This article is from Mar 14, 2021

திமுக தேர்தல் அறிக்கை சிஏஏவை ஆதரிப்பதாக எழுந்த சர்ச்சை.. உடனே இணைக்கப்பட்ட புதிய வாக்குறுதிகள் !

2019-ம் ஆண்டு மத்திய பாரதிய ஜனதா அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தத்தை கொண்டு வந்து சட்டம் இயற்றியது. கடந்த ஆண்டு ஜனவரி மாதமே இச்சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால், சிஏஏ சட்டத்தில் ஏன் முஸ்லீம்கள் சேர்க்கப்படவில்லை என இந்திய அளவில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. பொதுமக்கள் தொடங்கி அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் இறங்கினர்.

அந்நேரத்தில், திமுக சிஏஏவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து இரு அவைகளிலும் சட்டத்திற்கு எதிராக வாக்களித்தது. திமுக தரப்பில் சிஏஏவிற்கு எதிராக கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டது. மேலும், இலங்கை அண்டை நாடு இல்லையா, ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை ஏன் வழங்கப்படவில்லை என மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.

இப்படி சிஏஏ-விற்கு எதிர் நிலைப்பாட்டில் இருந்த திமுகவின் 2021 தேர்தல் அறிக்கையின் 500வது அம்சத்தில், ” இந்தியக் குடியுரிமைத் திருத்த சட்டம் 2019-ல் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று நாடுகளுடன் நான்காவது நாடாக இலங்கையையும் இணைத்து, இந்திய முகாம்களில் உள்ள நாடற்ற இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கிட மத்திய அரசு வலியுறுத்தப்படும் ” எனக் கூறப்பட்டுள்ளது.

498-வது அம்சமும் இதுவாகவே இருந்தது. தாயகம் திரும்பிய ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட மத்திய அரசிற்கு வலியுறுத்தப்படும் என 15 மற்றும் 16வது அம்சங்களிலும் கூறப்பட்டுள்ளது.

Facebook link 

2019ம் ஆண்டிலேயே சிஏஏ சட்டத்தில் இந்திய முகாம்களில் உள்ள ஈழத் தமிழர்களையும் ஏன்  இணைக்கவில்லை என்கிற நிலைப்பாட்டில் திமுக இருந்தது. அதையே தங்களுடைய தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிட்டு இருக்கிறது. எனினும், இது சிஏஏவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை திமுக எடுத்து உள்ளதாக சமூக வலைதளங்களில் கண்டனப் பதிவுகளை பகிர்ந்தனர். சிஏஏவை திரும்ப பெறுவது தொடர்பாகவோ, சிஏஏவில் முஸ்லீம்களின் நிலை குறித்து எந்த அம்சமும் இல்லை எனத் தெரிவித்து இருந்தனர்.

இதற்கிடையில், குடியுரிமைத் திருத்த சட்டத்தையும் சேர்த்து புதிதாக 5 வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையில் சேர்த்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Archive link 

திமுக ஆட்சிக்கு வந்தால் காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்துக்கு அனுமதி அளிக்கப்படாது, சேலம் 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்பட மாட்டாது,  இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019ஐ திரும்ப பெற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும், மத்திய அரசு வெளியிட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை 2020  நிராகரிக்கப்படும் என புதிய வாக்குறுதிகளை இணைக்கப்பட்டு உள்ளது.

Links :

mk-stalin-clarified-in-video-why-dmk-opposed-citizenship-amendment-act

DMK 2021 Manifesto 

Please complete the required fields.




Back to top button
loader