செருப்பை தலையில் தூக்கி… லியோனியின் முழுமையான பேச்சு !

திமுக தலைமைக்கழக கொள்கைப் பரப்புச் செயலாளரும், தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழகத் தலைவருமான திண்டுக்கல் லியோனி, செருப்பைத் தலையில் தூக்கிக் கொன்டு இருந்த சமுதாயத்தை மேயராக்கியவர் முதல்வர் ஸ்டாலின் என சர்ச்சையாக பேசியதாக நியூஸ் 18 தமிழ் வெளியிட்ட செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட திண்டுக்கல் லியோனி பேசுகையில், ” இவ்வளவு நுட்பமாக ஒரு ஆள் சிந்திக்கிறார் என்றால், அந்த வண்டியில் இருப்பது யார் என்று கேட்க, தந்தை பெரியார் உட்கார்ந்து இருக்கிறார் என உதவியாளர் சொல்ல, அந்த கடைக்காரர் அந்த சர்பத் பெட்டியை தாவிக் குதித்து ஓடி வந்து, அந்த காரின் கதவை திறந்து பெரியாரின் காலை பிடித்து கதறுகிறான்.
ஐயா, ஒரு தெருவில் நடந்து போறப்ப, என் சட்டையை கழட்டி வைத்துக் கொண்டு நடந்து போவோம்யா, செருப்பை கழட்டி தலையில் வச்சுகிட்டே நடந்து போவோம்யா, பொது கிணற்றில் தண்ணீர் குடிக்க உரிமை இல்லையா, பள்ளிக்கூடத்தில் படிக்க எங்கள் பிள்ளைகளுக்கு உரிமை இல்லாத சமூதாயத்தில் பிறந்தவங்கயா, இன்னிக்கு பஸ் ஸ்டாண்டில் நான் கடை வச்சு பொழச்சுகிட்டு இருக்கேனா, அது ஐயா போட்ட பகுத்தறிவு சிந்தனையும், தன்மான சிந்தனையும்தான் என் தெய்வமே என கால பிடித்து கதறி இருக்கான்.
அந்த சமூதாயத்தை, சட்டையைக் கழட்டி அல்லையில் வச்சு நடந்து போன சமுதாயம், செருப்பை தூக்கி தலையில் வைத்துக் கொண்டு நடந்து போன சமுதாயத்தை இன்று வணக்கத்திற்குரிய மேயர் அவர்களே என்று சொல்ல வைத்த திராவிட மாடல், திராவிட புரட்சியை செய்தவர் தலைவர் ” எனப் பேசியுள்ளார்.
நியூஸ் 18 தமிழ் செய்தியில், திண்டுக்கல் லியோனின் முழுமையான பேச்சு இடம்பெறவில்லை.
திண்டுக்கல் லியோனின் முழுமையான பேச்சில் தொனி மாறுபாடு இருந்தபோதிலும், இவ்வாறான பேச்சுக்கள் தேவைதானா.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.