட்விட்டர் பக்கத்தில் “GoBackModi” என ஹாஷ்டாக் பயன்படுத்தி ட்வீட் பதிவிட்டு வருகிறார்கள்.

Please complete the required fields.




Back to top button
loader